Published: 10 செப் 2018

வெவ்வேறு வகையான முதலீட்டாளர்களுக்கு வெவ்வேறு தங்க முதலீட்டுத் தேர்வுகள்

நீங்கள் என்ன வகை முதலீட்டாளர்? ஜாக்கிரதையானவர், அபாயங்களை விரும்புகின்றவர், திட்டமிட்டு செயல்படுகின்றவர் அல்லது நன்னம்பிக்கை உடையவர்? நாம் எப்படி முதலீடு செய்கிறோம் என்பதை பல காரணிகள் தீர்மானிக்கின்றன: வயது, பாலினம், குடும்பம், கடந்த கால மற்றும் நிகழ்கால நிதிநிலைகள், மற்றும் வருங்கால இலக்குகள். நம்மில் பலர் முதலீட்டு பிரியராக / அபாய விரும்பியாக இருக்கலாம், சிலர் இப்படி இல்லாமலிருக்கலாம். இந்த அணுகுமுறைகள் மற்றும் எதிர்பார்ப்புகளின் கலவை நாம் எப்படி முதலீட்டை அணுகுகிறோம் என்பதை பாதிக்கிறது.

இங்கே நாம் முதலீட்டாளர்களை நான்கு வெவ்வேறு குழுக்களாக பிரிக்கவிருக்கிறோம், ஒவ்வொன்றையும் அவர்களின் சொந்த குறிப்பிட்ட இணையான பகிர்ந்துகொள்ளப்பட்ட அணுகுமுறைகளை கொண்டு. அங்கே நடத்தையியல், புவியியல் மற்றும் கலாச்சார மாறுபாடுகள் இருந்தாலும், இந்த வகைகளில் உலகளாவிய பொருத்தம் இருக்கிறது. நீங்கள் எந்த வகை முதலீட்டாளர் என்பதைத் தெரிந்து கொள்ள மேலே படியுங்கள், இது தங்கம் எங்கே, எப்படி உங்கள் முதலீட்டு நிதிகளின் ஒரு பகுதியாகிறது என்பதைப் புரிந்துக்கொள்ள உங்களுக்கு உதவக்கூடும்.

 1. ஜாக்கிரதையான பகிர்ந்தளிப்பவர்
  • நிதி சந்தைகளைப் பற்றிய உங்கள் ஞானத்தில் அதீத நம்பிக்கை இல்லாதவர்
  • முதலீட்டு முடிவுகளுக்கு அடுத்தவர்களின் வழிகாட்டுதலை சார்ந்திருப்பவர்
  • பெரும்பாலும் தம்முடைய நிதி மேலாண்மையை மற்றவர்களிடம் ஒப்படைப்பவர்
  • முதலீட்டிற்கு குறைந்தபட்ச அபாயத்துடன் நீண்ட கால முதலீட்டில் நம்பிக்கை கொண்டவர்

  ஒரு தொழிற்துறை ஆய்வறிக்கையின் படி, 17% இந்தியர்கள் ஜாக்கிரதையாக பகிர்ந்தளிப்பவர்கள் – அவர்கள் பெரும்பாலும் நிதி ஆலோசகர்கள் அல்லது வங்கிப் பிரதிநிதிகள் போன்ற தொழிற்முறையாளர்களின் ஆலோசனையைக் கேட்பவர்கள்.

  ஒப்பீட்டளவில் இந்தியர்கள் பெரும்பாலும் அபாயங்களை வெறுப்பவர்கள் ஆனால் அவர்களுடைய சொத்துக்களுக்கு தங்கம் கொடுக்கும் நிலைப்புத்தன்மையை வரவேற்பவர்கள். அவர்களுடைய சொத்துக்களுக்கு பெரும்பாலான சேர்க்கைகள் பரிந்துரைகள் மற்றும் தொழிற்முறையாளர்களின் சாதகமான தகவல்களால் நடக்கிறது.

  இந்த ஆய்வு மேலும் தெரிவிப்பது என்னவென்றால் 37% இந்தியர்கள் திடத் தங்கத்தை வங்கி அல்லது இதர நிதி நிறுவனங்கள் வழியாக கொள்முதல் செய்கிறார்கள்.

