Published: 08 செப் 2017

தங்க மோதிரங்கள் வாங்குவதற்கான வழிகாட்டி

How To Choose The Right Gold Ring Design

சொகுசு மற்றும் நளினத்தின் அடையாளமாக உலகெங்கும் நகைப்பெட்டிகளில் இடம்பெறுவது தங்க மோதிரங்கள். திருமணத்தில் உங்கள் வாழ்க்கைத் துணைவரின் கரத்தைப் பற்ற முதல் தேர்வு மோதிரம்தான். உங்களது நண்பருக்கும் குடும்பத்தினருக்குமான மதிப்பிற்குரிய அர்த்தமுள்ள பரிசுப்பொருள் அது. ஏன்? தங்கத்தின் நிறமானது காதல் மற்றும் அன்பின் குறியீடு என்பதனால் மட்டுமல்ல, தங்க மோதிரங்கள் மிகவும் புனிதமாகக் கருதப்படுகின்றன. ஜோதிட மற்றும் ஆன்மிகக் காரணங்களுக்காகவும் astrological and spiritual அவை அலங்காரமாகக் கருதப்படுகின்றன.

நீங்களும் உங்கள் நேசத்திற்குரியவர்களும் அணிந்து மகிழ்வதற்குரிய தங்க மோதிரத்தைக் கண்டறிவதற்கான வழிகாட்டி இது.

 1. படி 1: அளவை முடிவு செய்வது

  உங்களுக்காக நீங்கள் ஏதாவது மோதிரம் வாங்க வேண்டும் என்றால், உங்களுக்கு சரியாகப் பொருந்தக் கூடிய மோதிரத்தை தேர்ந்தெடுக்கவும். மிகவும் லூசாகவோ அல்லது இறுக்கமாகவோ உள்ளதைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்.

  நீங்கள் வேறு யாருக்காவது மோதிரம் வாங்க விரும்பினால், சரியான மோதிர அளவு உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம். பரிசீலனைக்காக ஒரு மோதிரத்தை அவர்களிடமிருந்து வாங்குவதே உங்களது சிறந்த தேர்வாக இருக்கும். அது உங்களுக்கு சாத்தியம் இல்லை என்றால், உங்களது சொந்த மோதிரத்தை அவர்களது மோதிரத்துடன் ஒப்பிட்டு அளந்து பார்த்தால் உங்களுக்கு என்று ஒரு கருத்து கிடைக்கும்.

  ஒரு வேளை நீங்கள் மோதிரத்தை வாங்கிவிட்டீர்கள், அதன் அளவு பெரியதாகவோ அல்லது இறுக்கமாகவோ இருக்கிறது என்றால், உங்களது நகைக்கடைக்காரரிடம் சொல்லி அதன் அளவை மாற்றலாம். ஆனால் அவ்வாறு செய்வதற்கு பின்வரும் விஷயங்களை மனதில் வைத்திருக்க வேண்டியது அவசியம்:

  • இந்த சவால்களுக்கான சாத்தியத்திற்கு தயாராக உள்ள நகைக்கடைக்காரரை தேர்ந்தெடுங்கள். அவர் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். உங்களது மோதிரத்தின் அளவை மாற்றக்கூடிய அளவிற்கு அனுபவம் மிக்கவராக இருக்க வேண்டும். நீங்கள் மோதிரம் வாங்குவதற்கு முன்பே இந்த கேள்விகளைக் கேட்க வேண்டும்.
  • எளிமையான மோதிர வடிவங்கள் அல்லது தங்க பேண்டுகளைப் பொருத்தவரை அளவை மாற்றுவது எளிதானது. ஆனால் நுண்ணிய வேலைப்பாடுடைய அல்லது வடிவங்களுடைய மோதிரங்களில் அது சிரமம். எனவே அளவை மாற்றக்கூடும் என்ற நிலையில் எளிமையான மோதிரங்களை வாங்குவதே சிறந்தது.
  • மோதிரம் மறு அளவிற்கு வந்தால் அதன் தடிமனை சோதிக்கவும். முறையற்ற மறுஅளவில் அதன் வடிவத்தையும் தடிமனையும் மாற்றுவதற்கு நகைக்கடைக்காரர்கள் முயற்சிக்கிறார்கள். மெல்லிய பாண்டுகளை அளவு மாற்றுவது சிரமம்.
 2. படிநிலை 2: நிறத்தைத் தேர்ந்தெடுத்தல்

