Published: 27 அக் 2021

மங்கல்சூத்ரா: இந்தியாவின் மணப்பெண்களை இணைக்கும் புனித கயிற்றின் கதை

mangalsutra

தாலிச்சரடுஅதாவது, 'புனிதக்கயிறு', இந்திய மணப்பெண்ணுக்கான நகைகள் மற்றும் திருமண சடங்குகளில் ஒரு முக்கிய அம்சமாகும் நாட்டின் ஒவ்வொரு சமூகமும் பிராந்தியமும் தாலிச்சரடின் சொந்த வடிவைக் கொண்டுள்ளன, ஒருவேளை வேறு பெயர், , வடிவம் அல்லது வடிவமைப்பு கொண்டிருக்கலாம். தங்கத்தின் அதிக பயன்பாடு, தாலிச்சரடுகளின் எண்ணற்ற வடிவங்களை ஒன்றிணைப்பதாகும் இது பிராந்திய எல்லைகளைக் கடந்து புனிதமாகக் கருதப்படுகிறது. தாலிச்சரடின் புனிததன்மை இந்தியாவில் மொழி, கலாச்சாரம் மற்றும் மதத்தின் அனைத்து எல்லைகளையும் கடந்து நிற்கிறது.

இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் மரபுகள் முழுவதும் உள்ள தாலிச்சரடின் சில வடிவங்களைப் பார்ப்போம்

தென் மாநிலங்கள் 

தாலிச்சரடு இந்தியாவின் தென் மாநிலங்களில் தோன்றி மற்ற பகுதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று பரவலாக நம்பப்படுகிறது. இந்த புனிதக்கயிறு தென்மாநிலங்களில் சமூகம் மற்றும் ஜாதியின் அடிப்படையில் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது அதில் மிகவும் பிரபலமான ஒன்று தாலி அல்லது திருமாங்கல்யம், உயர் தெய்வத்தை குறிக்கும் வகையில் தங்கப்பதக்கத்துடன் கூடிய ஒரு நீளமான மஞ்சள் கயிறாகும்

mangalsutra

தமிழ்நாடு  

தாலி அன்பு மரியாதை, கண்ணியம் மற்றும் என்றும் நிலைத்திருக்கும் திருமண பந்தத்தை குறிக்கிறது தமிழ்நாட்டில், தாலி வடிவமைப்புகள் சமூகங்களின் அடிப்படையில் மாறுபடலாம்.ஐயர் தாலிச்சரடுகள் துளசிச்செடி, சிவபெருமான் வடிவங்களைக் கொண்டிருக்கும் ஐயங்கார் தாலி விஷ்ணுவின் வடிவத்தைக் கொண்டிருக்கும்.  

கேரளா 

mangalsutra

கேரளாவின் கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியங்களில் தங்கம் ஆழமாக வேரூன்றியுள்ளது, தங்க நகைகள் திருமணத்தின் சிறப்பம்சமாகும். பல சமூகங்கள் ஒரு இலேசான தாலியைக் கொண்டுள்ளன அதன் வடிவம் ஒரு இலையை ஒத்திருக்கிறது. அது சில சமயங்களில் இலை தாலி என்று அழைக்கப்படுகிறது. கேரளாவில் உள்ள பல சமூகங்கள் ஒரு இலகுவான தாலியைக் கொண்டுள்ளன, இது ஒரு நீண்ட தங்கச் சங்கிலியில் தூய தங்க இலை பதக்கத்துடன் தயாரிக்கப்படுகிறது. அது சில சமயங்களில் இலை தாலி என்று அழைக்கப்படுகிறது. பல சமகால தாலி வடிவமைப்புகள் பெரும்பாலும் தங்கத் தாலியில் வைரங்கள், மாணிக்கங்கள் அல்லது மணமகனின் முதலெழுத்துகளை உட்பொதிப்பதன் மூலம் மேலும் தனிப்பயனாக்குகின்றன.