  நீங்கள் ஒரு ஜாக்கிரதையான பகிர்ந்தளிப்பராக அடையாளம் காணப்பட்டால், நீங்கள் இந்திய தங்க நாணயத்தில் முதலீடு செய்யலாம். அது அரசாங்கத்தால் அச்சடிக்கப்பட்ட நாட்டின் முதல் தேசிய தங்க நாணயமாகும் மேலும் 24 கேரட் தங்கம் 999 தரம் உறுதி செய்யப்படுகிறது. மூன்று மதிப்புகளில் கிடைக்கிறது (5, 10 மற்றும் 20 கிராம்கள்), இந்தியத் தங்க நாணயத்தை 120 க்கும் அதிகமான நகரங்களில் முக்கிய இந்திய வங்கிகளின் 480 கிளைகளில் வாங்கிக் கொள்ளலாம். இங்கே நீங்கள் தங்க நாணயங்களைப் பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டிய எல்லா விஷயங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

 2. அபாயத்தில் – விரும்பாத எளிமையானவர்கள்
  • குறிப்பாக நிதி சந்தைகளில் ஆர்வமில்லாதவர்கள்
  • நிதி ஆலோசகர்கள் வழக்கமாக அவர்களுடைய சொந்த நிகழ்ச்சிகளை வலியுறுத்துபவர்கள் என்று நினைப்பது
  • அவர்களுடைய கடின உழைப்பில் பெற்ற பணத்தை அபாயத்தை எடுக்க விரும்பாதவர்கள்
  • முதலீடுகளை அவர்களே கையாண்டு மேலும் பழக்கப்பட்ட, தெளிவான மற்றும் எளிய முதலீட்டு தீர்வுகளுக்கு மாறுபவர்கள்

  அபாயத்தை விரும்பாத எளிமையான கணக்கை 16% இந்தியர்கள் வைத்திருக்கின்றனர். அவர்கள் அதிக ‘உரையாடல்’ முறையில் தகவல்களை சேகரிப்பதை விரும்புகின்றனர். சுமார் 61% இந்தியர்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பேசுவர், சுமார் 46% இந்தியர்கள் தகவல்களை சமூக ஊடகங்கள் மற்றும் இணைய மன்றங்களிலிருந்து சேகரிக்கிறார்கள்.

  நீங்கள் அபாயங்களில் விருப்பமற்ற முதலீட்டாளராக அடையாளம் காணப்பட்டால், நீங்கள் திட வடிவத் தங்கத்தில் முதலீடு செய்யலாம். அதன் உறுதிப்பாடு ஒரு பத்திரமான பாதுகாப்பான உணர்வை அளிக்கிறது, மேலும் நீங்கள் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளாமலே எளிதாக முதலீடு செய்யலாம். நீங்கள் தங்க நகைகள் அல்லது சிறிய தங்க நாணயங்களை வாங்கலாம், அவை 0.5 கி குறைந்த அளவுகளில் கிடைக்கிறது.

  இதோ , தங்க நாணயங்களை வாங்குவதற்கான ஒரு வழிகாட்டி

 3. மேம்படுத்தப்பட்ட யுக்திகள்
  • முதலீட்டில் ஒருவித சிலிர்ப்பு இருக்கிறது, இது பெரும்பாலும் ஒரு பொழுதுபோக்கை போன்றது
  • சொந்த அறிவை மதிப்பிட்டு அவர்களின் முதலீட்டு உள்ளுணர்வில் நம்பிக்கையாக இருப்பர்.
  • அவர்களுடைய நிதிகள் தந்திரமான மற்றும் யுக்தியான முதலீடுகளை கொண்டிருக்கும்.
  • அதிகபட்ச வருவாயை பெறுவதை உறுதிசெய்ய வழக்கமாக நிதிகளை மதிப்பீடு செய்தல்
  • மக்கள் அவர்களை செல்வாக்குடையவராகக் கருதுவர்; அவர்களுடைய ஆலோசனையை நாடுவர்
  • பொதுவாக புதிய முதலீட்டுத் தேர்வுகளை பரிசீலிக்கும் வழிக்கு தலைமை வகித்தல்

  இந்த இளம் இந்தியர்கள் அதிகமான ஈடுபாடுடையவர்கள், தொழில்நுட்ப ரீதியாக ஈடுபாடு கொண்டவர்கள், பொருளாதாரம் மற்றும் வியாபாரத்தில் நன்நம்பிக்கை உடையவர்கள். பெரும்பான்மையாக 35% இந்தியர்கள் அதி நவீன வியூகவாதிகள்.

