Published: 18 மே 2018

பைபிளின் தங்க தருணங்கள்

Gold in Bible

பைபிளில் தங்கம் 400 தடவைக்கு மேல் குறிப்பிடப்பட்டிருப்பது உங்களுக்கு தெரியுமா ?
தங்கம் பைபிளில் ஒரு பிரதான பங்கை வகிக்கிறது மற்றும் அதன் மதிப்பு, தூய்மை,விரிவாற்றல் ஆகியவற்றிற்காக பெரிதும் மதிக்கப்படுகிறது. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

நிகழ்வுகளில் தங்கம்

பைபிளின் சில முக்கிய விளக்கங்களில் தங்கம் ஒரு ஒருங்கிணைந்த தோற்றத்தில் குறிப்பிடப்படுகிறது. உதாரணத்திற்கு, மவுண்ட் சினாயின் மேலிருந்து கடவுளிடம் நேரடியாக 10 கட்டளைகளை மோசஸ் பெறும்போது, மலையடிவாரத்தில் ஒழுக்கமற்ற இஸ்ரேலியர்கள் தங்களுடைய தங்க காதணிகளிலிருந்து செய்யப்பட்ட ஒரு தங்க கன்றுக்குட்டியின் உருவத்தை வழிபடுகின்றனர் என்று எக்ஸோடஸ் மோசஸின் கதையை வர்ணிக்கிறது.

தங்கத்தை கட்டுமான பொருளாக கொண்ட டேபர்னாக்கிளின் கட்டுமான பணி தங்கம் நிறைந்தது என்று எக்ஸோடஸ் விவரிக்கிறது. டேபர்னாக்கிளின் (ஒரு வீடு) கட்டுமான பணிக்கான வரை படத்தை கடவுளே மோசஸிடம் கொடுத்து, அது

இஸ்ரேலியர்களால் தலை வணங்கி பின்பற்றப்பட்டது. அந்த விளக்கங்களின் படி தங்கம் கட்டிட வேலையில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்படும் தகடுகளாகவும் மற்றும் உயர்ந்த மத குருக்களுக்கான ஆடை நெய்யும் நூலாகவும் உருவாக்கப்பட்டது. கனானை பிடிப்பதற்கான இஸ்ரேலியர்களின் முதல் போர் ஜெர்ரிகோ யுத்தம் ஆகும். மோசஸின் உதவியாளர் மற்றும் வாரிசான ஜோஷுவாவின் கூற்றின்படி ஜெர்ரிகோ நகரத்தில் கைப்பற்றப்பட்ட தங்கத்தை வழிபாட்டு தளத்தில் பயன்படுத்துமாறு கடவுள் ஆணையிட்டார்.

முந்நூறு ஆண்டுகள் கழித்து, சாலமன், இஸ்ரேல் மற்றும் யூதாவின் இணைந்த பிராந்தியங்களின் மன்னன், மோசஸின் 'கூடாரத்தை மிஞ்சிய பொன்னுடன் ஒரு ஆலயத்தை கட்டினார். ஆலயத்தின் விளக்கு ஸ்டாண்ட்கள், பாத்திரங்கள், ஃபோர்க்குகள், கிண்ணங்கள், ஜாடிகள், பேசின்கள், கப்கள், முதலியவை அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டவை. புனிதத்தின் புனிதமான - உள் கோவில் - மற்றும் பத்து கட்டளைகளின் அசல் டேப்லெட்கள் நிறைந்த பரிசுத்த ஸ்தலம் கூட தங்கத்துடன் மேற்பொருத்தப்பட்டன. இன்றைய விலைகளில், சாலமனின் கோவிலில் இருந்த தங்கம் 50 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாக இருக்கலாம்.

உவமைகளில் தங்கம்

பல நிகழ்வுகளில், தங்கம் அதன் ஆதரவாளர்களின் மீது விசுவாசத்தின் சித்தாந்தங்களை கற்பிப்பதற்கான ஒரு உருவகமாகவும் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, தங்கம் நிறைந்த பைகள் பற்றிய ஒரு உவமையில், ஒருவர் தனது செல்வத்தை, அவர் வெளியில் சென்றிருக்கும்பொழுது அதை அவர்கள் பெருக்க முடியும் வகையில் மூன்று ஊழியர்களுக்கு ஒப்படைத்தார். தங்களது பங்கில் இருந்து பணம் சம்பாதித்த இரண்டு பணியாளர்களுக்கு எஜமான் பரிசளித்தார், ஆனால் எதுவும் செய்யாத பணியாளருடன் கோபம் கொண்டார். கதையின் கருத்து என்னெவென்றால், சொத்து மேற்பார்வைப் பொறுப்பின் சூழலில் எப்படி ஒருவர் கடவுள் தங்களிடம் ஒப்படைத்திருப்பதை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதாகும். ஒருவருடைய ஆர்வங்கள், நலன்கள், திறன்கள் மற்றும் திறமைகளை எல்லாம் தனக்குத் தானே வைத்துக்கொள்ளாமல் அவற்றை மற்றவர்களின் நன்மைக்காக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை இந்த கதை உபதேசிக்கிறது.

தொடக்கத்திலிருந்து இறுதி வரை

ஆதியாகமத்தில் தொடங்கி புதிய ஏற்பாட்டில் ஒரு அபோகலிப்டிக் ஆவணமான வெளிப்படுத்துகை வரை, பைபிள் முழுவதிலும் தங்கம் பற்றிய குறிப்புகள் நிலவுகின்றன.

படைப்பின் குறிப்பான ஆதியாகமத்தில் ஆதாம் மற்றும் ஏவாளுக்கு அதிக அளவில் தங்கம் கிடைத்ததாக கூறப்படுகிறது. பழைய ஏற்பாட்டின் முதல் புத்தகம் கடவுளின் படைப்பு என்பதால் தங்கத்தை நற்குணத்துடன் சம்பந்தப்படுத்துகிறது.

மறுஉருவாக்கத்தை குறிக்கும் வெளிப்படுத்துகையில், தங்கம் - புதிய ஜெருசலேம் – என்ற ஒரு நகரத்தை கட்ட பயன்படுத்தப்படுகிறது, அங்கு கடவுள் தனது சீடர்களுடன் இறுதியில் வாழ்வார்.

அப்போஸ்தலர் பால் எழுதிய நிருபங்களில் ஒன்றான, முதல் கொரிந்தியர்கள் தங்கத்தின் தூய்மயானது நெருப்பை தாங்கி நிற்பதாகக் காட்டுகிறது.

கிறிஸ்தவ ஒழுக்க நெறியில் தங்கம், ஞானம், விசுவாசம் மற்றும் அறிவைப் பற்றி வலியுறுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. தங்கம் இந்த உலகின் குடிமக்களின் வாழ்க்கையில் வகிக்கும் பங்கினைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள: உங்கள் மதத்தில் தங்கத்தின் பொருள் என்ன? என்பதை படிக்கவும்.

Sources:
Source1