Published: 26 அக் 2018

ஜடாவ் நகைகளின் வரலாறு மற்றும் அவை செய்யப்படும் விதம்

Jadau jewellery

ஜடாவ் என்ற  நகை உருவாக்கும் யுக்தியில், தூய தங்கமானது சூடாக்கப்பட்டு, மெல்லியதாகுமாறு அடிக்கப்படுகிறது. பிறகு அது, விலைமதிப்பற்ற கற்களை  பிசின் அல்லது செதுக்கல் உதவியின்றி   பதிக்கும் வகையில் ஒரு சட்டம் ஆக உருவாக்கப்படுகிறது ஜடாவ் நகைகளின் கண்கவர் அம்சங்களில்,   ஆபரணத்தின் பின்புறத்தில் செய்யப்பட்டிருக்கும் மீனாக்கரி வேலைப்பாடு ஒன்றாகும்.

ஜடாவின் தோற்றம் மற்றும் வரலாற

ஜடாவின் கலை வடிவம் ராஜஸ்தானில் முதலில் ஜெய்ப்பூர் அரசவையிலும், அதைத் தொடர்ந்து பிகானேரிலும் செழித்தோங்கியது. அன்றைய காலகட்டத்தில் முகலாய கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட மிகவும் பொதுவான நகைகளில் வளையல்கள், நெக்லேஸ்கள், காதணிகள், பிரேஸ்லெட்கள் மற்றும் வங்க்கி ஆகியவை அடங்கும்.

இந்தியாவில் முகலாயர்களால் ஜடாவ் நகைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் மிகப்பிரபலமான தங்க நகை பாணியான ஜடாவ் வளர்ச்சியடைந்தது.  இது மட்டுமின்றி, இந்திய கைவினைஞர்கள், காலப்போக்கில் இந்தக் கலையில் தங்களின் பிரத்யேக நுணுக்கங்களை அசல் யுக்தியில் சேர்த்து மேலும் சிறப்பித்தனர். 

பொறிக்கப்பட்ட நகைகள் என்றும் அழைக்கப்படுகின்ற ஜடாவ் நகைகள் கூடுதல் மினுமினுப்பிற்காக, பெரும்பாலும், அதிக காரட் மற்றும் மஞ்சள் தங்கத்தில் உருவாக்கப்பட்டன. ஆபரணங்களின் பின்புறத்தில் மீனாகரி வேலைப்பாடு இல்லாத நகைகளில், 22-காரட் தங்கமும் பயன்படுத்தப்படலாம்.

இந்தியாவிலேயே 24-காரட் தங்கத்தில் ஜடாவ் வேலைப்பாடுகள் செய்யப்படுகின்ற ஒரே இடம் என்ற பெருமையை பிகானேர் பெற்றுள்ளது. இந்த நகரமானது 15,000 க்கும் மேற்பட்ட திறன்மிகு ஜடாவ் கைவினைஞர்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

ஜடாவ் நகைகளின் உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள செயல்முறை

தங்கத்தில் வெறும் 4 - 5 கற்கள் பதிப்பதற்கு மட்டுமே ஒரு நாள் முழுவதும் தேவைப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஒரு ஜடாவ் நகையை உருவாக்குவதற்கு பெருமளவிலான அர்ப்பணிப்பு, மற்றும் கவனம் தேவை. இதன் உருவாக்கத்திற்கு பயிற்சி பெற்ற நகை உற்பத்தியாளர்கள் அடங்கிய குழு அவசியம். இவர்கள் ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமான பணி ஒப்படைக்கப்பட்டிருக்கும்.

முதலில், நகையின் வடிவமைப்பு செதுக்கப்படும். இரண்டாம் கட்டத்தில், தங்கத்தில் துளைகள் மற்றும் செதுக்கல்கள் உண்டாக்கப்படும். கற்கள் பதிக்கப்படுவதற்கு முன், தங்கம் உருக்கப்பட வேண்டும். தங்கம் குளிர்ந்தவுடன், கற்கள், அவற்றின் இடங்களில் பொருந்தும். எனாமலிங் என்ற மூன்றாவது மற்றும் இறுதி கட்டத்தில், மீனாக்கரி கைவினைஞர், ஆபரணத்தின் பின்புறத்தை வண்ணங்கள் சேர்த்து மெருகேற்றுவார்.

பாரம்பரிய ஜடாவ் நகைகள் ஃபேன்ஸியாகவும், விரிவான வேலைப்பாடுகளுடன் இருக்கும் நிலையில், புதியத் தலைமுறை கைவினைஞர்கள், இளம் தலைமுறையினரால் விரும்பப்படும் சமகால பாணிகளுக்கு மாறி வருகின்றனர். எப்படி இருப்பினும், ஜடாவ் நகைகள், அவற்றை அணிபவருக்கு ராயல் தோற்றத்தை அளிக்கின்ற காரணத்தால் இந்தியர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது மற்றும் திருமணம் மற்றும் பண்டிகைகள் போன்ற விசேஷ மற்றும் மங்களகரமான தருணங்களின் போது விரும்பி வாங்கப்படுகிறது.

தொடர்புடையவை: மனம் மயக்கும் கோல்டு ஃபிலிக்ரீ ஜுவல்லரி
Sources:
Source 1, Source 2, Source 3