Published: 17 ஆக 2017

இலங்கை என்ற தங்க நகரத்திற்குப் பின்னால் உள்ள கதைகள்

Lanka City of Gold

இராமாயணம் என்னும் இதிகாசத்துடன் தொடர்புடைய பல்வேறு நினைவுகள் உள்ளன. குழந்தைகளாக இராம லீலாவிற்கு செல்வதானாலும் சரி, தசராவின்போது இராவணனின் கொடும்பாவியை எரிப்பதைக் காண்பதானாலும் சரி, இராமாயணம் தொடர்பான நினைவுகள் நமக்கு எப்போதும் இருக்கும். இந்தியாவின் மிகவும் பிரியமான உலோகமான தங்கம், இலங்கையின் கதையில் பெரும்பங்கு வகிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? இராவணனின் வாழ்விடமான இலங்கை நகரம் தங்கத்தாலேயே செய்ப்பட்டது. அதனால்தான் இந்த நகரத்திற்கு ‘இலங்கை என்ற தங்க நகரம்’ என்று பெயர்.

இந்த இராட்சத மன்னன் எவ்வாறு இலங்கையை கைப்பற்றினான் என்பதற்கு இரண்டு மாதிரியான கதைகள் உள்ளன.

இந்து புராணங்களின்படி, இலங்கை என்ற தங்க நகரம், பிரபஞ்சத்தின் முதன்மை கட்டிடக்கலைஞரான , பகவான் விஷ்வகர்மாவால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. சிவபெருமான் தானும் தனது மனைவி பார்வதி தேவியும் தங்கள் திருமணத்திற்குப் பிறகு வாழ்வதற்காக ஓர் அழகிய அரண்மனை வேண்டும், அந்த அழகிய அரண்மனையை விஷ்வகர்மா கட்டித்தர வேண்டும என்று விஷ்வகர்மாவிடம் கேட்டுக்கொண்டார். அதன்படி தங்கத்தால் ஆன ஓர் அழகிய அரண்மனையை விஷ்வகர்மா வடிவமைத்துக் கொடுத்தார்.

Lord Vishwakarma On Golden Throne
Image Source: Source

இந்த அரண்மனை தயாரான பிறகு, அந்த நகரின் கிரகப்பிரவேசம் அல்லது வீட்டு நலனுக்கான சடங்கினை நடத்த ஒரு புரோகிதர் அழைக்கப்பட்டார். அந்த புரோகிதர் வேறு யாரும் அல்ல, நன்கு கல்வி பெற்ற இராவணன்தான் !. அவன் இராட்சத மன்னன் ஆவதற்கு முன்னால், பிராமண இராவணன் நல்ல கல்வியாளனாக அறிவாளியாகத் திகழ்ந்தான். அவன் இலங்கையைக் கண்ட போது, அதன் அழகினால் கவரப்பட்டான். தான் செய்த பூஜைக்கு பரிசாக, தட்சிணையாக அவன் அந்த அரண்மனையைக் கேட்டான். சிவபெருமானும் அவன் கேட்டதைப் பரிசாக வழங்கினார். இது ஒரு கதை.

மற்றொரு கதையின்படி, இராவணன் தனது சிற்றன்னையின் மகனான குபேரனுடன் போர் புரிந்து வெற்றி பெற்று இலங்கையைக் கைப்பற்றினான். உண்மையில், புஷ்பக விமானம் என்று அழைக்கப்படும் தங்க இரதமும் குபேரனுடையதுதான் . இராவணனின் உண்மையான பாவமான பேராசை அவனது விதியை எழுதியது என்பது சுவாரஸ்யமான உண்மை. தன்னிடம் புஷ்பக விமானம் இருந்ததால்தான் இராவணனால் சீதையைக் கடத்தி வந்து, விரைவில் இலங்கையில் சிறை வைக்க முடிந்தது.

Golden Chariot Of Ravana
Image Source: Source
தொடர்புடையது: குபேரனைக் கண்டுபிடித்தல்: கடவுள்களின் கருவூலர்

நாம் அனைவரும் அறிந்தபடி, இராவணன் சீதையைக் கடத்திச் சென்றதால் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பட்டன. அவற்றுள் ஒன்று பகவான் அனுமன் இலங்கைக்குப் பயணித்தது. தனது வாலினால் அந்த ஒட்டுமொத்த நகரத்தையும் தீக்கு இரையாக்கிய அந்த வானர கடவுள் அனுமான், முதன்முதலாக அந்த தங்க நகரத்தைக் கண்டதும் ஸ்தம்பித்துப் போனான். அந்த நகரம் தங்கத்தினால் செய்யப்பட்டதால் அதனைத் தாக்குவது மிகவும் சிரமம் என்று இராமரிடம் அனுமார் கூறினார். இந்த ஒட்டுமொத்த நகரமும் தங்கத்தினால் செய்யப்பட்டதால், அந்த நகரைச் சுற்றி ஒரு சுவர் இருந்தது. அந்த சுவரும் தங்கத்தால் ஆனது. அந்தச் சுவருக்குப் பின்புறம், பல்வேறு விலைமதிப்புள்ள கற்கள், பவளங்கள், முத்துக்கள் ஆகியவை நகரெங்கும் பரவி இருந்தன . அங்கு ஒரு இழுவைப் பாலம் இருந்தது. அந்த பாலம் அசைக்க முடியாத அளவிற்கு உறுதியாக இருந்தது. அதன் தூண்கள் தங்கத்திலேயே இருந்தன.

Golden City Of Lanka
Image Source: Source

இராவணனைத் தோற்கடித்து, இராமர் சீதையைக் காப்பாற்றினார். அதே புஷ்பக விமானமான, தங்க இரதத்தில் இராமர் சீதையை அழைத்துக் கொண்டு அயோத்திக்கு விரைந்தார்.

இலங்கை குறித்த எல்லா கதைகளிலும் ஒரு கேள்வி மிஞ்சுகிறது, இத்தகைய நகரம் உண்மையிலேயே இருந்ததா? நவீன காலத்தின் இலங்கைதான் இராவணனின் இலங்கை என்று பெரும்பபான்மையான மக்கள் நம்பினாலும், இது குறித்து நிறைய விவாதங்கள் உள்ளன. அறிக்கைகளின்படி உண்மையான இலங்கை மேற்கு ஒரிசாவில், சோனிபூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ளது. எதுவுமே உத்தரவாதமாகத் தெரியாது. இருப்பினும் இலங்கை என்றாலே இராவணனின் அரண்மைனை. உண்மையில் தங்க நகரமான இலங்கைதான் என்ற நம்பிக்கை மட்டம் உண்மை.

Sources:

Source1, Source2Source3Source4Source5