சிரியன் கிறிஸ்துவ திருமணங்களுக்கான பாரம்பரிய தாலியாக ’மின்னு’ வை கேரளாவில் காணலாம். தங்க ஆபரணங்கள் சிரியன் கிறிஸ்தவர்களின் திருமணத்தின் ஒரு முக்கிய பகுதியாகும், மாற்றிக்கொள்ளும் மோதிரங்கள் முதல் மந்திரக்கோடி வரை - தங்கம் மற்றும் வெள்ளி நூல்களால் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட பட்டு சேலை. மின்னு என்பது ஒரு சிறிய பதக்கமாகும், இதில் 13 தங்க மணிகள் இதய வடிவ பதக்கத்தின் மேல் ஒரு சிலுவை வடிவத்தை உருவாக்குகிறது. மணமகனின் குடும்பத்தினர் பரிசளித்த மந்திரகோடியிலிருந்து எடுக்கப்பட்ட நூல்களால் பதக்கம் கட்டப்பட்டுள்ளது. கேரளாவின் (திருவாங்கூர்) தெற்குப் பகுதிகளில் உள்ள முஸ்லீம் மணப்பெண்களும் தாலி அணிவார்கள். 

ஆந்திரப்பிரதேசம்    

ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் இருந்து வரும் மணப்பெண்கள் ஒத்த தோற்றமுடைய தாலி வடிவமைப்புகளை அணிகின்றனர் தாலி வடிவங்கள் (பெரும்பாலும் தெலுங்கில் புஸ்டெலு, ராமர் தாலி அல்லது பொட்டு என்று அழைக்கப்படுகிறது). இது சக்தி தேவியையும் சிவபெருமானையும் குறிக்கும் வட்ட வடிவத்தை கொண்டுள்ளது. இந்த தாலிகள் பொதுவாக ஒரு தங்கச் சங்கிலி அல்லது வட இந்திய மங்கலசூத்திரம் போன்ற கருப்பு மற்றும் தங்க மணிகள் கொண்ட சங்கிலிகளில் சேர்க்கப்படுகின்றன. வாரஸ்யமாக, பல தெலுங்கு சமூகங்களில், திருமண வீட்டாரின் ஒவ்வொரு பக்கத்திலிருந்து ஒரு தாலி வழங்கப்படுகிறது 

கர்நாடகா  

mangalsutra

கூர்கி திருமணங்கள் சில அற்புதமான பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளுடன் கூடிய ஒரு வேடிக்கையான, பிரகாசமான நிகழ்ச்சியாகும். திருமண தீம், வண்ணங்கள் அல்லது நகைகளில், தங்கம் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். கூர்கி மணமகள்கள் திருமணத்தின் அடையாளமாக மங்களசூத்திரத்திற்கு சமமான கார்த்தமணி பதக் என்ற தங்க ஆபரணத்தை அணிவார்கள். இது ஒரு கொடவா மணப்பெண்ணுக்கு மிக முக்கியமான நகைகளில் ஒன்றாகும். கார்த்தமணி மற்றும் பதக் ஆகிய இரண்டும் தனித்தனி நகைகள் ஆகும், இங்கு பதக் ஒரு தங்க பதக்கமாகும், இது லக்ஷ்மி தேவி அல்லது விக்டோரியா ராணி வேலைப்பாடு பொறிக்கப்பட்ட ஒரு பெரிய தங்க நாணயம், மற்றும் நாணயத்தைச் சுற்றி சிறிய மாணிக்கக் கற்கள் இருக்கும். இந்த நாணயப் பதக்கம் ஒரு பாம்பு வடிவத்தால் சூழப்பட்டுள்ளது, பாம்பு கருவுருதலைக் குறிப்பதாகும். 

கார்த்தமணி என்பது பவளம் மற்றும் தங்க மணிகளால் செய்யப்பட்ட ஒரு நெக்லஸ் ஆகும். பொதுவாக கயிற்றுக்கு பதில் தங்கச் சங்கிலி இருக்கும் கார்த்தமணி பதக்கின் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், மற்ற எல்லா தாலிச் சடங்குகளைப் போலல்லாமல், மணமகளின் தாய் திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு, இதை மணப்பெண்ணுக்கு கட்டுகிறார். 

