Published: 09 ஆக 2017

உங்களிடம் தங்கம் இருந்தால் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

5 Things to know if you own gold

2017ஆம் ஆண்டின், முதல் காலாண்டில் தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்கள் மீதான முதலீடு 9 % அதிகரித்துள்ளது. இந்தியாவில் தங்க நகைக்கான தேவை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 15% அதிகரித்துள்ளது. எந்த வடிவிலாவது தங்கத்தை வாங்கி சேமித்து வைக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தால், இந்த 5 விஷயங்களையும் பரிசீலனை செய்யுங்கள்.

  1. பாதுகாப்பாக வைப்பது.

    மிகவும் அதிக மதிப்புள்ள பொருள் என்பதால், தங்கத்தை ஒரு அலமாரியிலோ அல்லது ஒரு பெட்டகத்திலோ சாதாரணமாக வைக்கக்கூடாது. அதனை வங்கிப் பெட்டகம் போன்ற பாதுகாப்பான இடங்களில் வைப்பது மிகவும் முக்கியம். இதற்காக முதலில் ஒரு சேமிப்புக் கணக்கு துவங்க வேண்டும் என்று பல்வேறு வங்கிகள் உங்களிடம் கோரும். இதற்காக நீங்கள் பெட்டகத்திற்கான கட்டணத்தையும் ஆண்டுக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியிருக்கும். நல்ல பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மிகவும் நம்பகமான வங்கியை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். காலங்கள் செல்ல செல்ல தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும். அதனால் தங்கத்தை பாதுகாப்பான இடத்தில் வைக்க இது உதவியாக இருக்கும்.

  2. கவனம்

    தங்கம் போன்ற ஒரு விலை உயர்ந்த உலோகத்தைப் பாதுகாப்பதற்கு, தன் மினுமினுப்பை தக்க வைக்க நீங்கள் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். ஆபரணம் என்ற வடிவத்தில் பல்வேறு உணர்வு பூர்வமான மதிப்பு அதற்கு உள்ளது. பல்வேறு தலைமுறைகளுக்கு பரம்பரை சொத்தாக அது சென்று சேரும். தங்கத்தின் மினுமினுப்பையும் நீடித்த தன்மையையும் பராமரிக்க வேண்டும். உங்களது தங்க நகையை சுத்தம் செய்வதற்கான 8 குறிப்புகள் இங்கே அளிக்கப்பட்டுள்ளன.

  3. தங்கத்தை பெறுவதற்கான வரம்புகள்

    தங்க நகைகள் அல்லது ஆபரணங்களை ஒரு தனி நபர் வைத்துக்கொள்ள எந்த விதமான உச்ச கட்ட மதிப்பையும் அரசு நிர்ணயிக்கவில்லை. ஆனால் அதை வாங்குவதற்கான தொகை சட்ட ரீதியாக சம்பாதிக்கப்பட்ட தொகையாக, அதாவது வருமானத்தில் காட்டப்பட்ட தொகையாக இருக்கவேண்டும். அல்லது விவசாய வருமானம், வீட்டு சிறுசேமிப்பு, பரம்பரை சொத்து ஆகியவற்றின் மூலம் பெற்றதாக இருக்க வேண்டும். ஒரு திருமணமான பெண்ணிடம் இருக்கும் தங்க ஆபரணம் 500 கிராம்கள் வரை இருந்தால் அதனை பறிமுதல் செய்ய முடியாது. திருமணமாகாத பெண்ணிற்கான நகை அளவு 250 கிராம்கள். அதே சமயம் ஓர் ஆணிற்கான நகையின் அளவு 100 கிராம்கள் .

    தொடர்புடையவை: எப்படி தங்கம் வாங்குவதை சரியான முறை மூலம் செய்யலாம்
  4. மீண்டும் விற்பதற்கான பரிசீலனைகள்

    நீங்கள் தங்கம் வாங்கும்போது பெறும் கட்டணச்சீட்டையும் சுத்தத்திற்கான உத்தரவாத சான்றிதழையும் பத்திரமாக வைத்துக்கொள்ளவும். நீங்கள் தங்கத்தை விற்கவேண்டும் என்று முடிவுசெய்யும்போது ஒவ்வொரு நகைக்கடைகாரரும் கேட்கும் முதல் விஷயம் அதுதான். நீங்கள் அந்த நகையை பல ஆண்டுகளுக்கு முன்பே வாங்கியிருக்கலாம். இருப்பினும் இதற்கான ரசீது உங்களுக்கு எல்லா விவரங்களையும் தெளிவாகத் தெரிவிக்கும். நீங்கள் ஹால்மார்க் ஆபரணங்களை மட்டும் வாங்குவது அதைப் போலவே மிகவும் முக்கியம்.
    எடுத்துக்காட்டாக, அந்தத் தங்கத்திற்கு 2K916 ஹால்மார்க் தரம் உள்ளதா என்று தெரிந்துகொள்ள வேண்டும். இதன் பொருள் இந்தத் துண்டு 22 காரட் தங்கம் பெற்றுள்ளது என்று பொருள். எனவே அந்தத் தங்ம் 91.6% தூய்மையானது. ஹால்மார்க் அல்லாத தங்கத்தைவிட ஹால்மார்க் தங்கத்தையே நகைக் கடைக்காரர்கள் விரும்புவார்கள். ஏனெனில் ஹால்மார்க்கானது சுத்தத்தின் அடையாளம்.

    தொடர்புடையது: தங்கத்தை ஹால்மார்க் செய்வது என்றால் என்ன? அது ஏன் செய்யப்படவேண்டும்?
  5. காப்பீடு

    ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, வீட்டுக் காப்பீடு மற்றும் வாகனக் காப்பீடு ஆகியவை பிரபலமாக உள்ளபோது, நம்மில் பலருக்கு நகைக் காப்பீடு குறித்து தெரிவதே இல்லை. வங்கி பெட்டகங்களில் உங்கள் நகையை நீங்கள் வைத்திருக்கும் போது திருட்டு, விபத்தினால் இழப்பது, மற்றும் பழுதடைதல் ஆகியவற்றிற்கு எதிராக உங்கள் நகைக்கான காப்பீட்டை நீங்கள் பெறலாம். நீங்கள் அணியும் நகைகளுக்கும் சில காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீடு வழங்குகின்றன. உங்களது தேவைக்கேற்ற சரியான மாதிரியை நீங்கள் தேர்வு செய்துள்ளீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

    தொடர்புடையது: 2017ல் உங்கள் தங்க முதலீட்டை எவ்வாறு திட்டமிடுவது?
முடிவுரை

அதிகம் தேவைப்படும் விஷயங்களைப் போலவே, தங்கத்தை பாதுகாப்பாகவும் மதிப்புடனும் வைக்க அதிக சிரத்தை தேவைப்படுகிறது. அப்போதுதான் உங்களுக்கான பலன்கள் அதிகரிக்கும்.

Sources:
Source1Source2