Published: 09 பிப் 2018

இந்தியாவும் அதனுடைய அரிய தங்க மகிமையும்

உலோகத்தை பிரித்தாளும் கலையை மனித இனம் கையாளக் கற்றுக் கொண்டவுடன், முதலில் அதை நாணய வடிவில் பணமாகப் பயன்படுத்தினோம். பிறகு செல்வச் செழிப்பைக் காட்டிக் கொள்வதற்கும் தோற்றப் பொலிவை அதிகரிப்பதற்கும் நகை வடிவில் பயன்படுத்தினோம். இந்த செயல்பாடுகளால், தங்கம் அதிவிரைவில் மிகவும் மதிப்பு வாய்ந்த மற்றும் விரும்பத்தக்க உலோகங்களில் ஒன்று என்ற இடத்தைப் பிடித்துவிட்டது.

ஏறக்குறைய 7,000 ஆண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பிய நாகரிகத்தில் நகை தயாரிப்புப் பாரம்பரியம் திடமாக இடம்பெற்றிருந்தது. இருப்பினும், எப்படியோ இந்தியாவில் நகைகளுடன் வலுவான தொடர்பு உண்டாகிவிட்டது, அதாவது இது நம்முடைய தினசரி வாழக்கை மற்றும் மதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகிவிட்டது.

இந்தியா மிகப்பெரிய நகைத் தொழில்துறையை கொண்டுள்ளது, இது தொடர்ந்து புதிய மற்றும் வித்தியாசமான ஒப்பனை வடிவங்களை உருவாக்கி வருகிறது. இருப்பினும், தங்க நகையின் சில கலை வடிவங்கள் பல்வேறு காரணங்களால் இப்போது மிகவும் அரிதாகவிட்டது. இந்தக் கட்டுரையில், அப்படி அரிதாகிவிட்ட அழகிய தங்க நகை வடிவமைப்புகளில் சிலவற்றை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்.

பாம்படம்

அரிதான அல்லது இப்போது வழக்கத்தில் இல்லாத நகைதான் பாம்படம். தென்னிந்திய மாநிலங்களில் எப்போதாவது பார்க்க முடியும், இந்த நகை காதணியாகும். இது படமெடுக்கும் பாம்புத் தலை வடிவில் இரண்டு குமிழ்கள் மற்றும் இரண்டு பந்துகள் போல செய்யப்பட்டிருக்கும். பாம்படம் என்ற சொல்லுக்கு தமிழில் 'படமெடுக்கும் பாம்பின் தலை' என்று பொருள். இந்த வடிவமைப்பு பெரும்பாலும் பாம்பின் தலையைக் காட்டும். இந்தக் காதணி மிகவும் கனமானது, இதனால் இதை அணிவதற்கு காதுமடலில் துளையிடுவதற்கென்று பிரத்யேகமான ஒரு கத்தி பயன்படுத்தப்பட்டது.

பச்சிகம்

அழகிய இந்த நகை, குஜராத்தின் கட்ச் பகுதியைச் சேர்ந்தது. 'பொற்கொல்லர்' என்ற பொருள்படும் 'பச்சிகர்' என்ற குஜராத்தி வார்த்தையிலிருந்து இந்த நகை தன் பெயரை பெற்றது. நகையில் கலைநயத்தை உருவாக்குவதற்காகவும் வெவ்வேறு வண்ணங்களைச் சேர்ப்பதற்காகவும் தங்கம் மற்றும் பிற உலோகங்களைப் பயன்படுத்தி இந்த நகை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடவுள் நகை

இந்த வடிவ நகைகள் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில், கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது. இந்த நகையின் நவீன வடிவம் இப்போது வெள்ளி அல்லது டெரகோட்டாவில் செய்யப்படுகிறது. இருப்பினும், இந்த வடிவ நகைகளின் அசல் அழகு நம்முடைய முன்னோர்களால் தங்கத்தினால் செய்து பார்க்கப்பட்டது.

மொத்தத்தில், இந்தியாவின் வரலாறு அற்புதமானது மற்றும் அழகானது. இந்தியாவில் பழைய நகை வடிவங்கள் மீண்டும் நாகரீக உலகில் நுழைவதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். ஒருவேளை இவற்றில் ஒன்று நகை வடிவைமைப்பாளரின் பார்வையில் பட்டு புத்துயிர் பெற்று திரும்ப வரக்கூடும்.