Published: 06 ஜூலை 2017

தங்கம் வாங்குவது ஒரு முட்டாள்தனமான செயலா?

Make Gold buying a Foolproof Process?
இந்தியாவில் தங்கம் வாங்குவது பணக்காரர்கள் மத்தியில் மட்டுமின்றி அனைத்து வருமான பிரிவினர்கள் மத்தியிலும் ஒரு பிரபலமான முதலீட்டு தேர்வாக இருக்கிறது. பிற முதலீடுகள் போலவே, தங்கத்தில் முதலீடு செய்வதிலும் சில ஆபத்துக்கள் இருக்கின்றன. அதிர்ஷ்டவசமாக, இதை நாம் ஒரு சில எச்சரிக்கை மூலம் தவிர்க்கலாம். உங்கள் முதலீடு பாதுகாப்பானது மற்றும் இலாபகரமானது என்பதை உறுதி செய்ய தங்கம் வாங்கும் போது பின்வரும் காரணிகளை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்:

1. தூய்மை
தூய்மையான தங்கம் மிக மென்மையாக இருக்கும் மேலும் இதை நகைகள் அல்லது கட்டிகளில் பயன்படுத்த முடியாது; எனவே இதன் வலிமையை அதிகரிக்க இதனுடன் வெள்ளி, நிக்கல் அல்லது செம்பு போன்ற குறிப்பிட்ட சில உலோகங்கள் சேர்க்கப்படுகின்றன. தங்கம் மற்றும் சேர்க்கப்பட்ட உலோகங்களின் விகிதத்தின் அடிப்படையில் தங்கம் பொதுவாக 18 காரட், 22 காரட் மற்றும் 24 காரட் என பல்வேறு ‘காரட்’ அளவுகளில் கிடைக்கிறது.

நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு தகுந்ததை வாங்குகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். ஒரு உள்ளூர் நகை வியாபாரியிடம் நீங்கள் தங்கம் வாங்கினால் தங்கத்தின் தூய்மையை மதிப்பிடுவதில் சூட்சமம் இருக்கலாம். ஆனால் விற்கும் நகைகளின் தூய்மைக்கு தேவையான சான்றிதழை வழங்கும் ஒரு பிராண்டடு கடையில் நீங்கள் தங்கம் வாங்கினால் இந்த பிரச்சனையை தடுக்கலாம். பெரும்பாலான பிராண்டடு கடைகளில் தங்கத்தின் தூய்மையை அளவிட மற்றும் உறுதிப்படுத்த காரட் மீட்டர் போன்ற மெஷின்கள் பயன்படுத்தப்படுகின்றன.

2. நம்பகத்தன்மை
வாங்குபவர்கள் தாங்கள் ஏமாற்றப்படுவதை தவிர்க்க சான்றிதழ் அதிகாரங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். இந்தியாவில், நாணயங்கள் மற்றும் கட்டிகள் உட்பட தங்க நகைகளுக்கு இந்திய தரக்கட்டுப்பாட்டு ஆணையம் (BIS) ஹால்மார்க் முத்திரையிட்டு சான்றிதழ் வழங்குகிறது; எனவே BIS ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட தங்கத்தை வாங்குவது நம்பகமானதாக கருதப்படுகிறது.

ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகை சற்று விலை அதிகமானதாக இருந்தாலும், தூய்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு அங்கீகாரமளிக்கிறது மற்றும் வாங்குகிறவருக்கு அவர் கொடுக்கும் பணத்திற்கு உத்தரவாதமளிக்கிறது..

3. விலை
தங்க நகையின் விலை அதனை செய்யும் ‘கட்டணங்களுடன்’ வருகிறது. இது நகையை வடிவமைக்கும் போது நகை வியாபாரிக்கு ஏற்படும் செலவாகும் அதாவது வடிவமைப்பின் கலைநயம் அதிகரிக்க அதிகரிக்க செய் கூலி கட்டணங்களும் அதிகரிக்கிறது.

4. சேமிப்பு
பாதுகாப்பு காரணங்களுக்காக, தங்கத்தை வங்கி லாக்கரில் வைக்க வேண்டும் மற்றும் தங்கம் வாங்குவதற்கு முன் லாக்கர் செலவையும் மனதில்கொள்ள வேண்டும். அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல் எதுவும் இல்லையென்றாலும், வங்கிகள் பொதுவாக உங்களுக்கு ஒரு லாக்கரை ஒதுக்குவதற்கு முன் ஒரு நிலையான வைப்பு அல்லது சேமிப்புக் கணக்கை வைத்திருக்க வேண்டும். ஆனாலும் இது வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது, எனவே இதை முன்னதாகவே தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். மேலும் லாக்கரை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஒரு வருடாந்திர கட்டணமும் விதிக்கப்படுகிறது.

5. மறுவிற்பனை
உங்கள் தங்க நகைக்கான அதிகபட்சமான மறுவிற்பனை மதிப்பை பெற வேண்டுமென்பதை உறுதிப்படுத்த வேண்டுமென்றால், தூய்மை சான்றிதழ் மற்றும் வாங்கிய ரசீதை பாதுகாப்பது மிகவும் முக்கியமாகும்; அவை இல்லையென்றால், மறுவிற்பனையின் போது கடைக்காரர்கள் தங்கத்தின் மதிப்பிலிருந்து ஒரு கணிசமான அளவு கழித்துவிடக் கூடும்.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டல் நெறிமுறைகள் வங்கிகளுக்கு தங்க நாணயங்கள் மற்றும் கட்டிகளை விற்பதற்கு அனுமதி வழங்கியிருக்கிற அதேவேளையில் தங்கத்தை திரும்ப வாங்குவதற்கு தடை விதித்துள்ளது. ஆனாலும் உள்ளூர் அல்லது பிராண்டடு நகைக் கடைகள் நாணயங்கள் மற்றும் கட்டிகளை திரும்ப வாங்கிக் கொள்கின்றன மற்றும் நகை விஷயத்தில் அதிகபட்ச மறுவிற்பனை மதிப்பை பெற ரசீதை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியமானதாகும்.

முடிவுரை
தங்கத்தை வாங்குவதற்கு முன் இந்த காரணிகள் அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டால் நீங்கள் நிச்சயமாக ஒரு பாதுகாப்பான மற்றும் நம்பகமான முதலீட்டை செய்வீர்கள் இது பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பை வழங்குவது மட்டுமின்றி நீங்கள் வாங்க திட்டமிடும் தங்கத்தின் தூய்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதமளிக்கிறது