Published: 08 ஆக 2017

தங்கத்தை ஆன்லைன் மூலம் வாங்குவதற்கான வழிகாட்டி

How to buy gold online

ஆன்லைனில் தங்கம் வாங்குவது குறித்து ஒருவருக்கு எழக்கூடிய கேள்விகளுக்கு பதில் அளிப்பதும் அது எவ்வாறு பணிபுரிகிறது என்பதும்.

முன்பெல்லாம் தங்கத்தை நகையாகவோ, கட்டிகளாகவோ அல்லது நாணயங்களாகவோதான் வாங்க முடியும். ஆனால் தற்போது புதிய, நவீன முதலீட்டு விருப்பத்தேர்வுகள் உள்ளன. இதில் மிகவும் சமீபமானவை நீங்கள் தங்கத்தை ஆன்லைன் மூலம் முதலீடு செய்வதற்கு உதவும்.

  1. ஆன்லைன் தங்க முதலீடுகள் என்றால் என்ன?

    ஆன்லைன் தங்க முதலீடுகள் மூலம் நீங்கள் உடனடியாக தங்கத்தை ஆன்லைனிலேயே வாங்கலாம், விற்கலாம். சர்வதேச அளவில் சரியான நேரத்தில் சந்தை தொடர்புடைய விகிதங்களில் சுத்தமான 24 காரட் தங்கத்தை நீங்கள் வாங்கி விற்க முடியும்.

  2. இதனை நீங்கள் எப்படி துவங்கலாம்?

    ஆன்லைன் மூலம் தங்க முதலீடு நிறுவனங்களின் வலைதளங்களுக்கு நீங்கள் செல்லலாம். சில நிறுவனங்களுக்கு ஸ்மார்ட்ஃபோன் செயலி உள்ளது. இதனை உங்கள் கருவியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். ஒரு கணக்கைத் தேர்ந்தெடுத்து உருவாக்க, உங்களது மின்னஞ்சல் முகவரியை நீங்கள் சரிபார்க்க வேண்டும். அதன் பின்னர் நீங்கள் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். உங்களது அடிப்படை தகவல்களை அளித்த பிறகு, நீங்கள் பின்வருவனவற்றையும் அளிக்க வேண்டியிருக்கும்.

    • அடையாளச் சான்று
    • முகவரிச் சான்று
    • உங்களது நியமனதாரரின் விவரங்கள்
    • உங்களது வங்கி விவரங்கள்

    எல்லாவிதமான அவசியமான தகவல்களையும் பூர்த்தி செய்தால், உங்களுக்கு ஒரு பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கிடைக்கும். ஆன்லைன் தங்க முதலீட்டுகளை மேலாண்மை செய்ய இதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  3. நீங்கள் வாங்க விரும்பும் தங்கத்தின் அளவை நீங்கள் எவ்வாறு தேர்வு செய்வது? நீங்கள் வாங்குவதற்குத் ◌தேவையான ஏதாவது குறைந்த அளவு உள்ளதா?

    நீங்கள் பதிவுசெய்த பிறகு, புகுபதிகை செய்யவும். நீங்கள் தங்கம் வாங்கக்கூடிய பக்கத்திற்கு நீங்கள் திசைகாட்டப்படுவீர்கள். தங்கத்தை கிராம்களிலோ அல்லது ரூபாய்களிலோ வாங்குவதற்கான விருப்பத்தேர்வு உங்களுக்கு இருக்கும். நீங்கள் ஒரு கிராம் வரை குறைந்த பட்சம் வாங்குவற்கோ அல்லது ரூ.1 க்குக் கூட வாங்குவதற்கோ சில விற்பனையாளர்கள் உதவிபுரிவார்கள்.

  4. ஜிஏபி (தங்க சேமிப்புத் திட்டம்) என்றால் என்ன? எவ்வளவு காலம் இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும் ?

    ஒழுங்கான மாதாந்திர தவணைகளின் மூலம் நீங்கள் தங்கத்தை முதலீடு செய்ய உதவும் திட்டத்திற்கு தங்க சேமிப்புத் திட்டம் என்று பெயர். இதன்படி , இந்தத் திட்ட காலத்திற்குள், ஓராண்டிலிருந்து 15 ஆண்டுகளுக்குள் இயல் தங்கத்தை சேர்க்க இது உதவும். மாதாந்திர சந்தாவாக ரூ.1000 என்று குறைந்த அளவில் கூட கட்டலாம். ஆனால் இது ஒழுக்கமான சேமிப்புத் திட்டம். ஒழுங்கான முறையில் சரியான இடைவெளியில் தங்கத்தை கிராம்களாக சேமிக்க இது உதவும்.

  5. உங்களது தங்கத்தை எங்கு சேமித்து வைக்கலாம்?