  13% இந்தியர்கள் மட்டுமே தங்கத்தை இணையம் மூலம் வாங்கியிருக்கும் நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் இந்த வகைப்பாட்டைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். உங்கள் எல்லைகளை புதிய, நவீன வழிகளில் தங்கத்தில் முதலீடு செய்வதில் விரிவுபடுத்த விரும்பினால் அப்படி செய்வதற்கு இணையத்தில் தங்கம் வாங்குவது மிக வசதியான ஒரு வழியாகும். இன்றைய நாட்களில், மொபைல் கட்டண செயலிகள் மற்றும் வாலெட்டுகள் டிஜிட்டல் தங்கத்தை தடையில்லாமல் வாங்க வழிவகுக்கிறது. இது 100% பாதுகாப்பானது மேலும் நீங்கள் 99.5% தூய்மை கொண்ட 24 கேரட் தங்கத்தை ஒரு பட்டன் சொடுக்கலில் வாங்கலாம். டிஜிட்டல் தங்கத்தைப் பொறுத்தவரை குறைந்தபட்சமாக ரூ.1 அல்லது 0.001 கிராம் வரை தங்கம் வாங்க நெகிழ்வுத்தன்மை இருப்பதால் நீங்கள் ஒட்டுமொத்த தொகையாக சேமிக்க வேண்டிய அவசியமில்லை.

  இது தொடர்பாக:இணையத்தில் தங்கம் வாங்க குறிப்புகள்
 4. இணைக்கப்பட்ட நன்னம்பிக்கையாளர்கள்
  • இந்த கணத்தில் வாழ விரும்புபவர்கள்
  • உங்கள் முதலீடுகளில் உடனடி மனநிறைவை பார்க்க விரும்புபவர்கள்
  • பொருளாதாரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் மற்றும் ஆலோசகர்களை நம்புபவர்கள்
  • புதிய ஆலோசனைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை வரவேற்பவர்கள்

  பெரும்பாலும் 32% இந்தியர்கள் இணைக்கப்பட்ட நன்னம்பிக்கையாளர்களாவர். இவர்கள் சமூக ஊடகங்களை தீவிரமாக நுகர்பவர்கள் மேலும் டிஜிட்டல் களங்களை தகவல் மற்றும் உத்வேகத்திற்கான முக்கிய ஆதாரமாக பார்ப்பவர்கள். அதிநவீன திட்டமிடுபவர்களைப் போல அபாய ஆர்வலர்கள் இல்லையென்றாலும், இந்த துறையிலுள்ள மக்கள் அவர்கள் திரட்டும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விரைவாக முதலீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் இயங்குவர்.

  நீங்கள் ஒரு இணைக்கப்பட்ட நன்னம்பிக்கையாளர் என்று நீங்கள் நம்பினால், நீங்கள் தங்க ஈடிஎஃப் இல் முதலீடு செய்வதில் செல்லலாம். அதில் உங்கள் முதலீட்டின் பின்னணியாக திட வடிவத் தங்கம் இருக்கும். மேலும், செய்கூலிகளிலிருந்து உங்களை சேமித்து கொள்ளலாம். மேலும் ஈடிஎஃப் உங்களுக்கு வரிப் பயன்களைப் பெற வாய்ப்பை வழங்குகிறது. மேலும், முதலீடு செய்ய வசதி மிகுந்தது.

  எனவே, நீங்கள் எந்த வகைப் பிரிவை சேர்ந்தவர்? உங்கள் வருவாயை அதிகமாக்கவும் மன நிம்மதியை பெறவும் சரியான திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்.

  கட்டுரை ஆதாரம்