Published: 11 செப் 2017

முடிசூடும் தங்க ஆபரணங்கள்

இந்தியப் பெண்கள் ஆயுர்வேதத்தின் காரணமாக தங்கள் நீண்ட மற்றும் பளபளப்பான முடிக்காக புகழ்பெற்றவர்கள் ஆகும். பண்டைய காலங்களிலிருந்து, தங்களுடைய கொண்டையை அலங்கரிக்க தங்கம், மலர்கள் மற்றும் இலைகளால் செய்யப்பட்ட பல்வேறு ஆபரணங்களைப் பெண்கள் பயன்படுத்துகின்றனர். நவீன வடிவமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அல்லது சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்ற பாரம்பரியமான ஒன்றாக இருந்தாலும், முடிசூடும் ஆபரணங்கள் என்பது ஒவ்வொரு இந்தியப் பெண்ணுக்கும் பெருமைக்குரிய ஒன்றாகும்.

பல்வேறு வகையான முடிசூடும் ஆபரணங்களானது, பல்வேறு சிகை அலங்காரங்களை அளிக்கிறது. அவை திருமணம், திருவிழாக்கள் மற்றும் பிற விழாக்கள் போன்ற சிறப்பு சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் காணப்படுகின்றது.

ஸ்டைலான முடிசூடும் தங்க ஆபரணங்களுக்கான சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

  1. மத்த பட்டி – தென்னிந்தியாவில் ‘தலைசாமான்’ என்று பிரபலமாக அறியப்படும் மத்த பட்டி என்பது பொதுவாக தங்கத்துடன் வடிவமைக்கப்பட்ட ஒரு பாரம்பரிய ஹேர்பேண்டு ஆகும். இது தலைமுடி மத்தியில் பிரியும் (வகிடு) இடத்தில், நெற்றியின் மேல் மையப்பகுதியில் வைக்கப்படுகிறது. மனித உடலின் தலை உச்சியில் உள்ள உச்ச சக்கரமான சிரஸசக்ராவிலிருந்து, இது ஆற்றலைப் பெறுகிறது என்று நம்பப்படுகிறது. இது மணப்பெண்ணின் நகைப் பெட்டியில் உள்ள ஒரு ஆபரணம் ஆகும், இது ஒரு ஆடம்பரமான, கம்பீரமான தோற்றத்துடன் பாரம்பரிய அழகைக் காண்பிக்கிறது.
  2. மாங் டிக்கா – இது ஒரு முனையில் ஒரு கொக்கியும், மறு முனையில் இரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு நேர்த்தியான தொங்கலும் இணைந்த ஒரு பதக்கம் கொண்ட ஆபரணம் ஆகும். மாங் டிக்கா என்பது ஆற்றலின் மையமான அஜ்னா சக்கரம் உள்ள, நெற்றியின் மையத்தில் வைக்கப்படும்.
    ராஜஸ்தானில், "போர்லா" என்பது திருமணமான பெண்களால் அணியப்படும் மாங் டிக்காவின் ஒரு வடிவம் ஆகும். மாங் டிக்கா போலவே, போர்லா என்பது ஒரு வழக்கமான தட்டையான பதக்கத்துக்குப் பதிலாக ஒரு கோள வடிவ (கூம்பு வடிவ) பதக்கம் கொண்ட ஒரு சங்கிலி ஆபரணம் ஆகும்.
  3. ஜூமர் – இது ஒரு விசிறி வடிவ தலையில் சூடும் ஆபரணம் ஆகும், சரவிளக்குகளைப் போல் இருக்கும் இது தலையின் இடது பக்கத்தில் சூடப்படும். இந்த ஆபரணமானது பொதுவாக தங்கத்தால் தயாரிக்கப்படும், இது பெரும்பாலும் மாங் டிக்காவை மையத்தில் வைத்து அலங்கரிக்கப்படும்.
    பாசா என்றும் அழைக்கப்படுகின்ற ஜூமர், ஷாரராஸ் மற்றும் லெஹெங்காக்களுக்கு பொருத்தமான ஒரு ஆபரணமாகக் கருதப்படுகிறது.
  4. சோட்டி– இது மேலிருந்து கீழ் வரை ஜடையின் நீளத்தில் உள்ள ஒரு பின்னல் குஞ்சம் ஆகும். தங்கம் மற்றும் பிற கற்கள் கொண்டு சோட்டி அலங்கரிக்கப்படுகிறது, இது தென்னிந்திய மணமகள்கள் இடையே பிரபலமாக உள்ளது.
    பில்லை என்பது ஜடைக்கான மற்றொரு ஆபரணமாகும், இதில் மேலிருந்து கீழ் வரை ஜடையின் அளவுக்கு உயரும் ஒன்பது வட்ட வடிவ கிளிப்புகள் உள்ளன.
  5. ஜூடா ஊசி மற்றும் கிளிப்புகள் – இந்த ஆபரணம் மூலம், ஜூடாவின் (கொண்டை) மீது சிக்கிக் கொள்ளும் ஒரு தங்க வட்ட-வடிவ ஊசி அல்லது சங்கிலிகள் மூலம், கொண்டை சிகை அலங்காரம் அலங்கரிக்கப்படுகிறது. ஜூடா கிளிப்புகள் என்பது அரை வட்ட வடிவமானதாகும், இதை தலையின் இருபுறமும் அணிந்துகொள்ளலாம்.
  6. ராகோடி – ராகோடி என்பது கொண்டை சிகை அலங்காரத்திற்கான மற்றொரு பிரபலமான ஆபரணம் ஆகும், இது கொண்டையின் மையத்தில் வைக்கப்படும் ஒரு வட்ட வடிவ ஊசியாகும். தென்னிந்திய திருமணங்களில் இது பிரதானமாக அணியப்படுகிறது.
  7. பரண்டா – இந்தியாவின் வடக்கு பகுதியில் பொதுவாக உபயோகப்படுத்தப்படும் தலையில் சூடப்படும் ஆபரணமான பரண்டா என்பது ஜடையுடன் பின்னப்பட்டிருக்கும் கறுப்பு மற்றும் பிற அலங்கார நூல்கள் ஆகும். தங்கத்தாலான அல்லது மற்ற அலங்கார நூல்களானது ஜடையின் இறுதியில் ஆடிக்கொண்டிருக்கும். இந்த ஆபரணமானது, பொதுவாக பஞ்சாபி திருமணங்களில் காணப்படுகிறது.

சிறப்பு சந்தர்ப்பங்களில் அலங்காரம் செய்வதற்கான ஒரு அழகான சேர்க்கையாக, ஒவ்வொரு நகை பெட்டியிலும் ஒரு தலையில் சூடும் தங்க ஆபரணம் இருக்க வேண்டும்.