Published: 12 செப் 2017

தங்கம் எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது?

தங்கம் சுரங்கங்களில் இருந்து வருகிறது என்று நாம் அனைவரும் அறிவோம். இந்த தங்கச் சுரங்கங்களானது பூமியின் மேற்பரப்புக்கு கீழே பல நூறு மீட்டர்களுக்கு செல்கின்றன. இங்கேதான் சுரங்கத் தொழிலாளர்கள், பாறைகளின் பிளவுகளில் தங்கம் மற்றும் பிற உலோகங்களின் செறிவுகளாக உள்ள தாது வண்டல் படிவங்களில் அல்லது இழைம படிவங்களில் தங்கத்தை அதன் இயற்கை வடிவத்தில் தேடுகிறார்கள்.

தங்கத்தைப் பிரித்தெடுப்பதற்காக பயன்படுத்தப்படும் செயல்முறையில் பாறைகளில் துளையிடுதல் மற்றும் வெடிக்கச்செய்தல் ஆகியவை மேற்கொள்ளப்படும். சுரங்கத் தொழில் தொடங்கப்படுவதற்கு முன்னர், பொறியாளர்கள் மற்றும் புவியியலாளர்கள் ஆகியோர் திட்டமிடுவதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொள்கின்றனர், மேலும் பாறைகளில் தங்கம் உள்ள துல்லியமான இடத்தைக் காண்பிக்கிறார்கள். இதன் விளைவாக, தாது என்று குறிப்பிடப்படும் தங்கப் பளிங்குக் கற்களை அதிக அளவில் சுரங்கம் தோண்டுபவர்கள் பிரித்தெடுக்கின்றனர். தாது என்பது அதன் பின்னர் தங்கத்தை பிரித்தெடுப்பதற்காக ஆலைக்கு மாற்றப்படுகிறது. சரியாக கணக்கிடப்பட்டால், ஒரு நல்ல தங்கச் சுரங்கமானது ஒவ்வொரு 1000 கிலோ எடையிலான தாதுக்கு 6.5 கிராம் தங்கத்தை அளிக்கும். அதைப் பற்றி யோசியுங்கள்.

தங்கத் தாதுக்கள் என்பது தூய்மானவை அல்ல, அவை வெள்ளி போன்ற பிற உலோகங்களோடு பிணைக்கப்பட்டுள்ளன. ஆலையில், தங்கம், வெள்ளி, மற்றும் பாறை ஆகியவை மணல் தூள் போன்ற கலவையாகும் வரை, பெரிய தாது கட்டிகளானது நொறுக்கி, உடைக்கப்படுகிறது. பின்னர் அது கூழ் போன்று ஆகும் வரை, போதுமான அளவு தண்ணீர் மற்றும் சயனைடு உடன் கலக்கப்படுகிறது, இது வீழ்படியும் தொட்டிக்குள் பாய்ச்சப்படுகிறது. ஈர்ப்பு விசையின் காரணமாக, சுத்திகரிப்பின் முதல் கட்டம் இங்குதான் நடக்கிறது. மண்ணில் உள்ள கனமான திடமான துகள்கள் தொட்டியின் அடிவாரத்தில் வீழ்படிகிறது, அவை திரவத்திலிருந்து பிரிக்கப்படுகின்றன. இந்த சேறு போன்ற கலவையில் காற்று விடப்படுகிறது, மேலும் ஆக்ஸிஜன் - ஒரு வினை ஊக்கியாக செயல்பட்டு - ஒரு வேதி எதிர்வினையை தொடங்குகிறது, இது தாதுக்குள் உள்ள தங்கத்துடன் சயனைடு வினைபுரியச் செய்கிறது, இதனால் தங்கம் கசிந்து, தண்ணீரின் கரைகிறது. இப்பொழுது, தங்கம் மற்றும் தண்ணீர் கரைசல் மட்டுமே மீதமிருக்கும்.

இந்தக் கரைசலானது கவனமாக பிரித்தெடுக்கப்பட்டு, சுழலும் உருளையின் வளைந்த மேற்பரப்பில் சொட்டு சொட்டாக விடப்படுகிறது. இந்தச் சொட்டுகளானது மேற்பரப்பில் வழிந்தோடி, விரைவாக ஆவியாகக்கூடிய கரைசலின் மெல்லிய தடயத்தை விட்டுச் செல்கின்றன; இப்பொழுது நம்மிடம் இருப்பது சீரற்ற வடிவிலான ஒரு அழகிய, மெல்லிய தங்கப் படலம் ஆகும்.

1600 டிகிரி செல்சியஸ் (அல்லது 2912 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலைக்கு சூடேற்றப்பட்டு, வினையூக்கிகள் மற்றும் வேதிக் காரணிகளைப் பயன்படுத்தி அதிகப்படியான அசுத்தங்களானது வேதி வினைகள் மூலம் தங்கத்திலிருந்து அகற்றப்படுகின்றன. இந்த செயல்முறையானது, மீண்டும் புவி ஈர்ப்பு அம்சங்கள் ஏற்படும் முன்னர், தங்கம் மற்றும் மற்ற அனைத்து அசுத்தங்களையும் உருக்குகிறது. இந்தச் செயல்முறையின் காரணமாக கனமான உருகிய அசுத்தங்கள் கீழே வீழ்படிகின்றன, அதே நேரம், இலகுவான உருகிய தங்கம் அதற்கு மேல் மிதக்கிறது. தண்ணீர் மீது எண்ணெய் மிதக்கும் அடர்த்தி எனப்படும் அதே காரணத்தினால், இவ்வாறு நிகழ்கிறது.

இறுதியாக, உருகிய தங்கமானது நாம் அறிந்திருக்கும் தங்கக் கட்டி வடிவத்தில் பிரித்தெடுக்கப்பட்டு, குளிர்விக்கப்படுகிறது. தங்கம் திடமாவதற்கு 4 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும், மேலும் ஒரு குளிர்ந்த நீர்த் தொட்டியில் மேலும் ஒரு மணி நேரம் குளிர்விக்க வேண்டும். இந்த தங்கக் கட்டிகள், அல்லது இன்காட்கள் என்பது 80% தூய்மையானவை ஆகும்.

தூய்மையான தங்கத்தை வழங்கும் சுத்திகரிப்பு ஆலைகளில், 99.5% சுத்திகரிப்பு செய்யப்படும்வரை உருக்கும் செயல்முறை மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது, பின்னர் 99.9% தூய்மையை அடைவதற்கு மின்னாற்பகுப்பு செய்யப்படுகிறது, இதுவே நாம் பயன்படுத்தும் மிகச்சிறந்த தரநிலை ஆகும்.