Published: 04 அக் 2017

நவநாகரிகத்தில் தங்கத்தின் பரிணாம வளர்ச்சி

Woman wearing traditional gold necklace and earnings

அலங்கரிக்கும் கலையானது மனிதகுலத்தின் வரலாற்று அளவிற்கு பழமையானது. இந்த அற்புதமான கலையானது விலை மதிப்பு மிக்க பளபளப்பான உலோகமான தங்கம் இல்லாமல் நிறைவடையாது. செல்வம், ஆரோக்கியம், வளமை ஆகியவற்றின் குறியீடான தங்கத்திற்கு இந்திய கலாச்சாரத்தின் வாழ்க்கையில் எப்போதுமே ஒரு சிறப்பு இடம் உண்டு. தேசம் முழுவதும் உள்ள நகைப் பெட்டிகளில் இது இன்றியமையாததாக அமைகிறது.

பல்வேறு ஆண்டுகளாக தங்கம் பாராட்டப்படுவதன் பல்வேறு வகைகள் குறித்த ஒரு பார்வை.

இராஜபுத்தான நகைகள்

7ஆம் நூற்றாண்டிலிருந்து 19ஆம் நூற்றாண்டு1 வரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளை இராஜபுத்திர சாம்ராஜ்யங்கள் ஆண்டு வந்தன. இவர்கள் சில கைதேர்ந்த கலைஞர்களை கொண்டுவந்தார்கள். இந்தியாவின் மிகச்சிற்நத தங்க நகை வடிவங்களை அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள்.

மிகவும் அற்புதமான திறன் கொண்ட தனித்துவமான கலைப்படைப்புகள் மணி வைத்த குந்தன் தங்க நகை வடிவங்களாகும். அற்புதமான நகைத்துண்டுகளை உருவாக்க சுத்தமான தங்கத்துடன் விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டு நகைகள் உருவாக்கப்படுகின்றன. இராஜஸ்தானிய மணமகள்கள் இந்த விரிவான வடிவங்களை கொண்டாடுகின்றனர்.

மீனாகாரி நகை வடிவங்கள் தங்க நகைகளில் மேல் பூச்சு வைத்து இருப்பவை. இவற்றில் நிறம் கொண்ட எனாமல்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இந்த வடிவங்கள் ஜெய்பூரில் பிரபலம்.

குந்தன் மற்றும் மீனாகாரி நகைகளின் இணைப்பு ஜாதவ்வே லைப்பாடுகள்.

மிகவும் வேலைப்பாடு செய்யப்பட்ட தங்கத்தின் தகட்டை கையால் செய்யப்பட்ட, உருகிய , நிறமிடப்பட்ட கண்ணாடியைக் கொண்டிருப்பது தேவா வேலைப்பாடுகள் (Thewa work). இது மேலும் விலை உயர்ந்த கற்களைப்23 போல் காட்சி அளிக்கும்.

மொகலாயர்களின் காலத்தில் செய்யப்பட்ட வடிவங்கள் என்று பழமையானதானாலும், இன்றும் இவை மிகவும் பிரபலமாக உள்ளன. மிகவும் ஆடம்பரமான இராஜபுத்திர நகைகள் இல்லாமல் இராஜஸ்தானிய மணமகளின் தோற்றம் முழுமை பெறாது.

ஃபிலி கிரி வடிவம்

ஃபிலி கிரி தங்க நகை வடிவமானது நெருக்கமாகப் பிண்ணப்பட்ட தங்க கம்பிகள் கொண்ட நகையாகும். இது தோற்றத்தில் லேஸ் போல் இருக்கும். 19ஆம் நூற்றாண்டின் பிற்காலத்திய ஒரிசாவில், கட்டாக்கில் உள்ள கலைஞர்கள் பயிற்சி செய்த உலோக வேலைப்பாடு இது.

இந்தியா முழுவதும் அதே அளவு நேசத்தை இந்த பண்டைய கலை வடிவம் பெறுகிறது. இது மிகவும் பழமையான இராஜகம்பீரம் மிக்க நகைக் கலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் மெல்லிய தன்மையும் நவீனத்தோற்றமும் இன்றைய அலுவலகத் தோற்றத்தை முக்கியமான பெருநிறுவன நிகழ்ச்சியாக மாற்றும் திறன் கொண்டது.

மணமகளின் நகைகள்

நமது நவீன கால திருமண நகைகள் இராஜ குடும்பத்தினர் அணியும் நகைகளில் உள்ளடக்கம் பெற்றவை. இவற்றில் செய்யப்பட்ட மாற்றங்கள் மிகவும் அமைதியாக செய்யப்பட்டுள்ளன. நீண்ட, ஆடம்பர நெக்லேசுகள் பல்வேறு அடுக்குகள் கொண்ட கழுத்து துண்டுகளால் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இது தங்கத்தின் பல்வேறு நிறங்களிலும் நவநாகரிகமாக தோற்றம் அளிக்கும். பச்சை, பிங்க், வெள்ளை அல்லது மஞ்சள் என்று எந்த நிறத்திலும் நவநாகரிகமாக தோற்றம் அளிக்கும். கிரீட வகையிலான மாங்டிக்கா, ஹாத்பூல் மற்றும் நாத் (மூக்கத்தி) மற்றும் ஆகியவை தற்போது போலவே எப்போதும் நவநாகரிமானவை.

பணிபுரியும் பெண்ணின் நகைகள்

இன்று, மட்டி தங்க சங்கிலி போன்ற நுண்ணிய தங்க நகைகள் அணிவதை பெண்கள் விரும்புகிறார்கள். மிகவும் நுண்ணிய வேலைப்பாடு கொண்ட சங்கிலிகள், ப்ரேஸ்லெட்டுகள், காது வளையங்கள் ஆகியவை பணிக்குத் தேவையான பாரம்பரிய அரை பாரம்பரிய உடைகளுடன் அணிய விரும்புகிறார்கள்.

சிறப்பு தருணங்களில் மட்டும் அணியக்கூடியவையாக கனமாக நகைகள் வருகின்றன. இவற்றை முற்காலத்தில் மகாராஜாக்களும் மகாராணிக்களும் அணிந்துகொண்டிருந்தனர். வம்சாவழி சொத்தாக இவை கடத்தப்படுகின்றன. தங்கம் மிகவும் பொக்கிஷமாகக் கருதப்பட்ட, மரியாதையான, விலை உயர்ந்த உலோகமாகக் கருதப்படுகிறது.

Sources: Source1, Source2, Source3, Source4, Source5, Source6, Source7, Source8, Source9, Source10