Published: 08 செப் 2017

தென்னிந்தியாவில் தங்கத்தின் முக்கியத்துவம்

தங்கத்தின் மீதான இந்தியாவின் காதல் இரகசியமானது அல்ல. ஆனால் தென்னிந்தியா என்று வரும்போது இந்த தலைப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

ரோமானிய சாம்ராஜ்யத்தின்போது, கொச்சினிலிருந்து பல்வேறு வகையான வாசனை திரவியங்களை வாங்குவதற்கு தங்கம் நாணய மாற்றாகப் பயன்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமா?

நெடுங்காலமாகவோ, தென்னிந்திய கலாச்சாரங்களில் தங்கம் முக்கிய பங்காற்றியுள்ளது. அவர்களது பாரம்பரியத்திற்கு செல்வத்தை சேர்த்துள்ளது.


தங்கம் மற்றும் பண்டிகைகள்

கேரளா புத்தாண்டான விசுவில் தங்கம் என்ற உலோகம், அதன் நிறம் ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன. விஷூகன்னியை அலங்கரிக்க தங்கம் பயன்படுகிறது. தங்கம், பூக்கள், பழங்கள், தானியங்கள் மற்றும் பல பொருட்களைச் சேர்த்து விஷூகண்ணி அலங்கரிக்கப்படுகிறது. வரும் ஆண்டில் உங்கள் வாழ்க்கையில் தெய்வீக செல்வமும் வளமையும் வருவதற்கு விஷூகன்னியுடன் உங்கள் கண்களைத் திறந்து வைத்திருங்கள்.

தமிழ்நாட்டில் பெரும் உத்வேகத்துடனும் ஆடம்பரத்துடனும் ‘அக்ஷய த்ரிதியை’ கொண்டாடப்படுகிறது. தங்கம் வாங்குவதற்கு இந்த நாளை மிகவும் புனிதமான நாளாக மக்கள் கருதுகிறார்கள். திருமணம் மற்றும் இதர வைபவங்கள் இந்த நாளில் நடக்க வேண்டும் என்ற விரும்புகிறார்கள். ஒருவரது வாழ்வில் மகிழ்ச்சியையும் வளமையையும் உண்டாக்க இந்த பயிற்சி அவசியமாகிறது. எனவே இந்த நன்னாளில் மக்கள் தங்க ஆபரணங்களை வாங்குகிறார்கள்.அவர்களுக்குப் பிரியமானவர்களுக்கு அனுப்புகிறார்கள். தேவைப்படுவோருக்கு நன்கொடையாகவும் அளிக்கிறார்கள்.

தொடர்புடையது: தங்கம் சரியான பரிசாக உள்ள 8 தருணங்கள்


தங்கமும் திருமணங்களும்

2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலக தங்க கவுன்சிலால் வெளியிடப்பட்ட இந்திய தங்க அறிக்கையின்படி, கேரளாவில் உள்ள ஒரு மணமகள் அணிந்திருக்கும் தங்கத்தின் எடை சராசரியாக 320 கிராம்களாக இருக்கும். தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள மணமகள்கள் சராசரியாக தங்கள் திருமண நாளின்போது 300 கிராம் தங்கம் அணிகிறார்கள்.

தென்னிந்திய மணமகள்கள் தங்கள் திருமண நாளன்று உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளார்கள். மணமகளுக்கு அவளது பெற்றோர் அவளது திருமணத்திற்காக கணிசமான அளவு தங்கத்தைப் பரிசாக அளிக்கிறார்கள். இந்த வகையில் பெற்றோர்கள் தங்கள் மகளின் எதிர்காலத்தை அவளுடைய புதிய வீட்டில் உறுதி செய்கிறார்கள்.

கசவு புடவைகள் தங்க எம்பிராய்டரிகளுடன் வருபவை. தென்னிந்திய மணமகளின் பிரபலமான உடை. அந்த சிறப்பு நாளில் அந்த மணமகள் தங்கத்தால் மினுமினுத்து தேவதை போல் காட்சி அளிப்பாள்.

மந்திரகோடிக்கள் என்று கேரளாவில் மற்றொரு முறை உள்ளது. மணமகனின் குடும்பம் மந்திரகோடி என்ற புடவையை வாங்கும். இந்த புடவை தங்கத்தால் எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருக்கும். இந்த புடவையில் உள்ள நூல்கள் எடுக்கப்பட்டு மணமகளின் கழுத்தை சுற்றி மங்கலசூத்திரமாக அணியப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள மங்கலசூத்திரத்திற்கு தாலி என்று பெயர். இந்த தாலியின் எடை 4லிருந்து 8 கிராம்களுக்குக் கிடைக்கும். தங்க சங்கிலியுடன் அணியும்போது பல்வேறு பொருட்களும் சேர்ந்து அணியப்படுகிறது. சில பொற்காசுகள், சில குண்டுகள் மற்றும் பொட்டுக்கள் தாலியுடன் சேர்த்து அணியப்படுகின்றன.

தாலியில் உள்ள ஒவ்வொரு வடிவமும் நோக்கமும் ஏதோ ஒன்றை விளக்கும். எடுத்துக்காட்டாக, தாலியில் உள்ள சிவ லிங்கம் வாரிசு உருவாவதைக் குறிக்கும். துளசி தூய்மையைக் குறிக்கும்.

ஆந்திர பிரதேசத்தில் உள்ள மங்கல சூத்திரா, தங்கத்தால் செய்யப்பட்ட இரண்டு நாணயங்களைக் கொண்டது. இந்த தெலுங்கு மங்கல சூத்திரத்திற்கு புஸ்தேலு என்று பெயர். பாரம்பரியத்தின்படி, இந்த தங்க நாணயங்கள் மணமகளின் வீட்டிலிருந்து வரும். மற்றவை மணமகள் வீட்டிலிருந்த வரும். இவை இரண்டையும் மணிகளால் பிரித்துவைக்கலாம்.


தங்கமும் பண்டிகைகளும்

அன்னப்ரஷானிஸ் ( Annaprashanis) அல்லது நூல் பண்டிகைகள் ஒரு தென்னிந்திய பாரம்பரியம். இதில் உறவினர்களும் நண்பர்களும் விருந்து அளிப்பவர்களுக்கு தங்க நகைகளை பரிசளிப்பார்கள். அன்னப்ரசன்னம் என்பது குழந்தைக்கு முதல் முதலாக திட உணவு அளிக்கும்போது கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்த பண்டிகையின்போது குழந்தையின் தந்தை ஒரு தங்க மோதிரத்தை ஒவ்வொரு உணவுப் பொருளிலும் மூழ்கி எடுப்பார். இந்த மோதிரம் பின் குழந்தையின் நாக்கில் வைக்கப்படுகிறது.


தங்கமும் நகைக்கடைக்காரர்களும்

இந்தியாவில் உள்ள பெரிய நகை வியாபாரிகள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். தங்கத்தின் வினியோகம் அதிகரிக்கும்போது இந்த நகை வியாபாரிகள் தங்கத்தின் தேவையை சமாளிப்பார்கள். இதனால்தான் போட்டியிடக்கூடிய விலை தங்கத்திற்குண்டு. கேரளாவில் தங்கம் எந்த அளவிற்கு தேவைப்படுகிறது என்றால் கொச்சினில் ஒரு தங்க சௌக் க்ராண்டே அமைக்கும் அளவிற்கு தேவைப்படுகிறது. இது துபாயில் உள்ள உலகப்பிரபலமான தங்க சௌக்கிற்கு இணையானது.

அடுத்த முறை நீங்கள் தங்கத்தை வைத்திருக்கும்து, தங்கத்திற்கும் உங்களுக்கும் உள்ள நீண்ட கால தேவையைக் கருத்தில் கொள்ளுங்கள். இந்த பந்தமானது எல்லாவிதமான எல்லைகளையும் கடக்கும்.

தங்க சந்தைக்கு மிகவும் பிரபலமான மாநிலங்கள் கேரளாவும் தமிழ்நாடும். இந்த இரண்டு மாநிலங்களும் இந்தியாவின் பெரிய தங்கச் சந்தைகள் . தென்னிந்தியா தங்கத்தின் சந்தைப் பங்கில் 40% பெற்றுள்ளது. கிழக்கு மேற்கு இரண்டையும் இணைத்தாலும் இந்த தொகை கிடைக்காது.

Sources:

Source1, Source2, Source3, Source4, Source5, Source6, Source7, Source8, Source9, Source10, Source11, Source12, Source13, Source14