  தங்க மோதிரங்கள் பல்வேறு நிறங்களில் கிடைக்கின்றன. அவை ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான தொடர்பும் அங்கீகாரமும் உள்ளது.

  வகைகள் வர்ணனை
  மஞ்சள் தங்கம் மிகவும் பொதுவான பொன்னிறம், மஞ்சள் தங்கம் வெறும் தங்கத்தை மட்டுமே கொண்டிருக்கும்.
  Yellow gold  
  வெள்ளை தங்கம் தங்கமும் நிக்கலும் கலந்தது. இதனால் நளினமான அழகிய பார்வை கிடைக்கும்.
  White gold  
  பிங்க் நிற தங்கம் தங்கம் மற்றும் தாமிரத்தின் கலவை. இது மிகவும் உயிர் துடிப்புடையது, ஒளிவீசக்கூடியது மற்றும் முற்றிலும் அழகானது.
  Pink gold  
  பச்சை தங்கம் தங்கம் மற்றும் வெள்ளியின் சீரிய கலவை. கம்பீரத்தையும் அழகையும் அளிப்பதில் இதற்கொன்றும் குறைவில்லை.
  Green gold  
 3. படிநிலை 3: ஒரு பாண்டை தேர்ந்தெடுப்பது

  உங்கள் வாழ்கை முறை மற்றும் முன்னுரிமைகளுக்காக ஒரு பாண்டை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு முறை பணிபுரியும்போதும் ஒரு மட்டி அல்லது செரேடட் தங்க பாண்டு சரியானது. அன்றாடம் அணிந்துகொள்வதற்கு பிரகாசமான மெருகூட்டப்பட்ட தங்க பாண்டு ஏற்றது. கண்ணாடி இழை கொண்ட அல்ல ஐஸ் தங்க பாண்டு நவநாகரிகமான சந்திப்புக்களுக்கு ஏற்றது. இதில் ஓரளவு அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.

  வகைகள் வர்ணனை
  பிரகாசமாக மெருகூட்டப்பட்ட தங்க பாண்டு உங்களது தோற்றத்திற்கு அற்புதமான அழகைத் தரும் பாரம்பரிய பிரகாசமான தங்க பாண்டு
   
  தங்க பாண்டு இவை மிகவும் மெல்லியவை, நீடித்து உழைக்கக்கூடியவை மற்றும் எளிதாக அணுசரிக்கக்கூடியவை.
   
  மட்டி தங்க பாண்டு எளிமையை விரும்புபவர்களுக்கு ஏற்ற மெல்லிய சொகுசான மாதிரி
   
  கண்ணாடி வெடிபொருள் கொண்ட தங்க பாண்டு கண்ணாடி போன்ற இறுதி பூச்சு, பளபளப்பாகவும் ஒளிஊடுருவும் தன்மையுடனும் இருக்கும்
   
