Published: 20 ஆக 2019

கோல்டு ETF முதலீடு செய்யும் முன்னர் மனதில் கொள்ள வேண்டிய முதன்மை விஷயங்கள்

Gold ETF Investment

உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த வகையில், தங்கம் ஒரு அற்புதமான கூடுதல் சொத்து மதிப்பாகும். இது ஒரு பணவீக்கமாகவும் பண ஏற்ற-இறக்க பாதுகாப்பு வேலியாகவும் செயல்படுகிறது. எல்லா வகையான ETF-களும் மேற்கில் மிகவும் பிரபலமானவை என்பதுடன் அவர்கள் இவற்றில் முதலீடு செய்யும் விதமே நமக்கு மிகப்பெரிய பொருத்தம் கொண்டதாக இருக்க முடியும்.

தங்கத்தைப் பின்புலமாக கொண்ட ETF-களின் அலகுகளானவை பரிமாற்றகத்தில் ஒரு தனிப்பட்ட பங்கினைப் போலவே வர்த்தகம் செய்யப்படுகின்றன, அத்துடன், ஒரு கோல்டு ETF ஒப்பந்த மதிப்புக்களையும் பெற்றிருக்கிறது கோல்டு ETF-இல் முதலீடு செய்யும்போதும்,அதையே விற்கும்போதும் தங்கமானது உங்களிடம் கையிலுள்ள பொருளாக இருக்க வேண்டியதில்லை. தங்கத்தை கையிலுள்ள பொருளாக வைத்திருக்க வேண்டிய கவலை இல்லாமல் தங்கத்தின் வளர்ச்சியை உங்களுக்குப் பெற்றுத்தர கோல்டு ETF-கள் உதவுகின்றன.

Buying Gold ETF for investment

தங்கத்தை வாங்குவதற்கான காரணங்களில் உங்களுக்கு குறைவிருக்காது, ஆனால் கோல்டு ETF-களை, வாங்கும்போது நீங்கள் சில விஷயங்களை மனதில் வைத்திருக்க வேண்டும்.

கோல்டு ETF செலவின விகிதம்

ETF-கள் குறியீட்டெண்ணால் இயக்குவிக்கப்படுகின்றன, கோல்டு ETF என்று வரும்பொழுது நிதியின் வளர்ச்சியானது தங்கத்தினுடைய அப்போதைய விலையோடு தொடர்புபடுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு சொன்னால், நேரடி வர்த்தகத்துடன் ஒப்பிடும்போது ETF-களை கையாளுவது எளிதான விஷயம் என்பதைத்தான் இது குறிப்பிடுகிறது. இந்தக் குறிப்பிட்ட காரணத்திற்காகவே மேற்கத்திய ETF முதலீட்டாளர்கள் தங்களுடைய ETF கணக்கின் மீது கூடுதல் கட்டணம் எதையும் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். “செலவின விகிதம்” எனப்படுவது எவ்வளவு விதிக்கப்பட்டாலும், ஒரு வருடத்தில் நீங்கள் எவ்வளவு செலுத்தினாலும், ETF விலையானது அப்போதைய விலையை வைத்து மட்டுமே தீர்மானிக்கப்படும். அதனால் குறைந்த செலவின விகிதத்தை செலுத்த நீங்கள் தீர்மானித்தாலும், தங்கத்திற்கு கிடைக்கின்ற வளர்ச்சி மதிப்பை நீங்கள் தொடர்ந்து ஈட்டிக் கொண்டிருக்கலாம்.

வர்த்தக நடவடிக்கைகளில் தங்கத்தின் அடக்கவிலை

நீங்கள் ETF-ஐ வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ, ETF-நிதி நிர்வாக நிறுவனத்தால், எப்போதுமே குறைவான அளவில் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் கட்டணம் விதிக்கப்படுகிறது. இருந்தாலும், இது நீங்கள் மேற்கொள்கின்ற ஒவ்வொரு ETF நடவடிக்கையிலும் விதிக்கப்படுகிறது. ஆகையால், முதலீட்டாளர்கள் பொதுவாகவே தங்களுடைய ETF நடவடிக்கைகள் மீது குறைந்த செலவினம் அல்லது நடவடிக்கை கட்டணம் கொண்டுள்ள நிதியங்களையே நாடிச்செல்ல விரும்புகிறார்கள். ஒரு குறைவான செலவின விகிதம் கொண்டுள்ள ஒரு நிதியை நீங்கள் தேர்வு செய்யும்போது, நடவடிக்கைகளின் அளவு மிகவும் அதிகமாக இல்லாத வகையில் இருக்கிறதா என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், செலவின விகிதத்தில் நீங்கள் சேமித்தவற்றை உங்களுடைய அடக்கவிலையில் இழக்க நேரிடலாம்.

