Published: 31 ஆக 2017

மும்பையில் மிடாஸ் டச்

'மிடாஸ் டச்' குறித்து சாதாரணமாக கூகுளில் தேடினால், மும்பையில் 15 இடங்களைக் காண்பிக்கும். அந்த அனைத்து நிறுவனங்களும் - ஏற்றுமதி, விளம்பரம், அழகு நிலையம், வீடியோ தயாரிப்பு மற்றும் மென்பொருள் போன்ற பல்வகைப்பட்ட செயல்பாடுகளில் ஈடுபடுபவைகளில் உள்ளடங்கும்.

'மிடாஸ் டச்' என்ற வார்த்தை தங்கத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது என்பதால், இந்த எல்லா வணிக நிறுவனங்களும் மிகவும் நன்றாக செயல்படுகின்றன என்று ஊகிக்கப்படுகிறது. மேலும், இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் ஊழியர்கள் ஆகியோர் தங்கள் நிறுவனங்களுக்கு இந்தக் குறிப்பிட்ட தங்கமான பெயரை உண்மையிலேயே விரும்புவதாகக் கருதப்படுகிறது.

மிடாஸ் அல்லது மிடாஸ் டச் ஆகியவற்றில் நாம் எதை தவறவிட்டோம்; நிச்சயமாக மிடாஸ் என்பது தங்கத்தைக் குறிப்பது அல்ல.

கிரேக்க புராணத்தின் படி, இன்றைய துருக்கி நாட்டில் உள்ள ப்ரிகியா என்ற பகுதியின் மன்னர் மிடாஸ் ஆவார். மது மற்றும் திராட்சை அறுவடைக்கான கிரேக்க கடவுளான டியோனிஸஸ் என்பவர் மிடாஸுக்கு சில வரங்களை அளித்து தேர்ந்தெடுக்குமாறு கூறினார். தான் தொட்டதெல்லாம் தங்கமாக மாற வேண்டும் என்று மிடாஸ் கேட்டார். உடனே, மிடாஸ் தன்னுடைய புதிய ஆற்றலை சோதிக்க விரும்பினார்.

புராணத்தின்படி, அவர் முதலில் ஒரு ஓக் மரக்கிளையையும், பின்னர் ஒரு கல்லையும் தொட்டார், அவை இரண்டும் தங்கமாக மாறியது. மிகவும் மகிழ்ச்சியடைந்த அவர், வீட்டிற்கு வந்தவுடன், தனது ரோஜா தோட்டத்திலுள்ள ஒவ்வொரு ரோஜாவையும் தொட்டார், அவை அனைத்துமே தங்கமாக மாறியது. மேஜை மீது விருந்துக்கு ஏற்பாடு செய்யும்படி அவர் பணியாளர்களுக்குக் கட்டளையிட்டார். ஆனால், பசியில் இருந்த மிடாஸ், தான் தொடும் உணவும், தண்ணீரும் தங்கமாக மாறியதை உணர்ந்தபோது, தனது ஆசை குறித்து வருந்தினார் மற்றும் அதை சபித்தார்.

மூன்றாவது நூற்றாண்டைச் சேர்ந்த லத்தீன் கவிஞரான கிளாடியஸ் கிளாடியானஸ், மிடாஸின் இக்கட்டான நிலையைப் பற்றி பின்வருமாறு எழுதினார். "தான் தொட்ட அனைத்தும் தங்கமாக மாற்றுவதை உணர்ந்தபோது, முதலில் பெருமையுடன் மிடாஸ் இருந்தார். ஆனால் அவரது உணவு கடினமாக மாறியதையும், தண்ணீர் தங்க பனிக்கட்டிகளாக உறைந்ததையும் உணர்ந்தபோது, தனது வரம் ஒரு சாபம் என்பதைப் புரிந்துகொண்டார். தங்கத்தின் மீதான வெறுப்பு காரணமாக, மிடாஸ் தனது வரம் குறித்து நொந்தார்."

பிறகு, மிடாஸின் மகள் அவரிடம் வந்து, ரோஜாக்கள் அனைத்தும் வாசனை இழந்து, கெட்டியாக உறைந்தது குறித்து வருத்தமாகக் கூறினார். மிடாஸ் தனது மகளை சாந்தப்படுத்துவதற்காக, அவரைத் தொட்டவுடன், அவரும் தங்கமாக மாறினார். கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டிலின் கருத்துப்படி, தொட்டதெல்லாம் தங்கமாக மாற வேண்டும் என்ற அவரது "வீணான பிரார்த்தனையின்" விளைவாக மிடாஸ் பட்டினியால் இறந்தார்.

நிச்சயமாக, மும்பை தொழிலதிபர்கள் இந்தப் புராணத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை!