Published: 20 பிப் 2018

சிவனின் திரிபுரா விமானம் – தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றமடைந்த புராதன பறக்கும் இயந்திரம்

Lord Shiva’s Tripura Viman

நமது பண்டைக் காலத்தில் சர்வசாதாரணமாக வான்வழி போர்களும் துரத்தல்களும் நிகழ்ந்துள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? நம்முடைய புராதன இந்திய காவியங்களை படிக்கும் போது ஃப்ளாஷ் கோர்டன், பக் ரோகர்ஸ் மற்றும் ஸ்டார் ட்ரெக் போன்றவை குறைந்த தரமாகக் காணப்படும் என்று நாங்கள் பந்தயம் கட்டுகிறோம்! எனவே, புராதனக் காலத்தில் விண்கப்பல்கள் உண்மையில் இருந்ததா? அவை பார்ப்பதற்கு எப்படி தோற்றமளிக்கும்? மஹாபாரதத்தில் ’விமானா’ என்பது இரும்பாலான பக்கங்களுடன் இறக்கைகள் தரித்த ஒரு வான்வழி ரதம் என்று குறிப்பிடப்படுகிறது. மாயா என்ற அசுரன் 12 முழ விட்டம் கொண்ட ஒரு பறக்கும் வட்டை ஓட்டினான். இராமாயணம் அதை மேற்கூரை மண்டபம் மற்றும் துவாரங்களைக் கொண்ட இரட்டை அடுக்கு வட்ட ஆகாய விமானம் என்று விவரிக்கிறது. அசுரர்களின் மன்னன் இராவணன் ஓட்டிய அந்த வான்வழி ரதம் பார்ப்பதற்கு “வானத்தில் ஒரு பிரகாசமான மேகம்” போல தோற்றமளிக்கும்.

கி.மு. 4 வது நூற்றாண்டில் மஹரிஷி பரத்வாஜரால் எழுதப்பட்ட வைமானிகா சாஸ்திரம் 1875 இல் ஒரு இந்தியக் கோயிலில் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது. அது விமானங்களை எப்படி இயக்குவது, நீண்ட விமானப் பயணங்களின் போது எடுத்துக் கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள், விண்கப்பல்களை எப்படி பாதுகாப்பது என்பதைப் பற்றிய மற்றும் பல விஷயங்களைக் கொண்ட ஒரு விரிவான கையேடு ஆகும். மேலும் ரிக் வேதம் மனிதர்களை சொர்க்கத்திற்கு சுமந்து செல்லும் “தங்க இயந்திரப் பறவைகள்” பற்றிப் பேசுகிறது. காற்றைப் போல அதே அளவு வேகத்தில் பயணிக்கும் திரிபுரா அல்லது திரிபுராஜித் விமானம் உள்ளது. அது உண்மையில் இறைவன் சிவனுக்காகக் கட்டமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. விமான சாஸ்திரத்தின் படி, இந்த விமானம் மூன்றடுக்குகளைக் கொண்ட சூரிய ஒளிக்கதிர்களின் உந்து சக்தியால் இயங்கும் மிகப்பெரிய பறக்கும் விண்கலம் ஆகும். இது மிக நீளமான வடிவம் கொண்டது, நவீன வேவு பார்க்கும் விமானத்தை ஒத்தது.

இதில் 3 ஆவரணங்கள் அல்லது இணைப்புகள் அல்லது வரிசைகள் உள்ளன. ஒவ்வொரு ஆவரணமும் ‘புரா’ என்றழைக்கப்படுகிறது. அது மூன்று ஆவரணங்களை கொண்டிருப்பதால் திரிபுர விமானம் என்றழைக்கப்படுகிறது. மூன்று ஆவரணங்களில் ஒவ்வொரு ஆவரணமும் அதன் கட்டமைப்பை மாற்றியமைத்து கடல், நிலம் மற்றும் ஆகாயத்தில் இயற்கையாக பயணம் செய்ய அனுமதிக்கிறது. இந்த பகுக்கக்கூடிய விமானம் திரிநேத்ர லோஹா எனப்படும் உலோகத்தால் தயாரிக்கப்படுகிறது. விமானிக சாஸ்திரத்தைப் பொறுத்த வரை, முதல் பகுதி 100 அடி அகலம், 3 அடி தடிமன், வட்ட அல்லது சதுரமான 80 அடி நீளமான, 3 அடி அகலமான, 5 அடி உயர படகு வடிவ வானூர்தி நீரில் பயணிக்க அனுமதிக்கிறது. இருந்தாலும், இந்த விமானத்தை நிலத்தில் பயணம் செய்ய அனுமதிப்பதற்காக சக்கரங்களை வெளிப்படுத்தும் ஒரு அமைப்பு இருக்கிறது. இரண்டாவது தளம் 80 அடி அகலமும் மற்றும் 3 அடி தடிமனும் கொண்டது, முதல் பகுதியை விட சற்று சிறியது. இந்த உயர் தொழில்நுட்ப மேம்பாடுகளைக் கொண்ட இந்த விமானத்தில் சூர்யதபோபசம்ஹார யன்த்ரா அல்லது சூரியனின் எரிச்சலிலிருந்து பாதுகாக்கும் இயந்திரம் இருக்கிறது. இதற்கு சூரிய ஒளிக்கதிர்களிலிருந்து கருத்த பொருளை உள்ளிழுத்து அதை எதிரிகளிடமிருந்து விமானத்தை மறைக்க பயன்படுத்தும் திறன் இருக்கிறது. இந்த மறையும் திறன் கூதா என்றழைக்கப்படுகிறது!

எனவே, நாம் இந்த உரைகளை நம்ப வேண்டுமா? பாரம்பரிய வரலாற்று எழுத்தாளர்கள் மற்றும் அகழ்வாராய்ச்சியாளர்கள் அத்தகைய எழுத்துக்களை கற்கால புராதன எழுத்தாளர்களின் இலக்கற்ற சில கற்பனைகள் என்று புறக்கணிக்கின்றனர். அது இருப்பது உண்மையென்றால், அந்த விமானங்கள் எங்கே? அநேகமாக, அது உலகம் முழுவதும் காணப்படுகிறது, யுஎஃப்ஒ என்று பெயரிடப்பட்டுள்ளது!