Published: 01 செப் 2017

வெங்கடேஸ்வரா கோவிலின் தங்கத்தின் கதை

இந்திய திருமணங்கள் என்பது எப்போதுமே ஒரு ஆடம்பரமான மற்றும் விலையுயர்ந்த நிகழ்வு ஆகும், புராண கதைகள் கூட இதை எதிரொலிக்கின்றது. புராணத்தின்படி, இளவரசி பத்மாவதியுடன் அவரது திருமணத்தை நடத்துவதற்காக வெங்கடேஸ்வர பெருமான், செல்வத்தின் கஜானாவான குபேரனிடம் இருந்து ஒரு கோடியே 14 இலட்சம் தங்க நாணயங்களை கடனாக வாங்கினார். இந்தக் கடன் மூலம், மகிழ்ச்சியான சூழலுடன் சேஷாத்ரி மலையை அலங்கரிக்குமாறு, தெய்வீக கட்டிடக்கலை நிபுணரான விஸ்வகர்மாவிற்கு சேஷாத்ரி மலையை வெங்கடேஸ்வர பெருமான் அருள்பாலிக்கிறார். விஷ்ணுவின் ஒரு வடிவமான வெங்கடேஸ்வரர் தனது மனைவியுடன் பத்மாவதியுடன் ஆலயத்தில் வசித்து வருகிறார், அதே நேரம் லக்ஷ்மி தேவி அவரின் இதயத்தில் வசிக்கிறார்.

எனினும், வெங்கடேஸ்வர பெருமான் குபேரனுக்கு கடனை திருப்பிச் செலுத்தவில்லை. இதனால், அவர் கடனை திருப்பிச்செலுத்த உதவி செய்ய, பக்தர்கள் "உண்டியில்" (நன்கொடை பானை) பணத்தையும், தங்கத்தையும் நன்கொடையாக அளிக்கிறார்கள். இந்த உண்டியல் வசூலானது, தினமும் 22.5 மில்லியன் ரூபாய் வரை நன்கொடையாக பெற்று, உலகின் இரண்டாவது பணக்கார கோவிலாக வெங்கடேஸ்வரர் ஆலயத்தை ஆக்கியுள்ளது. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், கோவில் அறக்கட்டளையானது 1,311 கிலோ தங்கக் கட்டிகளை (0.995-தூய்மை) அரசுக்கு சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சேமிப்பில் செலுத்தியுள்ளது. இது, தங்கள் அன்புக்குரிய கடவுளான வெங்கடேஸ்வரர் மீது பக்தர்களுக்கு உள்ள பக்தியையும், அர்ப்பணிப்பையும் காட்டுகிறது.

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மலைநகரமான திருமலையில் உள்ள சேஷாத்ரி மலைகளின் ஏழாவது சிகரத்தில் இந்த வளமிக்க கோவில் உள்ளது. இந்த கம்பீரமான கோவிலானது கி.பி 300-ல் தொடங்கும் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது, மேலும் இது திராவிட கட்டிடக்கலையின்படி கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் மூன்று நுழைவாயில்களைக் கொண்டுள்ளது, இதன் மூன்றாவது நுழைவாயில் பங்காருவகிலி ஆகும்; மரக் கதவானது தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, இது விஷ்ணுவின் தசாவதாரத்தை (பத்து அவதாரங்கள்) எடுத்துக்காட்டுகிறது. கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள ஒரே கலசத்துடன் (கூரை), மூன்று-அடுக்கு கோபுரத்தின் (கோபுரம்) மேற்கூரையானது தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த கலசமானது தங்கத்தால் மூடப்பட்டிருக்கும், அதை தூரத்திலிருந்தே பார்க்க முடியும். மகாத்வரம் மற்றும் வெண்டிவாகிளிக்கு இடையே தங்க துவஜஸ்தம்பம் (கொடிக் கம்பம்) அமைக்கப்பட்டிருக்கிறது.

உண்டியல் நன்கொடைகள் தவிர, துலாபாரம் என்பது பழங்காலத்தில் இருந்தே நன்கு அறியப்பட்ட பழக்கவழக்கமாகும். பக்தர்கள் வெங்கடேஸ்வரருக்கு தங்கம் அல்லது மற்ற பொருட்களை தங்களின் எடைக்கு ஏற்ப வழங்குகிறார்கள்.

இந்த அற்புதமான கோவிலில், வெங்கடேஸ்வர பெருமான் மஞ்சள் உலோகத்தால் செழுமையாக நிறைந்திருக்கிறார். தலையில் இருந்து கால் வரை, சிலையானது ஒவ்வொரு நாளும் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுகிறது. 10 கிலோவுக்கு மேல் எடை கொண்ட தங்க கிரீடமானது உண்மை மற்றும் கருணை பொழியும் தங்கக் காதணிகளுடன், வெங்கடேஸ்வரருக்கான நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. தங்கச் சரத்துடன் இணைக்கப்பட்ட மஞ்சள் நிற உடையுடன், முனையில் தங்க மணிகள் கொண்ட தங்க ஒட்டியாணத்தால் பகவான் அலங்கரிக்கப்பட்டிருப்பார். இது அவரது உடையின் வடிவமைப்பை மேம்படுத்துகிறது மற்றும் பாரம்பரியத்தின் தோற்றத்தை அளிக்கிறது. மேலும், தங்க சட்டகங்கள் சிலையின் கால்களை மூடியுள்ளன, இது தங்கக் கொலுசுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும், இது தங்களுடைய விருப்பமான தெய்வங்களுக்கென்று பக்தர்கள் அளிக்கும் நன்கொடைகளை நினைவூட்டுகிறது. வெங்கடேஸ்வரரின் அளவற்ற செல்வத்தை இந்த நகைகள் வெளிப்படுத்துகிறது.

இதன் காரணமாக, இந்தியா முழுவதும் உள்ள பல பக்தர்களின் விருப்பமான இடமாக இது விளங்குகிறது.