Published: 27 செப் 2017

பொருளாதாரத்தில் தங்கத்தின் பங்கு குறித்து மறுபரிசீலனை செய்தல்

இன்றைய காலகட்டத்தின் பெரும்பாலான நவீன பொருளாதார வல்லுநர்கள், தங்கத்தை ஒரு பொருளாகப் பார்க்கின்றனர்; காகிதப் பணம் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தும், பணத்திற்கு சமமாக உங்கள் கணினியைப் பயன்படுத்தும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் (நீங்கள் ஆன்லைனில் சென்று உங்கள் கட்டணத்தை செலுத்துகையில், அல்லது ஆன்லைன் வங்கிச் சேவையில் ஈடுபடுகையில்) காரணமாகவும், தங்கம் ஆனது பணமாகப் கருதப்படும் ஒரு மதிப்புள்ள பொருளாகும்.

1991-ல், சில வாரங்களுக்கு மட்டுமே எண்ணெய் போன்ற இறக்குமதிகளை செய்ய முடியும் என்ற நிலையில், இந்திய அரசாங்கத்திடம் போதுமான அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாமல் பொருளாதாரம் தத்தளித்துக் கொண்டிருந்த பொழுது, நாம் பணத்தைப் பெறுவதற்காக நமது தங்கக் கையிருப்புக்களின் ஒரு பகுதியை பிணையமாக அளிக்க வேண்டியிருந்தது, அது நமது வர்த்தகத்திற்காக செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களை நம்மால் செலுத்த முடியும் என்று உலக வங்கியாளர்களிடையே நம்பிக்கையை மீட்டெடுத்தது.

போர்கள் மற்றும் கிளர்ச்சிகள், பேரரசுகள் மற்றும் அரசாங்கங்களின் மாற்றங்கள் மற்றும் நெருக்கடி காலங்கள் ஆகியவற்றில் தங்கம் மட்டுமே தனது மதிப்பை தக்க வைத்திருக்கிறது என்பதை வரலாறு காட்டுகிறது. அதிகாரப்பூர்வமாக தங்கம் மட்டுமே தொழில்துறை மதிப்பு கொண்டது ஆகும்; ஆனால் அது உலகின் பழமையான மற்றும் மிகவும் மரியாதைக்குரிய செலாவணியாகும், மேலும் தேசிய காகிதப் பணங்கள் மதிப்பை இழக்கும் பொழுது, அது மட்டுமே மதிக்கப்படக்கூடும்.

இந்தியாவில் குடும்பங்கள் மற்றும் தனிநபர்களால் வைத்திருக்கப்படும் தங்கம் என்பது பல மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகளின்படி, இதுவரை வெட்டியெடுக்கப்பட்டுள்ள மொத்தத் தங்க நகைகளில் சுமார் 10 சதவீதம் அளவுக்கு உள்ளது. நகைகள், நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகள் ஆகிய வகைகளில் சுமார் 24,000 மெட்ரிக் டன் உள்ளது. சில நேரங்களில், இந்திய அரசாங்கமானது தனிநபர்கள் வைத்திருக்கும் நகைகளில் ஒரு பகுதியை பணமாக மாற்ற முயல்கிறது, ஆனால் அது அதிகமான வெற்றி பெறுவதில்லை.

தங்கமாக சேமித்து வைத்திருக்கும் சேமிப்புகளை முதலீட்டு மூலதனமாக மாற்றினால், அது இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புக்களில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தக் கடினமான உலகளாவிய பொருளாதார நிலைமைகளில், சரிபார்க்கப்படாத தங்கத்தின் இறக்குமதியின் தாக்கம், மற்றும் நாட்டின் நடப்புக் கணக்கு மற்றும் வர்த்தக சமநிலையில் ஏற்படும் தாக்கம் ஆகியவை பற்றி இந்தியாவில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் கவலைப்படுகின்றனர். இருப்பினும், தங்கத்தை மற்றுமொரு பொருளாக நினைப்பது அதற்கான பதிலாக ஆகாது.

எல்லாவற்றிற்கும் மேலாக, மேற்கு உலகிலும், கிழக்கிலும் தங்கம் குறித்த மனப்போக்குகள் வேறுபடுகின்றன. குறிப்பாக, அமெரிக்காவில், தங்கமானது பணம் என்று குறிப்பிடப்படுகிற போது, அவர்கள் அதை சந்தேகிக்கிறார்கள் மற்றும் அதைக் கேட்டு வெறுப்படைகிறார்கள். எனினும், கிழக்கு நாடுகளில், நாடுகள் மற்றும் தனிநபர்கள் ஆகியோர் செல்வத்தின் சேமிப்பாக தங்கத்தைக் குவிக்கின்றனர்; இந்தியா போன்ற சில நாடுகளில் இது பெரிதும் மதிக்கப்படுகிறது.

நடத்தைப் பொருளாதாரம் என்பது சார்புகளை அடையாளம் காண்கிறது, மேலும், அவை எவ்வாறு பொருளாதார நடத்தையைப் பாதிக்கின்றன என்பதை விளக்குகின்றன. தங்கம் தொடர்பான பாதுகாப்பான மதிப்பு சார்பு என்பது அத்தகைய ஒரு சார்புநிலை ஆகும்; மஞ்சள் உலோகமானது சிக்கலான காலகட்டங்களில் மிக அதிக பாதுகாப்பை அளிக்கிறது. இந்த வேறுபாடானது நிச்சயமற்ற தன்மைக்கு எதிரான முதலீட்டாளர்களின் முடிவை பிரதிபலிக்கிறது.

பொருளாதாரம், கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றில் தங்கம் தொடர்பான நேர்த்தியான மற்றும் சிக்கலான உறவைப் பொருத்தவரையில், அது அவர்களின் நடத்தைகளை பாதிக்கிறது. மேலும், தங்கமானது நமது பொருளாதாரத்தில் வகிக்கும் பங்கு குறித்து மறுபரிசீலனை செய்வதை அர்த்தமுள்ளதாக்குகிறது.