Published: 19 ஐன 2018

தங்கம் மற்றும் தங்க நகைகள் மீது GST இன் தாக்கம்

ஜுலை 1 ஆம் தேதி 2017, சரியாக இரவு 12 மணிக்கு கடிகாரம் அடித்தபோது, நமது அரசாங்கம் நாட்டில் மறைமுக வரிவிதிப்புக்கான ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியது. இப்போது வரை, கிட்டத்தட்ட நாட்டிலுள்ள அனைவரும் GST சரக்கு மற்றும் சேவை வரி பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.

இப்போது நீங்கள் நகைக்கடையாக இருக்கட்டும், சூப்பர் மார்க்கெட்டாக இருக்கட்டும், அல்லது ஒரு உணவகம் அல்லது திரையரங்கில் சேவையாக இருக்கட்டும், அதை வாங்கியதற்கான ரசீதைப் பெறும்போது அதில் நீங்கள் மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) அல்லது சேவை வரிகளை பார்க்க மாட்டீர்கள். மாறாக, நீங்கள் GST ஐ மட்டுமே காண்பீர்கள். இது மேலும் CGST (மத்திய சரக்கு மற்றும் சேவை வரி) மற்றும் SGST (மாநில சரக்கு மற்றும் சேவை வரி) என பிரிக்கப்படலாம்.

GST நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, GST கவுன்சில் கிட்டத்தட்ட 1,211 இதர சரக்கு மற்றும் சேவை வரிகளோடு, தங்கத்திற்கும் வரி கட்டணங்களை நிர்ணயித்தது

இந்தியாவில் தங்கம் வாங்குவதை GST எப்படி பாதிக்கிறது

ஜுலை 1 ஆம் தேதி 2017 முதற்கொண்டு தங்கத்தின் மீது 3% GST விதிக்கப்படுகிறது. இருந்தாலும், சுங்க வரிகளும் 10% தொடர்ந்து இருக்கும்

மேலும், தங்கத்தின் செய்கூலிக்கு 5% GST கட்டணம் விதிக்கப்படுகிறது. தங்கத்தின் விலைகளில் இது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மிகச் சரியாக தெரிந்துக்கொள்ள, தங்கம் வாங்குவதை எளிமையாக்குதல்: செய்கூலி மற்றும் சேதார கட்டணங்கள் பற்றி படியுங்கள்.

GST ஆல் இப்போது நுகர்வோர் சுமார் 13.5% முதல் 14% வரை செயல்பாட்டில் உள்ள வரி கட்டணங்களை எதிர்கொள்கின்றனர். (சுங்க வரி, செய்கூலி மற்றும் தங்க நகைகளுக்கு GST உட்பட), இது முன்னர் 12.4% ஆக இருந்தது.

ஒரு விளக்கப்படத்துடன் தங்கத்தின் மீதான சரக்கு மற்றும் சேவை வரிகளைப் புரிந்துக்கொள்ளுதல்

விவரங்கள் GST-க்கு முன் GST-க்கு பின்
A தங்க உலோகத்தின் விலை (ஒரு கிராமுக்கு) * 3,000.00 3,000.00
B சுங்க வரி (10%) 300.00 300.00
C உலோகத்தை இறக்குமதி செய்ய ஆகும் செலவு (A+B) 3,300.00 3,300.00
D செய்கூலி (தங்கத்தை இறக்குமதி செய்யும் செலவில்@8%) 264.00 264.00
E நகைக்கடைக்காரரின் உற்பத்தி செலவு (C+D) 3,564.00 3,564.00
F  நகை தயாரிப்புக்கான சுங்க வரி (உற்பத்தி செலவு@1% ‘E’) 35.64 (பொருத்தமற்றது)
G விற்பனையாளரின் நகை விலை (E+F) 3,599.64 3,564.00
H VAT (வற்பனையாளரின் நகைகளின் விலையில் @1% முதல் 5% வரை ‘G”) 35.99 (பொருத்தமற்றது)
I நகைகள் மீதானGST (உலோகத்தை இறக்குமதி செய்யும் செலவில் @3% – ‘G’ (பொருத்தமற்றது) 106.92
J நகையின் மொத்த விலை (ஒரு கிராம் தங்கம்) (G+H+I) 3,635.63 3,670.92.12
K மொத்த வரிகள் மற்றும் வரிவிதிப்புகள் (B+F+H+I) 371.63 406.92 
  நகை விலையின் ஒரு சதவிகிதமாக வரிகள் மற்றும் வரிவிதிப்புகள் 10.22% 11.08%
  விலையில் தாக்கம்   ▲1.33%

தங்கத்தின் மீது தாக்கங்களை புரிந்து கொள்வது மற்றும் முன்னோக்கிய பாதை

இது மிகப்பெரிய வரிச்சுமையாகத் தோன்றலாம், ஆனால் GST பரந்த அளவில் வரிப் பயன்களை வழங்குகிறது, இது நீண்ட காலத்தில் உங்களுக்கு நன்மைகளைத் தரும்.

