Published: 31 ஜூலை 2017

ஆவண தங்கத்தின் மீதான வரிப் பலன்கள்

Paper Gold Investment

பொருளாக உள்ள தங்கத்தில், திருமணமான பெண், ஒரு தனிப்பட்ட பெண், ஒரு ஆண் முறையே 500 கிராம், 250 கிராம், 100 வைத்திருந்தால் வரிவிதிப்பு சட்டங்கள் (இரண்டாவது திருத்தம்) மசோதா படி வரிவிதிக்கப்படாது. ஆனால், இலாபத்திற்காக விற்கும் போது, பொது நுகர்வு வரி மற்றும் வருமான வரியின் கீழ் இலாபத்திற்கு வரி செலுத்த வேண்டும். மேலும், தங்கத்தை முதலீடு மற்றும் வைத்திருக்கும் காலத்தில் ஏற்படும் உற்பத்தி கட்டணங்கள், சேமிப்பு அல்லது லாக்கர் கட்டணங்கள் போன்ற பிற செலவுகளும் பொருளாக வைத்திருக்கும் போது தவிர்க்க முடியாதவைகளாக இருக்கின்றன.

ஆனால் குறைந்த வரியில் தங்கத்தை முதலீடு செய்ய வழிகள் உள்ளன?

 

எனவே, அடுத்த முறை தங்கத்தின் மூலம் உங்கள் செல்வத்தை பெருக்குவது பற்றி மட்டுமின்றி அதை சேமிப்பது பற்றியும் சிந்தியுங்கள்.

  1. தங்க ஈ.டி.எப்-கள்: பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் நிறுவனத்தின் பங்குகள் போலவே, தங்க ஈ.டி.எப்-கள் என்பது தங்கத்தின் சந்தை மதிப்புக்கு சமமான அளவாகும் இருக்கும் மற்றும் இதை பொருள் சந்தைகளிலும் வர்த்தகம் செய்யலாம். இவ்வடிவிலான தங்க முதலீட்டை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு விற்கும் போது குறியீட்டு பலனுடன் சேர்த்து 20% மூலதன ஆதாயங்களும் வரிக்கு உட்படுத்தப்படுகிறது. உதாரணமாக, பணவீக்கம் 8% ஆக உயரும் அதே காலகட்டத்தில் உங்கள் தங்க ஈ.டி.எப் மதிப்பு ஒவ்வொரு வருடமும் 12% அதிகரித்தால், மீதமுள்ள 4% க்கு மட்டுமே வரி செலுத்த வேண்டும்.
  2. தங்க மியூச்சுவல் ஃபண்ட்கள்: ஒரு தொழில்முறை நிதி மேலாளரால் தங்க ஈ.டி.எப்-களில் முதலீடு செயப்படுகிறது, தங்க மியூச்சுவல் ஃபண்ட்கள் உங்கள் ஆபத்தை குறைக்கின்றன. தங்க ஈ.டி.எப்-கள் போலவே, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு விற்கும் போது குறியீட்டு பலனுடன் சேர்த்து மூலதன ஆதாய வரி விதிக்கப்படுகிறது. மேலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பே விற்பனை செய்யும் போது, இலாபமானது ஏற்கனவே உள்ள உங்கள் வருமான வரி அடுக்கின் கீழ் வரிக்கு உட்படுத்தப்படுகிறது. 

    தொடர்பானவை: Buying Gold—It’s Time to Embrace Modern Options

  3. தங்க சேமிப்பு நிதிகள்: மேலும் நிதிகளின் நிதிகள் என அழைக்கப்படுகின்றன, இவை தங்க ஈ.டி.எப்-கள் மற்றும் பிற குறுகிய கால நிதிகளில் முதலீடு செய்யும் அத்தியாவசியமான மியுச்சுவல் ஃபண்டாகும். நீங்கள் மாதா மாதம் ரூ. 1,000 என்ற குறைவான ஒரு முறையான முதலீட்டு திட்டத்தில் (SIP) முதலீடு செய்யலாம். மேலும் ஒரு டிமேட் கணக்கு இல்லாமல், வழக்கமான இடைவெளியில் நிரந்த தொகையை டெபாசிட் செய்யலாம். ஒரு வருடத்திற்குப் பிறகு நீண்ட கால மூலதன ஆதாய வரியின் வரிவிதிப்பு பலன்களை நீங்கள் பெறுவீர்கள்.
  4. தங்க பத்திரங்கள்: முதலீட்டாளர்களுக்கு தங்கம் விலை தொடர்பான பலன்களை கொடுப்பதற்காக இந்தத் திட்டமானது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட இந்திய அரசாங்கத்தின் பத்திரங்களாக இருப்பதால், இவை ஒரு உயர்ந்த உத்திரவாதத்துடன் வருகின்றன. இது முதிர்வடையும் போது, பெறப்பட்ட தொகைக்கு வரி விலக்கு உண்டு. ஆனால், முதிர்வு தேதிக்கு முன்பே மீட்கப்பட்டால், மூலதன ஆதாய வரி விதிக்கப்படும்.
எனவே, அடுத்த முறை தங்கத்தின் மூலம் உங்கள் செல்வத்தை பெருக்குவது பற்றி மட்டுமின்றி அதை சேமிப்பது பற்றியும் சிந்தியுங்கள்.