Published: 21 ஆக 2017

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மாபெரும் தங்க சுரங்கங்கள்

Treasure of Gold

காலங்காலமாக தங்கச் சுரங்கங்களைக் கண்டுபிடித்தது தொல்லியல் நிபுணர்கள் மட்டுமல்ல, பொது மக்களும்தான்: இந்த மதிப்புமிக்க பொருட்களை அதுவரை பார்த்திராத மக்கள் கூட இந்த பொக்கிஷங்களைக் கண்டறிந்துள்ளார்கள். காலத்தால் தொலைந்துபோனதென்று கருதப்பட்ட அதிசயமான தங்கச் சுரங்கங்கள் குறித்த பார்வை இதோ.

 1. தி ஹோக்ஸ்சின் ஹோர்ட்

  1992ஆம் ஆண்டில் பீட்டர் வாட்லிங் (Peter Whatling) என்ற விவசாயி இங்கிலாந்தில் உள்ள தனது பண்ணையில் ஒரு கோடரியை தொலைத்து விட்டார். உலோகத்தைக் கண்டறியும் தனது நண்பரிடம், தொலைந்த கோடரியைக் கண்டறியுமாறு உதவி கேட்டார். அதைத் தேட போன போது பண்டைய ரோமானிய சாம்ராஜ்யத்தினைச் சேர்ந்த 14,865 தங்க, வெள்ளி, செப்பு நாணயங்கள் கிடைத்தன. அந்த ஒட்டுமொத்த தங்கச் சுரங்கத்தின் தற்போதைய மதிப்பு 43 இலட்சம் அமெரிக்க டாலர்கள் ( $4.3million). அங்கு கிடைத்த அனைத்து அரிய பொக்கிஷங்களும், வாட்லிங்கின் கோடரி உட்பட, பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டன ( British Museum).

  Invaluable Gold Chain

  Hoxne Hoard Gold Treasure

  Hoxne Hoard Ancient Gold Bracelet

 2. தி சாடில் ரிங்க ஹோர்ட

  2013ஆம் ஆண்டில், கலிஃபோர்னியாவில் வாழ்ந்த ஒரு தம்பதியர்(California) தங்க பொக்கிஷத்தை தங்கள் கொல்லைப்புறத்தில் கண்டறிவதாக கனவு கண்டார்கள். அவர்களது கனவு நனவானது. அந்த தம்பதியர், தங்கள் நாயுடன் நடைபயணம் சென்றபோது 1847-1894 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த 1,427 தங்க நாணயங்களைக் கண்டறிந்தனர். முதலில் தங்க நாணயங்கள் நிரம்பிய ஒரு உலோக டப்பாவை அவர்கள் கண்டனர். உலோகக் கண்டறியும் கருவியின்(metal detector) உதவியுடன் அவர்கள் மேலும் தோண்டி அகழ்வாராய்ச்சி செய்தபோது தங்க நாணயங்கள் நிரம்பிய மேலும் 7 டப்பாக்கள் கிடைத்தன. அந்த பொக்கிஷத்தின் மதிப்பு 1 கோடி அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டது ( $10 million).

  Saddle Ridge Gold Coins Treasure

  Gold Treasure Found In California

 3. தங்கத்தின் கப்பல்

  1857ஆம் ஆண்டு எஸ்எஸ் மத்திய அமெரிக்கா (SS Central America) என்ற தங்கக் கப்பல் (Ship of Gold) 13,600 கிலோ தங்கத்துடன் சென்றபோது கடலில் மூழ்கியது. 1988ஆம் ஆண்டு இந்தக் கப்பலின் சிதிலங்கள் கண்டறியப்பட்டபோது, மூழ்கியக் கப்பலில் 5 சதவீதம் மட்டுமே கிடைத்தது. 2014ஆம் ஆண்டில், ஒடிசி கடல் ஆராய்ச்சி நிறுவனம் (Odyssey Marine Exploration Inc.), என்ற ஆழ்கடலில் கப்பல் சிதிலங்களைக் கண்டறியும் அமெரிக்க நிறுவனம் ஒன்று அந்த தளத்தை மீண்டும் ஆராயத் தொடங்கியது. அந்த சிதிலம் அடைந்த கப்பலில் இருந்து 45 தங்கக் கட்டிகளையும் 15,500 தங்க நாணயங்களையும் பெற்றது. அந்த ஒட்டுமொத்த தங்கச் சுரங்கத்தின் மதிப்பு 100-150 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும் ($100-150 million).

 4. சான் ஹாஸ் காலியான்

  சான் ஹாஸ் என்ற மூழ்கிய கப்பல் 2015ஆம் ஆண்டு கொலம்பிய கடற்படையால் (Columbian Navy) கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கப்பலானது ஸ்பானிய கப்பற்படையின் காலியான். இந்த கப்பலானது 1708ஆம் ஆண்டு மூழ்கியது. இதில் இருந்த தங்கம், வெள்ளி மற்றும் இதர விலை உயர்ந்த நகைகளின் மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கும். அமெரிக்காவில் உள்ள கடல் ஆராய்ச்சி படை Sea Search Armada (SSA), என்ற ஒரு முதலீட்டுக் குழுவினர் 1981ஆம் ஆண்டில் இந்தக் கப்பலைக் கண்டறிந்ததாகக் கூறினர் அதிலுள்ள பொக்கிஷத்தில் 35 சதவீதத்தை தனக்கு அளிப்பதாக கொலம்பியா ஒப்புக்கொண்டால் அது இருக்கும் இடத்தைக் காண்பிப்பதாக அந்தக் குழு ஒப்புக்கொண்டது. கண்டுபிடிப்பாளரின் கட்டணமாக 5 சதவிதத்தை அளிப்பதாக கொலம்பிய நாடாளுமன்றம் இறுதியில் அறிவித்தது. அந்த SSA குழவிற்கும் கொலம்பியாவிற்கும் இடையிலான போராட்டம் 2011ஆம் ஆண்டு தீர்த்துவைக்கப்பட்டது. இந்த பொக்கிஷத்தில் உள்ள பொருட்களுக்கான உரிமை கொலம்பியா அரசிற்கு உள்ளது. அவை அந்த நாட்டின் தேசிய கலாச்சார பாரம்பரிய சொத்து. SSAவிற்கு அந்தப் பொக்கிஷத்தின் ஒவ்வொரு பொருளிலும் 50 சதவீதம் கிடைக்கும் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் முடிவெடுத்தது.