    இந்தத் திட்டங்களின் சிறந்த அம்சம் என்னவென்றால் நீங்கள் தங்கத்தை பாதுகாப்பாக சேமித்து வைப்பது குறித்து கவலைப்பட வேண்டாம். நீங்கள் வாங்கும் தங்கம் விற்பவரின் பொறுப்பு. அவர் பெரும்பாலும் காப்பீடு பெற்று வைத்திருப்பார். நீங்கள் வாங்குவதற்கு முன்பு இந்த கேள்வியை கேட்கவும் அல்லது எஃப்ஏக்யூவை (அதிகம் கேட்கப்படும் கேள்விகளை) படிக்கவும். சேமித்து வைப்பதற்காக எந்த அதிகக் கட்டணமும் கேட்கப்படாது.

  6. உங்கது தங்கத்தை நீங்கள் திரும்பப் பெற முடியுமா?

    நீங்கள் தங்கத்தைத் திரும்பப் பெற விரும்பினால், நீங்கள் திரும்பப் பெற விரும்பும் தங்கத்தை அளவையும் எண்ணையும் நீங்கள் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு நாணயத்திற்கும் செய்கூலி வேறுபடுவதால் கூடுதல் செய்கூலிகளுக்காக நீங்கள் ஏதாவது அதிகம் செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் திரும்பப்பெற விரும்பும் தங்கம் உங்களுக்கு விருப்பமான முகவரியில் கொண்டு வந்து சேர்க்கப்படும். இந்த தங்கமானது புல்லியன் நாணயங்களாகவோ அல்லது மற்ற நாணய முறையிலான பொருட்கள் மூலமோ, உங்கள் விருப்பத்தேர்வுக்கு ஏற்றபடி, உங்களை வந்தடையும்.

  7. உங்களது தங்கத்தை எவ்வாறு விற்பது?

    நீங்கள் விற்க விரும்பும் அளவிலான தங்கத்தை நீங்கள் விற்க முடியும். உங்கள் கணக்கில் சேர்ந்துள்ள தங்கத்தை நீங்கள் விற்க முடியும். ஒருமுறை பரிமாற்றம் முடிந்துவிட்டால், விற்கப்பட்ட தங்கமானது உங்களது வங்கி கணக்கிற்கு மாற்றப்படும். இதன் பலனாக உங்கள் கணக்கில் சேர்க்கப்பட்ட தங்கத்தின் அளவு குறையும்.

  8. வாங்கும் விற்கும் பரிமாற்றத்தை எவ்வாறு நிறைவு செய்வது

    வாங்கும்போது
    நீங்கள் வாங்க விரும்பும் தங்கத்தின் அளவை நீங்கள் தேர்ந்தெடுத்த பிறகு, ஒரு பாதுகாப்பான பணம் செலுத்தும் இடத்திற்கு நிங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு உங்கள் விருப்பத்திற்குரிய பணம் செலுத்தும் முறையை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
    விற்கும்போது
    கிராம்களிலோ அல்லது ரூபாய்களிலோ நீங்கள் விற்க விரும்பும் தங்கத்தின் அளவை தேர்ந்தெடுக்கவும். தங்கத்தை விற்பதன் மூலம் நீங்கள் பெறும் பணத்தைப் பெறுவதற்காக உங்கள் வங்கி விவரங்களையும் நீங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் தங்கம் வாங்கிய விலைக்கும் விற்கும் விலைக்கும் இடையில் நிறைய வேறுபாடு இருக்கும். பல்வேறு வரிகளால் ஏற்படும் மாற்றங்களால் இந்த வேறுபாடு உண்டாகும்.
    விலைப்பட்டியல்
    தங்கத்தை வாங்குவதற்கான ஆணையை நீங்கள் செலுத்திய உடனேயே, இந்த பரிமாற்றத்திற்கான விலைப்பட்டியல், உங்கள் பரிமாற்றத்தை உறுதி செய்யும் மின்னஞ்சலுடன் உங்களுக்குக் கிடைக்கும்.

  9. உங்களது தங்கம் எவ்வளவு பாதுகாப்பானது?

    உங்களது தங்கத்தை ஆன்லைன் தங்க வியாபாரிகள் பாதுகாப்பான பெட்டகங்களில் வைத்திருப்பர். இது காப்பீடு பெற்றது. எனவே உங்கள் தங்கத்தை நீங்கள் எந்த சூழ்நிலையிலும் இழக்க மாட்டீர்கள். தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் மிகவும் நெகிழ்வான முறையில் பதற்றமில்லாமல் நீங்கள் தங்கத்தை ஆன்லைன் மூலம் கையாள முடியும். இந்த பரிணாம வளர்ச்சியின் பயன்களை நீங்களும் அனுபவிப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஆதாரங்கள்
Source1Source2Source3Source4Source5Source6