மஹாராஷ்டிரா மற்றும் குஜராத்

mangalsutra

மஹாராஷ்டிர மங்கள்சூத்ரா என்பது அதன் கருப்பு மற்றும் தங்க மணிகள் இரட்டை வடமாகக் கட்டப்பட்டு அதன் நடுவில் இரண்டு தங்க வதிஸ் அல்லது கிண்ண வடிவ பதக்கங்களை கொண்டது, இது நன்கு அறியப்பட்டதாகும். இந்த வதி வடிவம் சிவன் மற்றும் சக்தியைக் குறிக்கிறது மற்றும் ஒன்றாக இணைக்கப்பட்ட இரண்டு தங்க மணிகள் புனித சங்கமத்தைக் குறிக்கின்றன. மங்கலசூத்திர சரடில் உள்ள கருப்பு மணிகள் தீமையை விரட்டும் மற்றும் திருமணத்தில் மகிழ்ச்சியை ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது புதுமணப் பெண்கள் பெரும்பாலும் திருமணமான ஒரு வருட காலத்திற்கு மங்களசூத்திர பதக்கத்தை முன்புறம் தெரியும்படி அணிந்து தங்களின் புதிய திருமண நிலையை காட்டுகிறார்கள் 
 
பாரம்பரியமாக குஜராத்தி மணப்பெண்கள் தங்கள் திருமணமான நிலையை குறிக்க வைர மூக்குத்தி அணிந்தனர். அவர்கள் மேலும் கருப்பு மணிகள் மற்றும் நுணுக்கமான தங்கப் பதக்கங்கள் கொண்ட மங்கள்சூத்ராவை அணிந்தனர். நவீன மங்கலசூத்ரா வடிவமைப்புகள் அதிக நாள் அணிவதற்கு குறுகிய சங்கிலியுடன் கூடிய ஒரு தங்கம் அல்லது வைர பதக்கத்தை கொண்டுள்ளது.
 
மங்கல்சூத்ராசிந்தி திருமணத்தின் ஒரு முக்கிய அம்சமாகும் குஜராத்தி மங்கலசூத்திரத்தைப் போலவே இது ஒரு கருப்பு மற்றும் தங்க மணிகள் கொண்ட ஒரு சங்கிலி மற்றும் பதக்கம், அதன் டிசைன் மணப்பெண் மற்றும் மணமகளின் தனிப்பட்ட ஆர்வத்தைப் பொறுத்ததாகும்   

பீஹார் 

mangalsutra

பிஹாரி கலாச்சாரத்தில் பிச்சுவா அல்லது மெட்டி திருமண நகைகளின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றாகும் பீஹாரி மணப்பெண்கள் ’தாக்பாக்’ எனப்படும் மங்கல்சூத்ராவை அணிகிறார்கள் இது ஒரு தனித்துவமான நகையாகும், இது இரட்டை வடங்கள் மற்றும் தங்க பதக்கத்தை கொண்டுள்ளது. 

காஷ்மீர்

காஷ்மீரில் டிஜோர் அல்லது தேஜூர் என்று அழைக்கப்படும் , தனித்துவமான திருமண நகைகள் உள்ளன , இங்கு ஏராளமான தங்க காதணிகள் ஒரு சாதாரண சிவப்பு நூலில் கோர்க்கப்பட்டுள்ளன. திருமண விழா முடிந்தவுடன், மணமகனின் குடும்பத்தினர் நூலுக்குப் பதிலாக தங்கச் சங்கிலியை வழங்குகிறார்கள். இந்தச் சங்கிலி ஆத் என்று அழைக்கப்படுகிறது இது உண்மையில் ஒரு சிறிய தங்க ஆபரணம் என்று பொருள்படும். 
 
இந்திய திருமண மரபுகள் தங்க நகைகளின் அதிகப்படியான பயன்பாட்டைக் காட்டுகின்றன, மேலும் இது தாலிச் சரடுக்கும் பொருந்தும். தங்கம் பாதுகாப்பு, செழிப்பு, நீண்ட ஆயுள் மற்றும் நிலைத்தன்மையைக் குறிக்கிறது,மேலும் ஒரு தங்க தாலிச்சரடு இந்திய மணப்பெண்ணின் அலங்காரத்தில் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாகும். இப்போதெல்லாம், மணப்பெண்கள் தங்கள் விருப்பப்படி அதைத் தனிப்பயனாக்குகிறார்கள், பெரும்பாலும் இது ஒரு நவீன திருப்பத்தை அளிக்கிறது தாலியை சுற்றியுள்ள வடிவம், அமைப்பு மற்றும் சடங்குகள் சமூகங்களில் வேறுபடுகின்றன, ஆனால் அதன் முக்கியத்துவம் எல்லைகள் மற்றும் மொழிகளை கடந்து காதல் மற்றும் புனித சங்கமத்தின் அடையாளமாக வலுவாக உள்ளது.