Published: 20 பிப் 2018

நம்பிக்கை சார்ந்த ஒரு விஷயம்

Religious significance of gold

நம்பிக்கை உள்ள ஒரு நபராக இருப்பது ஆழமான தனிப்பட்ட அனுபவமாக இருக்கலாம் என்றாலும், அது பெரும்பாலும் கூட்டு அனுபவமாகவும், சமுதாய அனுபவமாகவும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் நடைமுறையிலுள்ள பல நம்பிக்கைகள் தங்கத்துடன் அதன் சொந்த பிணைப்பைக் கொண்டுள்ளன மற்றும் முழுமையான நம்பிக்கை கொண்டவர்கள் அதை விலைமதிப்பற்ற, அழிவற்ற மற்றும் மிக அழகான ஒரு உலோகமாக பார்ப்பதில் ஆச்சரியம் குறைவே.

இந்திய வேதங்களில் தங்கத்தைப் பற்றிய தொடக்கக் கால குறிப்புகள் ரிக் வேத சம்ஹிதாவில் வேள்விச் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களில் பயன்படுத்தப்படும் தங்கப் பாத்திரங்களைப் பற்றிய விளக்கத்தில் வருகிறது. மற்றொரு புராதன இந்து நூலான அர்த்த சாஸ்திரம் தங்கத்தை “தாமரையின் நிறத்தைக் கொண்டது, மென்மையானது, பளபளப்பானது சத்தம் எதையும் உண்டாக்காது” என்று விளக்குகிறது. இந்த நூல்களுடன் இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட நாட்டுப்புற வழக்கில் மற்றும் புராணங்களில் தங்கத்தின் மதிப்பு தேவைக்கும் அதிகமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது – அவை நாகரிகங்கள் இந்த உலோகத்தை எப்படிப் பயன்படுத்தின என்பதற்கான குறிப்பிடத்தகுந்த வரலாற்று அடையாளங்களாக இருக்கின்றன. ‘அக்ஷய திரிதியா’ பண்டிகை, இந்துக்கள் மற்றும் ஜைனர்கள் இருவராலும் வெவ்வேறு காரணங்களுக்காகக் கொண்டாடப்படுகிறது. இரண்டு சமூகங்களும் இந்த மங்களகரமான நாளை புதிய தொழில்களைத் தொடங்கவும் மற்றும் அதிக அளவில் தங்கம் வாங்கினால் செல்வ வளம் பெருகும் என்கிற நம்பிக்கையிலும் உகந்த நாள் என்று கருதுகின்றனர்.

மதிப்பு மற்றும் அழகுடனான தங்கத்தின் தொடர்பு இந்தியாவின் சில புகழ்பெற்ற கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் கட்டிடக்கலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சூசன் விஸ்வநாதன் என்கிற எழுத்தாளரால் எழுதப்பட்ட தி கிறிஸ்டியன்ஸ் ஆஃப் கேரளா என்னும் புத்தகம் கேரள சிரியன் கிறிஸ்துவர்களின் பொருள் மற்றும் சடங்குகள் சார்ந்த வாழ்க்கையை முறையைப் பற்றிய ஒரு இனக்குழுவியல் புத்தகமாகும். விஸ்வநாதனின் புலமை மூலம் இந்த மதப் பற்றுள்ள கேரள கிறிஸ்துவ சமூகத்தினரின் கலாச்சார வாழ்க்கை முறை இந்து மத தத்துவ வேர்களைக் கொண்ட வாழ்க்கை மரபுகளுடன் ஆழமாக ஒரு புள்ளியில் சந்திக்கின்றன என்பதை அறிகிறோம். இது இரண்டு குழுக்களும் தங்கத்துடன் பகிர்ந்து கொண்ட கலாச்சாரத் தொடர்புகளை சுட்டிக்காட்டுகிறது. இது காலனிய ஆதிக்கத்தை எதிர்கொள்வதற்கு முன் குறைந்தபட்சம் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே தொடங்கியிருக்க வேண்டும்.

இந்த முழு வரலாறு தங்கத்தை வேள்விகளில் படையலாக மதிப்பிடும் நமது புரிதலின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பல பக்தர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் கோயில்களுக்கு வழக்கமான அடிப்படையில் தங்கத்தை வழங்குகின்றனர். இதனால் கோயில்களில் தற்போது குறிப்பிட முடியாத அளவு இந்த உலோகம் சேர்ந்திருக்கிறது. கோயில் நிர்வாகக் குழுவினர் அதை கோயில் மற்றும் அறக்கட்டளை நடவடிக்கைகளைப் பராமரிக்கப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில், தூய, அளவிட முடியாத பக்தியின் அடிப்படையில் தெய்வங்களின் அருளைப் பெற முடியும் என்பதை நாம் புரிந்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், நாம், நமது பக்தியை தங்கத்துடன் இணைத்து சமர்ப்பிக்க விரும்புகிறோம்.