Published: 14 ஜூலை 2017

எதிர்காலத்தில் அம்மாவாகப் போகிறவருக்கு தங்கத்தை பரிசளிப்பதற்கான வழிகாட்டி

கடந்த பத்தாண்டுகளில் குழந்தைக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சிகள் மேற்கத்திய மயமாக்கப்பட்டிருக்கலாம், ஆனால் சிறியதாக இருந்தாலும் முக்கியமான சடங்குகள் இன்னும் மாறாமலே இருக்கின்றன. எதிர்காலத்தில் அம்மாவாகப் போகிறவர் இன்று ஒருவேளை புடவைக்குப் பதிலாக கவுன் அணிந்திருக்கலாம் ஆனால் அவள் அணியும் பூக்கள், நகைகள், பூஜை, பக்தி பாரம்பரியங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அதே விதத்தில், ஒரு மங்களகரமான நிகழ்ச்சியில் தங்கத்தை பரிசளிப்பது எப்போதும் பிரபலமாகும்.

ஒரு பெண் மீண்டும் பிறக்கிறாள்:
ஒரு பெண் தாயாகும் போது, அவள் மீண்டும் பிறப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் தனது குழந்தையை பாதுகாப்பது, காப்பாற்றுவது மற்றும் சிறந்ததை வழங்குவது போன்ற பெரிய பொறுப்பும் கூடவே வருகிறது. குறிப்பாக இன்று பெற்றோர்களின் பின்புலம் எதுவாக இருந்தாலும் தங்களின் குழந்தைகளுக்கு சர்வதேச கல்வி மற்றும் ஒரு சிறந்த வாழ்க்கை முறையை அளிக்க வேண்டுமென விரும்புகிறார்கள் என்பதுதான் உண்மையாகும். எனவே தங்கம் ஒரு மங்களகரமான மற்றும் நிகழ்ச்சிக்கான பரிசு என இரட்டிப்பு நன்மையளிக்கிறது. மேலும், தங்கம் தன லட்சுமி என கருதப்படுகிறது, மேலும் செல்வத்தையும் செழிப்பையும் கொண்டுவருவதாகவும், ஒரு முக்கியமான புதிய பயணத்தை துவங்கிய ஒரு பெண்ணுக்கு பொருத்தமான பரிசை அளிப்பதாகவும் கூறப்படுகிறது.

சரியான நேரத்தில் துவங்கி, கவலையை குறைக்கவும்:
இந்தியர்கள் எப்போதுமே ஒரு சேமிப்பு மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள், மேலும் பல தலைமுறைகளாக தொடரும் இந்த பாரம்பரியம் பல அம்சங்களைப் பெற்றுள்ளது. இந்த சிந்தனையுடன் தான் பெற்றோர்கள், தாத்தா பாட்டிகள் மற்றும் நெருங்கிய குடும்ப நண்பர்கள் புதிதாக தாயாகப் போகும் அம்மாவுக்கு பரிசளிக்கின்றனர். தங்கத்தை பரிசளித்தல் என்று வரும் போது இன்று பல விருப்பங்கள் காணப்படுவதே மாற்றத்திற்கான காரணமாகும்.

தங்க நகைகள் மற்றும் நாணயங்களை பரிசளிக்கும் பாரம்பரிய முறைகள் தவிர, இப்போது நீங்கள் தங்கக் குவியல் திட்டம் ஒன்றில் சேர்வதை தேர்ந்தெடுக்கலாம், தங்க ஈ.டி.எப் (ETF) வாங்கலாம் அல்லது ஒரு தாய் அவளுடைய குழந்தையின் எதிர்காலததிற்காக ஒரு தங்க சேமிப்பு கணக்கைத் துவங்கலாம்.

ஆனால் பணம் யாரிடம் இருக்கிறது?
தங்கத்தைப் பற்றி நீங்கள் சிந்திக்கும் நேரத்தில் ஒரு பெரிய முதலீடு குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும். இது கொஞ்சம் கூட உண்மையல்ல, ஏனென்றால் நீங்கள் மூன்று ஜோடி தரமான குழந்தைகள் ஆடைகளுக்கு செலவு செய்யும் பணத்தில் சிறிதளவு தங்கத்தை வாங்கத் துவங்கலாம். தங்கக் குவியல் திடத்தை குறைந்தபட்சம் ரூ.1000 என்ற முதலீட்டிலிருந்தே நீங்கள் துவங்கலாம். இது ஒரு சிறிய மற்றும் எளிய துவக்கம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, மேலும் இது தாய் மற்றும் குழந்தையின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காக தங்கத்தில் முதலீடு செய்வதற்கான ஒரு துவக்கமாகும்.