Published: 19 ஜூன் 2018

அழகுசாதனப் பொருட்களில் தங்கத்தின் வரலாற்று மற்றும் நவீனப் பயன்பாடுகள்

History of Gold's Use in Cosmetics

‘உலோகங்களின் அரசன்’ அல்லது ‘உயிரின் சர்வ ரோக நிவாரணி’ போன்ற சொற்கள் தங்கத்தைத் தவிர வேறு எதையும் அடையாளப்படுத்துவதில்லை. ஏனென்றால் இந்த சிறப்பு உலோகத்தின் பயன்பாடு நகைகள், முதலீடுகள் அல்லது மின்னணு சாதனங்களில் மட்டும் கட்டுப்படுத்தப்படுவதில்லை. பல நூற்றாண்டுகளாக தங்கம் அழகுச்சாதனப் பொருட்களில் தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எகிப்திய ராணிகள் கிளியோபாட்ரா மற்றும் நெஃபெர்டிடி ஆகியோர் தங்க முகமூடிகளை அணிந்து தூங்கியதாக அறியப்பட்ட காலத்திலிருந்தே சருமப் பராமரிப்பில் தங்கத்தின் பயன்பாடு தொடங்கி விட்டது. இந்த அழகின் சின்னங்கள் எதற்காக அவர்களுடைய சருமப் பராமரிப்பு சிகிச்சைக்கு தங்கத்தின் ஆற்றல் மீது அவ்வளவு நம்பிக்கைக் கொண்டிருந்தனர் என்று பார்ப்போம் வாருங்கள்.

இயற்கையான பளபளப்புக்கு

தங்கத் துகள்கள் அடங்கிய முகப் பூச்சுக்கள் பெரும்பாலும் ராணிகள் மற்றும் இளவரசிகளால் அவர்களுடைய சரும நிறத்தை மேம்படுத்தவும் மற்றும் அதை இளமையாகவும் பளபளப்புடனும் பராமரிக்கவும் பயன்படுத்தப்பட்டது. தங்கத்தின் மூலக்கூறுகள் சருமத்தை பிரகாசமாக்கவும் மற்றும் அதை ஈரப்பதத்துடன் பராமரிக்கவும் சிறந்ததென்று சொல்லப்படுகிறது.

மூப்படையும் செயல்பாட்டை தாமதப்படுத்துதல்

தங்கப் பூச்சுகள் சருமத்தில் கொலாஜன் அளவு குறையும் செயல்முறையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் முன்கூட்டி வயதாவதைத் தடுக்கிறது. இதன் இரசாயன மூலக்கூறுகள் திசுக்களின் நெகிழ்வுத்தன்மையை மீட்டெடுப்பதிலும், சுருக்கங்களற்ற சருமத்தை உறுதிப்படுத்தவும் பயன்படுவதாக அறியப்படுகிறது.

இயற்கையாக சருமத்தை குணமாக்குகிறது

எகிப்தியர்கள் தங்கத்தின் மருத்துவ குணங்கள் சருமத்தை குணப்படுத்த உதவுவதாக நம்புகின்றனர். தங்கம் செல்களைப் புதுப்பிக்கும் வீக்கத்திற்கு எதிரான மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. இது வீக்கம் தொடர்பான சரும குறைபாடுகளுக்கு சிகிச்சையளிக்க உதவிகரமாக இருக்கிறது.

முன்பு எப்போதும் இல்லாத வகையில் அழகு சாதன கண்டுபிடிப்புகள் முன்னேறி வருவதால் நவீன சருமப் பராமரிப்பிலும் தங்கம் அதன் பாதையை அடைந்திருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இன்றைய நாட்களில் தங்கம் இரண்டு வழிகளில் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது – முகப்பூச்சுக்கள் மற்றும் க்ரீம்களில் ஒரு மூலப்பொருளாக அல்லது சருமத்தில் நேரடிப் பயன்பாட்டிற்கு தங்க மென்தகடு அல்லது இலையாகப் பயன்படுத்தப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய சருமப் பராமரிப்பு பிராண்டுகளில் தங்கத்தின் நுண்ணிய துகள்கள் தீவிரமாகப் பயன்படுத்தபட்டு வருகிறது. நவீன சருமப் பராமரிப்பு மற்றும் தோல் நோய் மருத்துவ சிகிச்சைகளில் தங்கததின் பங்கிற்கான சில நியாயமான காரணங்களைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள்:

சரும குறைபாடுகளை குறைத்தல்

தங்கம் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் மூலக்கூறுகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது இது சருமத்தின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து இதன் மூலம் சரும குறைபாடுகள் மற்றும் முகப்பருக்களைக் குறைக்கிறது.

செல்கள் புதுப்பிப்பு

வலி நீக்கும் தங்கப் பூச்சு (நீரில் தங்க நுண் துகள்களின் அளவு) சருமத்தின் செல்களுக்குள் அறுந்த தொடர்பை புதுப்பிக்கிறது மற்றும் அவற்றின் தொடர்ச்சியான மீளுருவாக்கத்திற்கு உதவுகின்றன. எனவே, பழைய சிதைந்த செல்களுக்கு பதிலாக புதிய செல்களை உருவாக்குவதில் குறிப்பிட்டத்தகுந்த பங்கை வகிக்கிறது.

சூரிய ஒளியால் விளையும் சேதங்களிலிருந்து பாதுகாப்பு

சூரிய ஒளிக்கு சருமம் வெளிப்படுத்தப்படும் போது சருமம் கருத்துப் போவதற்கு பொறுப்பான நிறமி மெலனின் ஆகும். தங்கத்தின் நுண்ணிய துகள்கள் உங்கள் உடலில் மெலனின் உற்பத்தியைக் குறைக்கிறது எனவே உங்கள் சருமத்தை சூரிய ஒளியால் ஏற்படும் சேதங்களிலிருந்து காக்கிறது.

அழகான நகைகள் முதல் நுணுக்கமாக நூற்கப்பட்ட துணிகள், மின்னணு கம்பிகள் மற்றும் பல் உறைகள் வரை தங்கம் நவீன சமதாயத்தில் பலவகைப்பட்ட பாத்திரங்களை வகிக்கிறது, மேலும் அழகுச்சாதனத் துறையில் அதன் பங்கு அதன் மகுடத்தில் பதிக்கப்பட்ட மற்றுமோர் மாணிக்கம் ஆகும்.