  ஐஸ் தங்க பாண்டு எளிய வடிவங்களை விரும்பாதவர்களுக்கான கடுமையான வடிவங்கள்
   
 4. படிநிலை 4 : ஒரு வடிவத்தை தேர்ந்தெடுப்பது

  ஒரு மோதிர வடிவத்தை தேர்ந்தெடுக்கும்போது எளிமையையும் வடிவத்தையும் இணைக்கும். எப்போதுமே இருக்கும் நவநாகரிகத்திற்கான சூத்திரம் அதுதான். நீங்கள் எந்த விழாவிற்காக வாங்குகிறீர்கள் என்ற சந்தர்ப்பத்தையும் அப்போது நினைவு கூரவேண்டும். அன்றாடம் அணிதலுக்கு கூரிய முனைகள் கொண்ட அல்லது வெளியே தள்ளிய வடிவம் கொண்ட பொருட்கள் இருந்தால் உங்கள் இயக்கத்தை அது பாதிக்கும். மிகவும் நுண்ணிய வேலைப்பாடு கொண்ட மோதிரமாகவோ அல்லது விளையாட்டுத்தனமாக கண்ணைப் பறிக்கும் வகையிலோ இருந்தால் உடை எண்ணை அது மீறும். உங்களுக்கு எது வேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்தால், இந்த வடிவங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

  வகைகள் வர்ணனை
  எளிமையான தங்க பாண்டு ஓர் பாலினத்தவருக்காக ப்ரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மோதிர வடிவத்தை தேர்ந்தெடுககவும். அது நளினமாகவும் கம்பீரமாகவும் இருக்கும், அதே சமயம் மிகவும் ஆர்ப்பாட்டமாக இருக்காது. அத மரபு ரீதியாகவும் இருக்கும். அன்றாடம் பாரம்பரிய இந்திய உடையுடனோ அல்லது மேற்கத்திய உடையுடனோ அணிவதற்கு எளிதாக இருக்கும்.  பல்வேறு வகைப்பாடுகளில் முகடுகளிலும் கோணங்களிலும் வருகிறது.
   
  சிறிய கருத்து கொண்ட தங்க மோதிரம் மிகவும் நுண்ணிய வேலைப்பாடு கொண்டது மற்றும் நன்கு செதுக்கப்பட்ட கருத்துக்கள் கொண்ட மோதிரங்கள். அன்றாட பயன்பாட்டிற்கு பெரிய சந்தர்ப்பத்தை வழங்குகிறது. உங்களது முதல் எழுத்தையோ அல்லது நீங்கள் சந்தித்த நாளையோ அல்லது ஓர் இதயத்தையோ சேர்க்கவும்.
   
  மட்டிகோல்டு பாண்டு குறைவான மினுமினுப்பு அல்லது பளபளப்புடன் கூடிய நவநாகரிகமான அமைதியான மோதிரம். சாடின் முடிவுடன் ஏற்றுகொள்ளக்கூடிய வடிவில் முனைகளுடன் வரும்.
   
  பூ வேலைப்பாடுகள் கொண்ட தங்க மோதிரம் ஒரு பூ வடிவம் அல்லது வேலைப்பாடு கொண்ட தங்க மோதிரமானது மரபு ரீதியாக ஏற்றுகொள்ளக்கூடிய மாதிரியை அளிக்கும். மிகவும் எளிமையானதும் அல்ல, மிகவும் ஆடம்பரமானதும் அல்ல. எல்லாவிதமான தோற்றத்திற்கும் ஏற்றது. அன்றாடம் அணிவதற்கு வசதியானது.
   
  கைச்செயின் ப்ரேஸ்லெட்டுக்கள் நகையை விரும்பும் பெண்களுக்கான சிறந்த  தேர்வு. ஒரு சங்கிலியால் இணைக்கப்பட்ட மோதிரம் மற்றும் கைச்செயினின் இணைப்பு. கையின் பின்புறம் இது படர்ந்திருக்கும். இது மிகவும் நவீனமானது, ஃபேஷன் உடையது மற்றும் காண்பதற்கு மிகவும் கம்பீரமானது.  
   

பரிசளிப்பதற்கோ அல்லது சொந்தமாக வைத்துக்கொள்ளவோ மேலே குறிப்பிடப்பட்ட 4 எளிய படிநிலைகளைத் தொடரவும்.

Sources

Source1, Source2, Source3, Source4, Source5, Source6,