Published: 20 பிப் 2018

தங்கத்தின் மீது இந்தியாவின் ஆண்டாண்டு காலக் காதல்

India's love and affection for gold

நவீன இந்தியாவை இணைக்கும் மூன்று விஷயங்கள் கிரிக்கெட், ஷாருக்கான் மற்றும் தங்கம் முதல் இரண்டும் அவ்வப்போது நிகழ்பவை. நகையாக அல்லது கட்டியாகத் தங்கம் வாங்கும் பாரம்பரியம், வரலாற்றுக்கும் முந்தைய காலத்திலிருந்து நிகழ்கிறது. வகுப்பு பேதமின்றி இந்தியர்கள் அனைவரும், பணம் செலவுசெய்து வாங்கும் மிகவும் மதிப்பு மிக்க பொருள்களில் தங்கத்தையும் ஒன்றாகப் பார்க்கிறார்கள். தங்கத்தை வாங்கி சேமிக்கவேண்டும் என்ற, ஆழமாக ஊடுருவியுள்ள இந்தத் தேவை எங்கிருந்து வந்தது? இதற்கு எளிதான பதில் இல்லை. சில பொருளாதார நிபுணர்கள், தங்கத்துடன் இந்தப் பகுதியின் சமூக-கலாச்சார கூட்டுறவை சுட்டிக் காட்டுகிறார்கள். நிச்சயமாக, திருமணங்கள், வாழ்வின் முக்கியமான நிகழ்வுகள் மற்றும் சடங்குகள் மற்றும் தந்தெராஸ் மற்றும் அக்ஷய திரிதியை போன்ற இந்து விழாக்கள் தங்கம் வாங்கும் நடைமுறையை முறைப்படுத்தியுள்ளது மேலும் மற்ற பரிவர்த்தனைகள் போலன்றி இதற்கு மிகப்பெரிய அடையாளத்தை அளிக்கிறது.

அதிக மறு-விற்பனை மதிப்பு மற்றும் விலையேற்றம் ஆகியவற்றினால் முதலீட்டாளர்கள் உறுதிபெறுகிறார்கள். திருமணத்தில் பரிசளிக்கும் சடங்குக்கும் (தாய்வீட்டிலிருந்து மணப்பெண்ணுக்கு தங்கத்தைப் பரிசாக அளிப்பது) பொருளாதரா மற்றும் நிதி ஆற்றலை பெண்களுக்கு அளிப்பதற்கும் இடையிலான தொடர்பை பெண்கள் படிப்பதற்கான உதவித்தொகைகள் நிறுவுகின்றன. தங்கத்தின் மீதான இந்தியாவின் காதல் பற்றிய உற்சாகமான பேச்சைப் பொருத்த வரையில் இவை சில குரல்களே. உலகத் தங்கக் கவுன்சில் அறிக்கையின் படி, தங்கம் பயன்படுத்துவதில் உலகில் 2வது நாடு என்ற புகழை உறுதியாகத் தக்கவைத்துள்ளது மேலும் இந்திய வீடுகளில் தோராயமாக 23000 டன் தங்கம் உள்ளது. இந்திய தங்க சந்தை என தலைப்பிடப்பட்ட உலகத் தங்கக் கவுன்சிலின் அறிக்கை: இனோவேஷன் மற்றும் எவல்யூஷன் என்ற கட்டுரை, 2020 ஆம் ஆண்டில் இந்தியர்கள் 850 முதல் 950 டன்கள் தங்கத்தை வாங்குவார்கள் என யூகிக்கிறது.

சில குறுகிய கால சவால்கள் (பணமதிப்பு நீக்கம் மற்றும் பொருளகள் மற்றும் சேவை வரி போன்றவை) இருந்தபோதிலும், 2017 ஆம் ஆண்டு உங்கள் அழகான பாரம்பரியான காதணிபோல் ஜொலிக்கிறது. ஜிஎஸ்டி வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படைத்தன்மையையும் தரத்தையும் உறுதிசெய்யும். உங்கள் பணத்துக்கான மதிப்பை நீங்கள் பெறுகிறீர்களா இல்லையா என்ற இனி சந்தேகப்பட வேண்டியதில்லை. இதுவரை நீங்கள் சந்தேகக் கண்ணோடு பார்த்ததை பணமதிப்பு நீக்க நடவடிக்கை உறுதிப்படுத்தியுள்ளது என்ற இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். புதை மணல் போன்ற பொருளாதார உலகில் பயணிக்கும் போது, தங்கம் தான் உங்களுக்கு உத்திரவாதமானது. இது பொதுவாகக் கூறுவதல்ல. 2016-ல் உலகத் தங்க கவுன்சில் நடத்திய தேசிய அளவிலான கருத்தாய்வில், 'நீண்டகால அளவில் தங்கம் என்னைப் பாதுகாப்பாக உணரவைக்கிறது' என்ற கூற்றை 73% இந்கியர்கள் ஒப்புக்கொண்டனர். இந்தியர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர், அவர்களுடைய வார்த்தைகள் அவர்களின் எடைக்கு சமமான மதிப்புடையது.