Published: 08 ஆக 2017

உலகில் உள்ள மாபெரும் தங்கச் சுரங்கங்கள்

உலகிலேயே பெரிய தங்கம் உற்பத்தி செய்யும் சுரங்கத்தை வைத்துள்ள நாடு எது? இந்த சுரங்கங்களின் சொந்தக்காரர் யார்? ஒவ்வொரு சுரங்கமும் எவ்வளவு தங்கம் வைத்துள்ளது? இவை குறித்து நாம் காண்போம்.

 
  1. முருன்டா தங்க வைப்புக்கள், உஸ்பெக்கிஸ்தான், ஆசியா

    2016ஆம் ஆண்டு, இந்த தங்கச் சுரங்கம் 60 டன்களுக்கும் அதிகமான தங்கத்தை உற்பத்தி செய்து உலகிலேயே பெரிய தங்கச்சுரங்கம் என்று பெயெரெடுத்துள்ளது. உஸ்பெக் அரசால் செயல்படுத்தப்படும் இந்த சுரங்கத்தின் பங்கு உரிமைதாரர் நவோய் சுரங்கமாகும். இனியும் தோண்டி எடுக்கப்பட வேண்டிய 5000 டன்களுக்கும் மேல் தங்கம் இங்கு உள்ளது என்று அறியப்பட்டுள்ளது. அதாவது இவற்றின் எடை 25 நீல திமிங்கலங்களுக்கு சமம்.

    Muruntau Gold Mine, Uzbekistan

    Image Source: Source1

  2. புயப்லோ வியஜோ, டொமினிக்கன் ரிபப்ளிக், தென் அமெரிக்கா

    புயப்லோ வியஜோ சுரங்கத்தில் (The Pueblo Viejo) தங்கம் மட்டுமல்ல வெள்ளியும் கிடைக்கும். தற்போது இந்த சுரங்கமானது கனடாவைத் சார்ந்த பாரிக் கோல்டு கார்பரேஷன் மற்றும் போல்டுகார்ப் இங்க் ஆகிய நிறுவனங்களால் கூட்டு உரிமை பெற்றுள்ளது. சமீபத்தில் இந்த சுரங்கத்திலிருந்து 36 டன்கள் தங்கம் கிடைத்துள்ளது.

    Pueblo Viejo Gold Mine, South America

    Image Source: Source1

  3. கோல்டு ஸ்டிரைக், அமெரிக்க ஐக்கிய நாடுகள், அமெரிக்கா

    நேவாடா மாநிலத்தில் உள்ள இந்த சுரங்கமானது சுரங்கமானது கனடாவைத் சார்ந்த பாரிக் கோல்டு கார்பரேஷன்னுக்கு சொந்தமானது. 2016ஆம் ஆணடில் இங்கு 36 டன்கள் தங்கம் கிடைத்தன.

    Goldstrike Gold Mine, USA

    Image Source: Source1

  4. க்ராஸ்பெர்க், இந்தோனேசியா, ஆசியா

    பரப்பளவில் உலகிலேயே பெரிய தங்க சுரங்கம் இது. இந்த சுரங்கத்தில் தங்கம், தாமிரம் மற்றும் வெள்ளி இருப்புகள் உள்ளன. இந்த சுரங்கத்தில் இதுவரை 20,000 பேர் பணிபுரிகின்றனர். அமெரிக்க நிறுவனமான ஃபரீபோர்ட் மெமோரான்னும் இந்தோனேசிய அரசும் இதனை கூட்டாகப் பெற்றுள்ளன. சமீபத்திய தரவுகளின் படி இங்கு 33 டன்கள் தங்கம் சுரண்டி எடுக்கப்பட்டுள்ளது.

    Grasberg Gold Mine, Indonesia

    Image Source: Source1

  5. கார்டெஸ், அமெரிக்க ஐக்கிய நாடுகள், அமெரிக்கா

    நெவாடாவிலிருந்து பாரிக் கோல்டு கார்பரேஷன்னுக்கு சொந்தமான சுரங்கம் இது. இந்த நிறுவனத்திற்கும் அரசுக்கும் அதிக அளவு தங்கத்தை அளிக்கக்கூடிய சுரங்கம் இது. சென்ற ஆண்டு, 33 டன்கள் தங்கம் இங்கு கிடைத்தது.

    Cortez Gold Mine, USA

    Image Source: Source1

  6. கார்லின் டிரண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகள், அமெரிக்கா

    நேவாடா முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த சுரங்கம் உள்ளது. இதனை முதன் முதலில் அமெரிக்காவின் நியூமான்ட் சுரங்க நிறுவனம் 1983ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சி செய்தது. இந்த சுரங்கத்திலிருந்து சமீபத்தில் கிடைத்த தங்கத்தின் அளவு 30 டன்கள்.

    Carlin Trend Gold Mine, USA

    Image Source: Source1

  7. ஒலிம்பியாடா, இரஷ்யா, ஆசியா/ ஐரோப்பா

    உலகின் மாபெரும் தங்கச் சுரங்கங்களுள் ஒன்றான இது, 1996ஆம் ஆணடு உற்பத்தியை துவங்கியது. 2016ஆம் ஆண்டில் 29.3 டன்கள் தங்கத்தை உற்பத்தி செய்துள்ளது.

    Olimpiada Gold Mine, Russia

    Image Source: Source1

  8. லிகிர், பப்புவா நியூ கினி

    மத்திய பசிபிக் பெருங்கடலை சுற்றியுள்ள தீவுகளின் பிராந்தியத்தில் மத்தியில் உள்ளது ஓசியானியா. இந்த பகுதியில் உள்ளது லிகிர் சுரங்கம். இந்த சுரங்கமானது லிகிர் தங்க நிறுவனத்தைச் சேர்ந்தது. அண்டை நாடுகளில் உள்ள ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் செயல்படுகிறது.

    Lihir Gold Mine, Papua New Guinea

    Image Source: Source1

  9. பாட்டு ஹிஜாவு, இந்தோனேசியா, ஆசியா

    அம்மான் மினரல்ஸ் என்ற உள்நாட்டுக் கம்பெனிக்கு சொந்தமான இந்த பாட்டு ஹிஜாவு சுரங்கமானது சென்ற ஆண்டு 26.7 டன்கள் தங்கம் உற்பத்தி செய்துள்ளது.

    Bata Hijau Gold Mine, Indonesia

    Image Source: Source1

  10. போடிங்டன், ஆஸ்திரேலியா

    1987ஆம் ஆண்டு முதன்முதலாக சுரண்டப்பட்ட இந்த சுரங்கம் 2001ஆம் ஆண்டில் மூடப்பட்டது. இங்கு சுரங்கத்தொழில் 2010ஆம் ஆண்டில் திறந்தது. இது தற்போது ஆஸ்திரேலியாவின் மாபெரும் தங்கச் சுரங்கம். அமெரிக்காவின் நியுமான்ட்டிற்கு சொந்தமான இந்தச் சுரங்கத்தில் 2016ஆம் ஆண்டு 25 டன்கள் தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    Boddington Gold Mine, Australia

    Image Source: Source1