 5. ஸ்டஃபோர்ட்ஷைர் ஹோர்ட்

  இதுவரை கண்டறிப்பட்ட ஆங்கிலோ சாக்சன் சுரங்கத்திலேயே மாபெரும் சுரங்கம் என்று கண்டறியப்படுவது ஸ்டஃபோர்ட்ஷைர் ஹோர்ட் (Staffordshire Hoard) எனப்படுகிறது. இந்தப் பொக்கிஷத்தைக் கண்டறிந்தவர் டெரி ஹெர்பெர்ட் என்ற விவசாயி. அவரது பண்ணையின் மீது அவர் உலோகக் கண்டறியும் கருவியைப்(metal detector) பயன்படுத்தி இதனைக் கண்டறிந்தார். இதில் மொத்தம் 3,500 க்ளோய்சனோ கார்னட்டுகள் உள்ளன. தொடர்ந்து ஐந்து நாட்களாக அந்த விவசாயி தோண்டத் தோண்ட 5.094 கிலோ தங்கமும் 1.442 கிலோ வெள்ளியும் கிடைத்தன. இந்தக் கண்டுபிடிப்புகளுக்கான பரிசாக 3.285 மில்லியன் பவுண்டு(£3.285 million) அந்த நிலத்தின் உரிமையாளருக்கும் விவசாயிக்கும் இடையே சமமாகப் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

  Staffordshire Hoard Golden Treasure

 6. நுயஸ்டிரா செனோரா டி லாஸ் மெர்சிடிஸ்

  நுயஸ்டிரா செனோரா டி லாஸ் மெர்சிடிஸ் (Nuestra Señora de las Mercedes) என்பது ஒரு ஸ்பானிஷ் கடற்படையின் கப்பல். இது தங்க வெள்ளி நாணயங்களைப் பரிமாற்றம் செய்து கொண்டிருந்தது. கேப் சாந்தா மரியா போரின்போது(Battle of Cape Santa Maria) அது கடலில் மூழ்கியது. இந்தக் கப்பலின் சிதிலங்கள் ஒடிசி மரைன் அகழ்வாராய்ச்சி நிறுவனத்தால்(Odyssey Marine Exploration Inc.) 2007ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்ட்டது. தாங்கள் கண்டுபிடித்த 50,000 தங்க வெள்ளி நாணயங்களை ஒடிசி அமெரிக்காவிற்கு கப்பல் மூலம் அனுப்பியது. ஆனால் அந்தக் கப்பலின் சிதிலங்கள் ஸ்பானிஷ் கடற்படையின் பகுதியாதலால் அதற்கான சட்டரீதியான உரிமை தங்களுக்கே உள்ளது என்று ஸ்பெயின் அரசு கோரியது. இதற்கான வழக்கு 5 ஆண்டுகள் தொடர்ந்தது. இறுதியில் இந்தத் தங்கத்தின் உண்மையான சொந்தக்காரர் ஸ்பானிஷ் அரசுதான் என்று நீதி மன்றம் தீர்ப்பளித்தது.இதைத் தொடர்ந்து இந்தத் தங்கம் ஸ்பெயினுக்கு அனுப்பி வைக்கப்ட்டது. இதனை மீட்கப்பட்ட கலாச்சார பொக்கிஷம் என்று கூறிய ஸ்பெயின், அந்நாட்டு தேசிய தொல்பொருள் அருங்காட்சியகத்தின் உதவியுடன் அதனை ஸ்பானிஷ் கப்பற்படை அருங்காட்சியகத்தில் வைத்தது. தொலைந்துபோனதென கருதப்பட்ட பொக்கிஷம் என்று பெயரிடப்பட்ட அவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

  Gold Coins Found In Ship Wreck

 7. சிசேரியா தங்கச் சுரங்கம்

  2015ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கு அருகில் உள்ள சிசேரியா துறைமுகத்தின் கடற்படுகையில் 2,000 தங்க நாணயங்களைக் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் குழு கண்டறிந்தது. தங்களது முதலாவது கண்டுபிடிப்பிற்கு பிறகு அதனை இஸ்ரேலிய தொல்பொருள் அமைச்சகத்திற்கு அந்த ஆழ்கடல் நீச்சல்வீரர்கள் தெரியப்படுத்தினர். அந்த நிறுவனத்தின் கடல் மூழ்குக் குழுவினரின் உதவியுடன் அந்த நிறுவனம் மீண்டும் ஆராய்ச்சி செய்து மொத்த பொக்கிஷத்தையும் கண்டறிந்தது. ஆனால் அந்தப் பொக்கிஷங்கள் எல்லாம் அரசுடைமை என்று அறிவிக்கப்பட்டு, கண்டறிந்ததற்கான எந்த பரிசும் அந்த நீச்சல் வீரர்களுக்கு வழங்கப்படவில்லை.

Sources:
Source1Source2, Source3, Source4Source5, Source6, Source7Source8, Source9, Source10, Source11, Source12