Published: 20 ஆக 2018

தங்கம் வாங்கும் போது நீங்கள் ஏன் விலைப்பட்டியலை கண்டிப்பாக பெற வேண்டும்?

Buying gold with an invoice ensures safeguarding your purchase

சில சில்லறை தங்க விற்பனையாளர்கள் விலைப்பட்டியலுக்கு பதிலாக சில சலுகைகளைத் தருவதைப் பற்றியும் அல்லது ஒரு சாதாரண காகிதத்தில் தற்காலிக ரசீதைத் தருவதைப் பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அடுத்த முறை நீங்கள் தங்கம் வாங்கச் செல்லும் போது நீங்கள் இதே போன்ற சூழலை சந்திக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்? நிரந்தர ரசீதைத் தரும் நகைக்கடைக்காரரிடம் மட்டுமே வாங்க வேண்டும் என்று நீங்கள் வலியுறுத்துவீர்களா அல்லது ரசீது இல்லாமல் அல்லது தற்காலிக ரசீதைப் பெற்றுக் கொள்ளச் சம்மதிப்பீர்களா?

தங்கம் வாங்கும் போது நிரந்தர விலைப்பட்டியல் வேண்டும் என்று நீங்கள் வலியுறுத்த பல காரணங்கள் இருக்கின்றன.

ஆனால் அதற்கு முன்பு, தற்காலிக ரசீதுக்கும் நிரந்தர ரசீதுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்:

தற்காலிக ரசீதுக்கு மாறாக நிரந்தர ரசீது


தற்காலிக ரசீது என்பது ஒரு வியாபாரி தன்னுடைய வாடிக்கையாளருக்கு அவருடைய கணக்குப் புத்தகத்தில் பிரதிபலிக்காத ஒரு பொருளை வாங்கும் போது வழங்குவதாகும். இதனால் அவர் வருமான வரி செலுத்துவதை தவிர்க்க முடியும், மேலும் வாடிக்கையாளர் பல்வேறு வரிகளை செலுத்துவதையும் தவிர்க்கிறது (தற்போது ஜிஎஸ்டி). ஒரு தற்காலிக ரசீதானது வெறுமனே நீங்கள் நகை வாங்கிய நகைக் கடையின் பெயர் (நகை எந்த நகைக் கடையிலிருந்து வாங்கப்பட்டதோ) மற்றும் நீங்கள் வாங்கிய நகையின் விவரங்கள் மட்டும் கொண்டிருக்கும். இது பெரும்பாலும் ஒரு வெற்றுத்தாளில் அல்லது மதிப்பீட்டில் உருவாக்கப்படும். இது போன்ற பரிவர்த்தனைகள் கருப்புப் பணத்தை உருவாக்குகிறது.

மற்றபடி, ஒரு நிரந்த ரசீதோ அல்லது விலைப்பட்டியலோ சட்டப்படியான பரிவர்த்தனையை அடிப்படையாகக் கொண்டது. மேலும் பின்வரும் பல விவரங்களை வழங்குகிறது:

  1. வாங்கிய தங்கத்தின் தூய்மை
  2. நகையின் பெயர் மற்றும் குறியீடு
  3. தங்கத்திற்காக நீங்கள் செலுத்தும் மிகச் சரியான அளவு தொகை மற்றும் செய்கூலி மற்றும் சேதாரம் போன்ற கூடுதல் கட்டணங்களை குறைப்பதற்காக.
  4. நகைக்கடைக்காரரின் ஜிஎஸ்டி அடையாள எண்.
இது தொடர்பாக: தங்கம் வாங்குவதை எளிமையாக்குதல்: செய்கூலி மற்றும் சேதாரங்கள் பற்றிய ஒரு பார்வை.
உங்கள் பணப் பரிவர்த்தனையை முறையாக ஆவணப்படுத்தும் நிரந்தர ரசீதைப் பெறுவது ஏன் அவ்வளவு முக்கியமானது?
  1. தூய்மைக்கான சான்று

    நிரந்தர ரசீதானது நீங்கள் தங்கம் வாங்கியதற்கான அதிகாரப்பூர்வமான பதிவாகும். அது தூய்மைக்கான உத்திரவாதத்தை அளிக்கும், மேலும் வரிவிதிப்பு தொடர்பான விசாரணைகளில் உங்களுக்கு உதவும்.

