Published: 01 செப் 2017

தங்க யானைகள்

விலங்குகள், இந்திய புராணங்கள் மற்றும் பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அனைத்து விலங்குகளிலும், பசுக்கள், எருதுகள், யானைகள், மற்றும் குதிரைகள் ஆகியவை இந்தியாவில் மிகவும் இராசியானவையாகக் கருதப்படுகிறது. மேலும், இந்துக் கோவில்களில் மற்றும் பிற மதம் சார்ந்த இடங்களில் விலங்குகளின் சித்திரங்கள் காணப்படுகின்றன. கடவுளர்களும் தேவியர்களும் தங்களது 'வாஹனாஸ்' (அதாவது வாகனங்கள்) என்று அழைக்கப்படும் இந்த விலங்குகளில் பயணித்ததாக நம்பப்படுகிறது.

இந்தியக் கோயில்களிலும் மற்றும் பிற புனித இடங்களிலும் இந்த விலங்குகள் வணங்கப்படுகின்றன, மேலும் அவை திருவிழாக்கள் மற்றும் பிற சமய நிகழ்வுகளின்போது தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுகின்றன. குறிப்பாக, யானைகள், தங்கம் மற்றும் இதர வண்ணமயமான நகை அலங்காரங்களால் அலங்கரிக்கப்படுகின்றன, மேலும் அவை தென்னிந்தியாவில் உள்ள பல கோயில்களின் பல்வேறு ஊர்வலங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. கேரளாவில் உள்ள பெரும்பாலான இந்துக் கோவில்கள், யானைகளை சொந்தமாக வைத்திருக்கின்றன.

கடவுளின் சொந்த நாடான கேரளாவில் உள்ள கோவில்களில், ஒவ்வொரு உள்ளூர் திருவிழாவிலும் தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள யானைகளைக் காணலாம். யானைகள் நகைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்படும் கேரளாவின் திருச்சூர் பூரம் திருவிழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்த விழாக்களில் ஒன்றாகும்.

யானைகளுக்கான நகைகள் மற்றும் அலங்காரங்களில் அடங்குபவை -

நெட்டிப்பட்டம்: இவை யானைகளின் பரந்த நெற்றியை மூடியிருக்கும் தங்க அணியாகும். நெட்டிப்பட்டம் என்பது இந்த அழகிய பாலூட்டியின் கம்பீரத் தோற்றத்தை அதிகரிக்கும் வகையிலான வடிவமைப்பு மற்றும் வடிவங்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தங்க அணியின் ஓரங்களானது வண்ணமயமான ஜடையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நெட்டிப்பட்டத்தின் மினியேச்சர் பிரதியானது ஒரு சுவரில் தொங்கும் பொருளாக மற்றும் ஒரு அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

மணிகள்: வண்ணமயமான கயிறு கொண்டு கட்டப்பட்ட மணிகளானது தங்கத்தால் செய்யப்படுகின்றன. கயிறானது யானையின் கழுத்துடன் சேர்த்து பிணைக்கப்பட்டுள்ளது.

நெக்லஸ்: யானைகளானது தங்கத்தால் மூடப்பட்டிருக்கும் கழுத்து- சங்கிலிகளால் அலங்கரிக்கப்படுகின்றன.

குடைகள்: தங்கத்தால் கட்டப்பட்ட வெல்வெட் குடைகளானது யானையின் பிரம்மாண்டமான மற்றும் கம்பீரமான தோற்றத்தை வெளிப்படுத்துகின்றன.

இந்த வகையான ஆபரணங்களை வழங்குவதில் வெங்கிடாத்ரி குடும்பத்தினர் முதன்மையானவர்கள் ஆகும். குடும்பத்தின் கடைசி மூன்று தலைமுறைகளும் இந்த இராசியான விலங்குக்கு ஆபரணங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன, மேலும் அவர்களால் படைக்கப்பட்டவை நூற்றைம்பது யானைகளுக்கு அலங்கரிக்கப்பட்டு புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில் காட்சிப்படுத்தப்படுகின்றன. நென்மாரா வல்லங்கி வேலா திருவிழாக்களில் வெங்கிடாத்ரியின் ஆபரணங்கள் காணப்படுகின்றன. வெங்கிடாத்ரி தவிர, பரமெக்காவு தேவசம், மரமிட்டாத்து பாலச்சந்திரன் (பாலன் மாஷு) ஆகியோர் மிக முக்கியமான சாமயம் (அலங்காரம்) விற்பனையாளர்கள் ஆகும்.