Published: 05 செப் 2017

ஐசக் நியூட்டன்: இரசவாதி

பெரும்பாலான மக்கள், இயற்பியல் மற்றும் கணித உலகில் குறிப்பிடத்தக்க மற்றும் மதிப்புமிக்க பங்களிப்பிற்காக ஐசக் நியூட்டனை நினைவுகூர்கிறார்கள். மரத்தில் இருந்து விழுந்த ஆப்பிளானது ஈர்ப்பு விசை குறித்த ஞானத்தை நியூட்டனுக்கு அளித்தது. ஒளி குறித்த ஆய்வு மூலம், வண்ணங்களைப் பற்றிய புரிதல்களை அவர் நமக்கு அளித்தார். மேலும், கணிதத்தின் மீதான அவரது விருப்பம் காரணமாக, நமக்கு நுண்கணிதம் கிடைத்தது. ஆனால் அலங்காரமான அவரது வரலாறு போன்று, நியூட்டனின் பெரும்பாலான வெற்றிகளானது அவரது ஆரம்ப ஆண்டுகளில் அவருக்கு வந்தது. 25 வயதில் நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார், மேலும் தனது முப்பது வயதுகளில், பிரின்சிபியா மேத்தமட்டிக்கா என்ற நூலில் நுண்கணிதம் என்ற வார்த்தையை அவர் வெளியிட்டார்.

ஒரு புத்திசாலித்தனமான இயற்பியலாளர், கணிதவியலாளர் மற்றும் வானசாஸ்திர நிபுணர் போன்ற அவரது ஆரம்பகட்ட வெற்றிகளுக்குப் பிறகு, ரசவாதம் எனப்படும் மர்மமான மற்றும் இரகசிய உலகம் மீது நியூட்டன் ஆர்வம் கொண்டிருந்தார். ரசவாதம் பற்றிய கொள்கைகளின்படி, நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றிலும் உலகளாவிய ஆவி உள்ளது, மற்றும் உலோகங்கள் என்பது பூமியில் உயிருடன் இருப்பது மட்டுமல்லாமல், அவை பூமியினுள் வளர்ந்துகொண்டிருக்கிறது என்றும் நம்பப்பட்டது. இரசவாதிகளுக்கு, உலோகங்கள் என்பது தனித்துவமான பொருட்கள் அல்ல, மாறாக அவை உலோகத்தின் ஆன்மிக மற்றும் இயல்பு முதிர்ச்சியில் உள்ள வேறுபாடுகளின் காரணமாக மாறுபடுகின்றன. தங்கம் என்பது முதிர்ச்சியுள்ள உலோகமாக கருதப்பட்டது, அதே சமயத்தில் காரீயம் போன்ற அடிப்படை உலோகங்கள் முதிர்ச்சியற்றதாகக் கருதப்பட்டது. இரசவாதிகளால் 'தத்துவவாதியின் கல்' எனக் குறிப்பிடப்படும் ஒரு குறிப்பிட்ட நுட்பத்தைப் பயன்படுத்தி, எந்த உலோகத்தையும் தங்கமாக மாற்ற முடியும் என்று அவர்கள் நம்பினர்.

இது அபத்தமானது என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் மட்டும் அவ்வாறு நினைத்துக்கொண்டிருக்கவில்லை. நியூட்டன் இறந்த காலத்தின் பொழுது, ரசவாதம் குறித்து தவறாகப் பேசப்பட்டது. தொழில் ரீதியாக அங்கீகாரம் பெற விரும்பிய வேதியியல் நிபுணர்கள், இரசவாதத்தின் தங்கத்தை தயாரிக்கும் பணியில் இருந்து விலகத் தொடங்கினர். அதன் பெரும் நோக்கத்திற்கு அப்பால், ரசவாதம் என்பது ஒரு போலி அறிவியலாக தேய்ந்து போனது. இந்த சமுதாய மற்றும் தொழில்முறை அழுத்தம் ஆகியவையே, நியூட்டன் தனது ஆராய்ச்சியை இரகசியத்தை வைத்திருந்ததற்கான காரணம் என நம்பப்படுகிறது. துரதிருஷ்டவசமாக, மனித வரலாற்றின் மிக பெரிய புத்திசாலியால்கூட ரசவாதம் பற்றிய இரகசியத்தை அவிழ்க்க முடியவில்லை. நியூட்டனுக்கு தங்கத்துடன் இருந்த உறவு, அதன் மாயை ஆகியவை உங்களுக்கு ஆச்சரியமூட்டுவதுடன், தூய தங்கத்தின் உற்பத்தி செய்முறையை கண்டுபிடிக்க நம்மால் முடியுமோ என்ற கேள்விக்குறி எழுப்பவும் செய்கிறது.