Published: 15 மே 2018

துபாயில் தங்கத்தின் மீதான ஹால்மார்க் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்

Rules regulating gold hallmarking in Dubai

பல்வேறு ஆண்டுகளாகவே துபாயின் தங்க சதுக்கங்களில் நகைகள் வாங்குவது உத்தரவாதமான தூய்மை, தரமான செயல்தன்மை மற்றும் வேறுபட்ட வடிவங்கள் ஆகியவற்றை வழங்குகிறது. துபாய் அரசின் அயராத கண்காணிப்பைப் பாராட்டியே ஆகவேண்டும். அதனால்தான் வாங்குபவர்கள் அந்நாட்டு வணிகத்தில் ஈடு இணையில்லாத, நீண்ட கால நம்பிக்கையை வைத்துள்ளனர். எப்போதும் கட்டாயமாக்கப்பட்ட சில மதிப்பீடுகளுடன், அந்நாட்டு அரசு முகமைகள் அவ்வப்போது அறிவிப்பில்லாமல் நகைக்கடைகளுக்கு சென்று அவர்களது வணிகம், துல்லியம் மற்றும் விலை ஆகியவற்றை எதிர்பாராதவிதமாக சோதிப்பார்கள்.

நுகர்வோர் பாதுகாப்பின் வலுவான உணர்வில், அந்த விலைமதிப்பற்ற உலோகத்தின் தூய்மையைக் குறிக்கும் பொருட்டு நகைகக்கடைக்காரர்கள் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கத்தை மட்டுமே விற்க வேண்டும் என்று அந்நாட்டுச் சட்டம் கோருகிறது. அது குறித்து வாங்குபவர்கள் கேட்டால் அவர்கள் வேண்டுகோளுக்கு நகைக்கடைக்காரர்கள் மகிழ்ச்சியாக இணங்கி, ஹால்மார்க் முத்திரையை அவர்களுக்கு காண்பிக்க வேண்டும். இது தரம் மற்றும் நம்பிக்கை குறித்த அவர்களது அர்ப்பணிப்பு உணர்வை தெரிவிக்கிறது. ஹால்மார்க் என்பபடுவது நகையில் முத்திரையிடப்பட்ட காரட் மதிப்பு மற்றும் உற்பத்தியாளரின் முத்திரையாகும் Know the hallmark on gold in Dubai

துபாயில் தங்கம் 18,21, 22 மற்றும் 24 காரட்டுகளில் கிடைக்கிறது

  • 24K = 24 காரட் தங்கம், சுத்தமான தங்கம்
  • 22K = 22 காரட் தங்கம் , 91.67% சுத்தமான தங்கம் கொண்ட உலோகக்கலவை மற்றும் 8.33% பிற உலோகங்கள்
  • 21K = 21 காரட் தங்கம் , 87.5% சுத்தமான தங்கம் கொண்ட உலோகக்கலவை மற்றும் 12.5% பிற உலோகங்கள்
  • 18K = 18 காரட் தங்கம் , 75% சுத்தமான தங்கம் கொண்ட உலோகக்கலவை மற்றும் 25% பிற உலோகங்கள்

தங்கம் துபாயில் எவ்வாறு சான்றளிக்கப்படுகிறது

துபாயில் விற்கப்படும் தங்க நகைகளின் தூய்மையை பாரீக் சான்றிதழின் மூலம் துபாய் மத்திய ஆய்வுக்கூடத் துறை (டிசிஎல்டி) உறுதி செய்கிறது.

உள்ளுர் மற்றும் ஃபெடரல் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுடன் சில்லரை வியாபாரி ஒத்துப்போவதை சோதிப்பது, இந்த நகையின் மேல் லேபிள் இடப்படுவதன் நிறைத்தன்மை, இந்தப் பொருளின் தர உறுதிப்பாடு ஆகியவற்றிலிருந்து இந்த மதிப்பீடு துவங்குகிறது. இந்தக் கடைகள் விதிகளுடன்iii ஒத்துப்போகிறதா என்று சோதித்து அவர்கள் கண்டறிந்ததை ஆய்வாளர்கள் பதிவு செய்கிறார்கள். கடைகளின் தரம் குறித்து டிசிஎல்டியின் கட்டாய ஆய்வுகள் மற்றும் விற்கப்படும் தங்கத்தின் தூய்மை ஆகியவற்றுடன் தானாகவே அளிக்கப்படும் சான்றுகளும் உதவிபுரிகின்றன. பொதுவாக, ஓர் ஆண்டில் குறைந்த பட்சம் மூன்று முறை ஒரு நகைக்கடைக்காரரின் கடைக்கு அதிகாரிகள் செல்கிறார்கள்.

யாருக்கு சான்றிதழ் அளிக்கப்படுகிறது

நகை வர்த்தகத்திற்கு உண்மையான மற்றும் நியாயமான பயிற்சிகள் வழங்கும் கடைகளுக்கு சான்றிதழ் அளிக்கப்படுகிறது. பாரிக் சான்றிதழ் பெற்ற கடைகளும் நிறுவனங்களும் அதனை தங்கள் வளாகத்திலும் விளம்பரங்களிலும் காட்சிக்கு வைப்பார்கள். இந்த சோதனையிலிருந்து கிடைத்த அறிக்கைகளின்படி, இதன் ஒத்துப்போதல் விகிதமானது 98% ஆகும். அதாவது, வெறும் 2% நகைக்கடைக்காரர்கள் மட்டுமே முறைகேடுகளில் ஈடுபடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் வேண்டுமென்றே பல சமயங்களில் செய்யப்படுவதில்லை. பெரும்பாலான பிரச்சினைகள் இறக்குமதியாகும் நகைகளிலேயே உள்ளன. இதன் தூய்மையை பாக்கிங் செய்யப்படும்போது உறுதிப்படுத்துவதில்லை. இதனை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கே உரித்தான தூய்மை இதில் உள்ளது.

நியாயமான மற்றும் பாதுகாப்பான தங்கம் வாங்குதலுக்கான மற்ற நடைமுறைகள்

தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையிடுவது, சில்லரை வியாபாரிகளுக்கு சான்றளிப்பது, சந்தையில் விற்கும் நகைகளை ஆய்வு செய்வது என்பதுடன் தங்கத்தின் நம்பக அந்தஸ்தை பராமரிக்கும் துபாயின் முயற்சிகள் முடிவதில்லை. இதில் மற்ற முயற்சிகளும் உண்டு– துபாய் நகை விற்பனை (டிஜிடி) மற்றும் சந்தையில் விற்கக்கூடிய பிராண்டு (எம்டிபி)- ஆகியவை இதன் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பின் தரத்தை மட்டுமல்ல பொறுப்பாக விற்பதற்கும் விரிவாக வலை விரிக்கிறது.

நீங்கள் துபாயில் தங்கம் வாங்கிவிட்டு அதனை இந்தியாவிற்குக் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கிறீர்களா, இந்த விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் தெரிந்துகொண்டு உறுதிசெய்துகொள்ளவும்.

Sources:

Source1, Source2, Source3, Source4 ,Source5, Source6