  2. சட்டப்பூர்வமானது என்பதற்கான சான்று

    தங்க நகைகளை முறையான ரசீதைப் பெறாமல் வாங்குவதும் சட்டத்திற்கு புறம்பான வியாபார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாகும். ஒரு விலைப்பட்டியல் குறிப்பிட்ட ஒரு தங்க நகையை குறிப்பிட்ட தூய்மையில் சொல்லப்பட்ட விலையில் உங்களுக்கு விலைப்பட்டியலை வழங்கிய விற்பனையாளரிடமிருந்து வாங்கப்பட்டது என்பதை அறிவிக்கிறது. எனவே, உங்கள் இருவருக்கும் இடையிலான சட்ட ரீதியான பணப் பரிமாற்றங்களை உறுதி செய்கிறது.

  3. கொள்முதலுக்கு சரியான மதிப்பு

    பெரும்பாலான நகைக்கடைகள் அவர்களுடைய திரும்பப் பெற்றுக் கொள்ளும் கொள்கைகளை அல்லது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. உங்களிடம் முறையான விலைப்பட்டியல் இல்லையென்றால் அவர்கள் உங்கள் தங்க நகையை மாற்றவோ அல்லது பரிமாற்றம் செய்துக் கொள்ளவோ விரும்ப மாட்டார்கள். ஒரு முறையான விலைப்பட்டியலில் தங்கம் வாங்கியவர் செலுத்திய செய்கூலிகள், தங்கத்தின் விலை மற்றும் ஜிஎஸ்டி விவரங்கள் அடங்கியிருக்கும். இந்த விவரங்கள் இல்லையென்றால் உங்கள் கொள்முதலுக்கு அதிக விலை செலுத்த வேண்டியிருக்கும்.

    இது தொடர்பாக: நீங்கள் இனி எப்போதும் அணியாத தங்க நகைகள் இருக்கிறதா? நீங்கள் செய்யக்கூடிய 5 விஷயங்களைப் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
  4. சட்ட ரீதியான உரிமைக்கான சான்று

    டிசம்பர் 2016 ஆம் ஆண்டு வருமான வரி அதிகாரிகளால் நடத்தப்பட்ட தேடுதல் மற்றும் பறிமுதலில் கண்டுபிடிக்கப்பட்ட வெளிப்படுத்தப்படாத செல்வத்திற்கு இந்திய அரசாங்கம் அபராதம் விதித்தது. கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட பரம்பரை நகைகளை வைத்திருப்பதற்கு வரைமுறை இல்லை, ஆனால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாத அனுமதிக்கப்பட்ட வரையறையைத் தாண்டி நீங்கள் தங்கம் வைத்திருந்தால் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஒரு விலைப்பட்டியல் என்பது நீங்கள் உங்கள் தங்கத்தின் சட்டரீதியான உரிமையாளர் என்பதற்கான ஆதாரமாகும் மேலும் இதனால் நீங்களும் உங்கள் தங்கமும் பரிசோதனையின் கீழ் வரமாட்டீர்கள். நீங்கள் ஆதாரத்தை சமர்ப்பிப்பதில் தோல்வியடைந்தால் அனுமதிக்கப்படும் வரம்பைத் தாண்டி தங்கம் வைத்திருப்பதற்காக 60% அபராதத்துடன் 25% மிகை வரியும் பொருந்தும்.

    இது தொடர்பாக: உங்கள் தங்கத்தின் சட்டப்பூர்வமான தன்மையை நிரூபிக்க 7 வழிகள் – நீங்கள் நிரூபிக்கவில்லையென்றால் என்ன நடக்கும்

தங்கம் வாங்குபவர் என்கிற முறையில் தங்கம் வாங்கும் ரசீதைத் தரச் சொல்லி வலியுறுத்த வேண்டியது உங்கள் பொறுப்பாகும். இந்த விலைப்பட்டியல் நீங்களும் நீங்கள் மிகவும் போற்றும் தங்க நகையும் எப்பொழுதும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது. எனவே நீ்ங்கள் இந்த மிக விலையுயர்ந்த உலோகத்தை சொந்தமாக வைத்திருப்பதால் பல பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார நன்மைகளை அடையலாம்.

ஆதாரங்கள்:
ஆதாரங்கள் 1, ஆதாரங்கள் 2