GST ஆட்சியின் கீழ் நகைக்கடைக்காரர்கள் விற்பனை செய்யும் செய்யும் செயல்முறையில் பயன்படுத்தப்படும் எந்தவொரு சரக்குகள் மற்றும் சேவைகளிலிருந்து உள்ளீட்டு வரிக் கடனை பயன்படுத்திக் கொள்ள முடியும். விநியோகச் சங்கிலியில் பெறப்படும் எந்தவொரு வரிப்பயனும் இப்போது நுகர்வோருக்கு கடத்தப்படும்.

இந்த நடவடிக்கை அமைப்புசார் துறையில் உள்ள நகைக்கடைக்காரர்களுக்கு பயனளிக்கிறது மற்றும் வாடிக்கையாளர்களை அவர்கள் பக்கம் செலுத்துகிறது. இது அமைப்புசார்ந்த மற்றும் அமைப்புசாரா நகைக்கடை பிரிவினருக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்புகிறது

GST ஐ நடைமுறைப்படுத்துவதால் வாடிக்கையாளர்களுக்கு சற்றே அதிக வரி விதிக்கப்படுவதால் இது குறுகிய காலத்தில் தொந்தரவு கொடுக்கும் ஒரு மாற்றமாக இருக்கும். ஆனால் புதிய வரி ஆட்சியின் இறுக்கமான பிடியில் நுகர்வோரும் விற்பனையாளர்களும் இருப்பதால் இது இந்த துறையின் சீரமைப்பு காலம் என்று பெரும்பாலானோர் கருதுகின்றனர்.

பழைய தங்க நகைகளை விற்பதை GST எவ்வாறு பாதிக்கிறது

நீங்கள் பழைய தங்க நகைகளை நகைக்கடைக்காரரிடம் விற்பதாக இருந்தால் நேரெதிர் செயல்முறையின் அடிப்படையில் GST செலுத்துவதற்கு நகைக்கடைக்காரர் பொறுப்பல்ல. இருந்தாலும், பதிவு செய்யப்படாத தங்க ஆபரண விற்பனையாளர், பதிவு செய்த விநியோகஸ்தருக்கு நகைகளை விற்றால், நேரெதிர் கட்டண செயல்முறையின் கீழ் வரிகள் பொருந்தும். இந்த செயல்முறையின் கீழ், வரிகளை செலுத்தும் பொறுப்பு சரக்கு அல்லது சேவைகளை பெறுபவர் மேல் இருக்கிறது. விற்பனையாளருக்கு இல்லை.

தொடர்புடையது: உங்கள் தங்க நகைகளை விற்பதற்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்

வாங்குபவர்களுக்கும் தொழிற்துறைக்கும் GST என்றால் என்ன

விற்பனை நிலையங்களில் உள்ள அதிக வெளிப்படைத்தன்மை நாடு முழுவதிலுமுள்ள தங்கம் வாங்குபவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். முறைசார்ந்த தொழிற்பிரிவுக்கு அதிகத் தங்கத்தை கொண்டு வர GST உதவும். இது இந்த துறையில் நீண்ட காலத்திற்கு நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.

நுகர்வோர் அவர்கள் வாங்கும் தங்கப் பொருட்கள் மீது அதிக நம்பிக்கை வைக்கலாம், இதன் விளைவாக வரவருக்கும் ஆண்டுகளில் இது இந்திய தங்கத் தேவையை ஆதரிக்கும்.

தங்கச் சந்தையில் பெரும்பகுதி முறைசார்ந்த துறைக்குள் வருவதால் முடிவில் நன்மைகள் உங்களுக்கு திரும்பக் கிடைக்கும். முறைசாரா கருப்புச்சந்தை விற்பனையாளர்கள் செயல்படுவதை கடினமாக்கும் GST என்கிற கருத்தை ஆதரிப்பதன் மூலம், சட்டப்படி தங்கப் பரிவசர்த்தனைகள் நடப்பதை உறுதிப்படுத்த நீங்களும் பங்களிக்கலாம்.

இந்தியாவில் தங்கம் வாங்குவதற்கு முன் சரிபார்க்க வேண்டிய விஷயங்களைப் பற்றி தெரிந்துக்கொள்ள இங்கேசொடுக்கவும்.

ஆதாரங்கள்:

ஆதாரங்கள்1,ஆதாரங்கள்2, ஆதாரங்கள்3,ஆதாரங்கள்4,ஆதாரங்கள்5,ஆதாரங்கள்6