தங்கப் பத்திரம் தரகு கட்டணம்

தரகில் இருந்து கிடைக்கும் வருவாய்கள் ETF வைத்திருப்பவருக்கு கிடைக்கும்போது பத்திரத் தரகானது பயன்மிக்கதாக இருக்கலாம். ETF வெளியிடுநருக்கான கட்டணத்திற்கு பதிலாக, உங்களுடைய ETF அல்லது அதனுடைய ஒரு பாகத்தை பிற முதலீட்டாளர்கள் வாங்குமிடத்தில் இது ஒரு கொள்கையாக பின்பற்றப்படுகிறது. வெளியிடுநர் தங்கள் கட்டணத்தை உங்களுக்கு மாற்றிக் கொடுத்தால், நீங்கள் உங்களுடைய ETF-இல் வருவாய் பெறுவீர்கள். இந்தப் பலனை உங்களுடைய ETF வெளியிடுநர் உங்களுக்கு மாற்றியிருக்கிறாரா என்பது ஒரு குறிப்பிட்ட ETF-இல் முதலீடு செய்யும் முன்னர் நீங்களே சரிபார்த்துக்கொள்ள வேண்டியுள்ள ஒன்றாகும்.

தங்கம் வர்த்தக அளவு

உங்களுடைய கோல்டு ETF-ஐ தேர்வு செய்யும்போது, நீங்கள் பட்டியலிடப்பட்டுள்ள ETF-களின் வர்த்தக அளவை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். குறைந்த வர்த்தக அளவு கொண்ட ETF-கள், விற்பனையாளரால் குறிப்பிடப்பட்டுள்ள விலை மற்றும் வாங்குபவரால் வழங்கப்பட்ட விலை ஆகியவற்றுக்கு இடையில் உள்ள ஒரு பெரிய இடைவெளியாக இருந்துவிடலாம். வேறு வார்த்தைகளில் சொன்னால், கேட்பு/ஏலம் பரவிவிடும், அதாவது, கேட்கப்பட்ட விலைக்கும், ஏலத்தின் விலைக்குமான இடைவெளி அதிகரித்துவிடும். ஆதலால், உயர் வர்த்தக மதிப்பு கொண்டுள்ள கோல்டு ETF-களை நாடிச் செல்வதே மிகவும் அறிவுப்பூர்வமானதாகும்.

கோல்டு ETF பிழை கண்டுபிடிப்பு

தங்கத்தின் நிகழிட விலை மற்றும் நீங்கள் விரும்புகின்ற ETF-இன் மதிப்பிடலுக்கு இடையிலுள்ள மதிப்பீட்டு விகிதத்தில் உள்ள வேறுபாட்டை ஒப்பிட்டுப் பாருங்கள். இந்த வேறுபாடே பிழை கண்டுபிடித்தல் எனப்படுகிறது. இந்த காலகட்டத்தில் வேறுபாடு குறைவாக இருந்தால் ETF முதலீட்டாளர்கள் அடைகின்ற லாபம் அதிகமாக இருக்கும்.

நிர்வாகத்தின் கீழ் கோல்டு ETF சொத்து

பரஸ்பர மற்றும் பரிமாற்ற-வர்த்தக நிதியுடன், நிர்வாகம் அல்லது இந்த கோல்டு ETF-களைக் கொண்டுள்ள நிதிகளின் கீழ் மொத்த சொத்தும் மதிப்பிடப்படுவது உண்மைதான். ஒரு ஆரோக்கியமான நிதி எப்போது முதலீட்டாளருக்கு ஒரு உத்திரவாதமான காரணியாக இருந்துவருகிறது.

கோல்டு ETF-களுடன் சம்பந்தப்பட்டுள்ள வசதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவை தன்னுடைய சொத்து மதிப்பை பரவலாக்க நினைக்கின்ற அல்லது பாரம்பரிய தங்க முதலீட்டு வழியில் செல்லது துணிகின்ற எந்தவொரு முதலீட்டாளருக்குமான அறிவார்த்தமான தேர்வாக இருக்கிறது. இந்த சோதனைப்புள்ளிகளை பயன்படுத்துவதன் மூலமும், கிடைக்கின்ற தங்க ETF-களின் செயல்திறன்களை ஒப்பிடுவதன் மூலமும் உங்களுக்குப் பொருத்தமானதை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.