Published: 28 ஆக 2017

தங்கத்தால் கவுரவிக்கப்பட்ட – ராஜராஜேஸ்வரர் கோவில்

பண்டைய காலங்களிலிருந்து கோவில்களுக்கு தானம் (நன்கொடை) வழங்குவது என்பது இந்தியப் பாரம்பரியத்தில் ஒரு பொதுவான பழக்கமாகும். தங்கள் புனித நம்பிக்கைகளைப் பின்பற்றி, பக்தர்கள் தங்களின் விருப்பத்திற்குரிய தெய்வத்திற்கு பணத்தையும் தங்கத்தையும் நன்கொடையாக வழங்குகிறார்கள். இருப்பினும், வழக்கத்திற்கு மாறான மற்றும் வியக்கத்தகு சடங்குகளின் காரணமாக, ராஜராஜேஸ்வரர் கோவிலானது இந்தியாவின் மற்ற கோவில்களிலிருந்து தனித்து நிற்கிறது.

சிவபெருமானின் இராஜராஜேஸ்வரர் ஆலயமானது, புகழ்பெற்ற நபர்களுக்கு அந்தந்த துறைகளில் அவர்களின் சிறந்த பங்களிப்பிற்காக "வீரஷ்ரிங்கள" விருது வழங்குவதில் புகழ்பெற்று விளங்குகிறது.

வீரஷ்ரிங்கள என்பது தங்கக் காப்பு வடிவத்தில் இருக்கிறது, அது பாரம்பரியமாக 40 கிராம் எடையுள்ளதாக உள்ளது மற்றும் அரச முத்திரையைக் கொண்டுள்ளது. கோயிலுடன் தொடர்புடைய முக்கிய அறிஞர்கள் கொண்ட ஒரு குழுவினால் விருது பெறுபவர் தேர்வுசெய்யப்படுவார், மேலும் தங்கக் காப்பானது அரச குடும்பத்தின் உறுப்பினர்களால், பொதுவாக அரசரால் வழங்கப்படுகிறது.

இராஜராஜேஸ்வரர் புனித கோவிலின் பிரதான பூசாரியானவர் வீரஷ்ரிங்களத்தைப் பல நபர்களுக்கு வழங்கியுள்ளார். குறிப்பிடத்தக்க கலைஞரும் நடிகருமான காலம்சென்ற குருமணி மாதவ சக்யார் என்பவர் இந்தக் கோவிலின் வீரஷ்ரிங்களத்தைப் பெற்ற மிகவும் இளைய நபர் மற்றும் கடைசி நபர் ஆகும்.

பழமையான ராஜராஜேஸ்வரர் (அரசர்களுக்கு எல்லாம் அரசர்) கோவில் என்பது சிவபெருமானின் தற்போதுள்ள 108 பழங்கால கோவில்களில் ஒன்றாகும். கோவிலின் ஷிகாரா (கோபுரம்) என்பது இரண்டு பெரிய ஏழு மாடி கோபுரங்களுடன் (நினைவுச்சின்ன கோபுரங்கள்) அந்தக் காலத்தில் மிக உயரமானதாக இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், திப்பு சுல்தான், அவரது இராணுவத்தின் மூலம், இந்த பழங்கால கோவிலை சிறிது சிதைத்தார்.

தற்போது, இந்தக் கோவிலானது பாரம்பரிய கேரள கோவில் கட்டிடக்கலை பாணியில் கட்டமைக்கப்பட்டு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோவிலின் உச்சியில் உள்ள அழகிய தங்கக் கலசமானது (கோபுரம்) தொலைவில் இருந்து தெய்வத்தின் தரிசனத்தை (தோற்றம்) அளிக்கிறது.

ஜோதிர்லிங்கம் அல்லது சிவலிங்கம் என்பது ராஜராஜேஸ்வர சுவாமியைக் (சிவன்) குறிக்கிறது, மேலும் பக்தரிகளிடம் இருந்து பெறப்படும் பல்வேறு காணிக்கையான மலர்கள், வில்வ மரத்தின் இலைகள் (வில்வம்/ மர ஆப்பிள்) ஆகியவை மூலம் சுவாமிக்கு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. ஜோதிர்லிங்கத்தின் அடிப்பகுதியானது தங்கத் தகடால் மூடப்பட்டுள்ளது, அதேபோல் அதன் கோலகா (மேல்பகுதி) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அலங்காரமில்லாமல் புனித லிங்கத்தை ஒரு நாளில் இரண்டு முறை மட்டுமே பார்க்க முடியும்; காலை 5:30 மணிக்கு நிர்மல்யத்தில், லிங்கத்தின் முதல் அபிஷேகத்திற்காக (புனித குளியல்) பூசாரி தயார்செய்யும் பொழுது, மற்றும் இரவு 9:30 மணியளவில் நவக்காபிஷேகத்தில், அலங்காரங்களை அகற்றும்போது.

இத்துடன், உற்சவமூர்த்தி அல்லது பலிபம்பம் என்பது ஜோதிர்லிங்கத்தை பிரதிபலிக்கிறது, அது சிறப்பு சந்தர்ப்பங்களில் மட்டுமே தரிசனத்திற்கு (பார்வை) கிடைக்கும். உற்சவமூர்த்தியானவர் ஒரு அலங்கரிக்கப்பட்ட தங்கத் தகடால் மூடப்பட்டுள்ளார், மேலும் பெரிய விழாக்களுக்காக தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுகிறார்.

இந்த மரபுகள் தவிர, ராஜராஜேஸ்வரர் ஆலயமானது மதரீதியாக "நெய் விளக்கை" ஏற்றுகிறது, இது இந்து இதிகாசங்களின்படி முதன்முதலாக அகஸ்திய மகரிஷி முனிவரால் ஏற்றி வைக்கப்பட்டது. பக்தர்கள் லிங்கத்திற்கு நெய் (தெளிந்த வெண்ணெய்) அல்லது மங்களகரமான நெய்-விளக்கை வழங்குகின்றனர். இந்த விளக்குகளானது வழக்கமாக ஒரு தங்கக் குடத்தில் வழங்கப்படுகிறது, சிவபெருமானை சாந்தப்படுத்துவதற்காக கருவறையின் நுழைவாயில் படிகளின்மீது ஏற்றி வைக்கப்படுகின்றது.