Published: 27 அக் 2021

தங்க நகைகளை நீங்களே வாங்குவதற்கான குறிப்புகள்

gold jewellery

ஒரு தங்க நகையைப் போல நேர்த்தியை வேறு எதுவும் காட்டுவதில்லை, அது உங்கள் கழுத்தில் ஒரு நுட்பமான ஆனால் சரியான அணிகலனாக இருக்கலாம், உங்கள் கையை நகர்த்தும்போதெல்லாம் பிரமிப்பைத் தூண்டும் மோதிரமாக இருக்கலாம் அல்லது ஒளிபடும் போதெல்லாம் கண் சிமிட்டும் மூக்குத்தியாக இருக்கலாம். நீங்கள் எப்போதுமே உங்களுக்காக ஒரு பிரம்மாண்டமான தங்க நகையை வாங்க விரும்பியிருக்கலாம், ஆனால் அதைச் செய்ய ஒருபோதும் வாய்ப்பு இல்லாமலிருக்கும், ஏனெனில் வாய்ப்பு கடினமாக இருந்திருக்கலாம். தங்க நகைகளை வாங்குவதற்கு ஓரளவு சிந்தனை தேவைப்படுகிறது, மேலும் ஆராய்ச்சி மற்றும் சுய பகுப்பாய்வின் கலவையானது உங்களுக்கான சரியான தங்க ஆபரணத்தைத் தேர்ந்தெடுக்க உதவும். 

1.    உங்கள் ஸ்டைலை புரிந்து கொள்ளுதல்

உங்கள் தனிப்பட்ட பாணி சுய வெளிப்பாட்டின் ஒரு வடிவமாகும், இது ஒரு டிரெண்டை விட நீண்ட காலம் நீடிக்கும். அதனால்தான் உங்கள் அழகியலுக்கு உண்மையாக இருக்கும் ஒரு தங்க நகையை வாங்க முடிவு செய்வற்கு முன்பு நீங்கள் சுயபரிசோதனை செய்து அதை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அணியும் ஆடைகளின் பெரும்பகுதி என்ன என்பதை அறிய உங்கள் அலுமாரியில் உள்ளவற்றைப் பாருங்கள் - எத்னிக் உடைகள், ஸ்போர்ட்டி ஃபிட்ஸ், அத்லீஷர் அல்லது நீங்கள் ஃபார்மல் உடைகளைப் பெரிதும் சார்ந்திருக்கிறீர்களா? தங்க நகைகளை நீங்கள் தேர்வு செய்யும்போது அது உங்கள் உடைக்கு பொருத்தமாக இருக்க வேண்டும். 

2.    நீங்கள் ஏன் ஒரு தங்க நகையை வாங்க விரும்புகிறீர்கள்?

gold jewel

ஒவ்வொரு நிகழ்வுக்கும் தனித்தனியே தங்க நகைகள் இருப்பதால், நீங்கள் எதற்காக நகைகளை வாங்குகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு மிக எளிய கேள்வி- இது தினசரி உடைகளுக்குத் தேவையான ஒன்றா அல்லது அது ஒரு சங்கீத் அல்லது ஹால்டி விழாவின் நட்சத்திரமாக இருந்து அனைவரையும் திகைக்க வைக்கும் ஒரு அணிகலனா? 

உதாரணமாக உங்கள் சட்டைக் காலருக்கு மிகப் பொருத்தமாக இருக்கும் மென்மையான மேற்பரப்புடன் கூடிய தங்க பதக்க செட் கொண்டு உங்கள் சகாக்களை வியக்க வைக்கலாம் அல்லது அதிகம் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் இருக்கும் நவீன ஜியோமெட்ரிக் காதணிகளை அணியலாம்! 

அங்குல நீள தொங்கட்டான்கள், எளிய தங்கச் சங்கிலிகள் மற்றும் மெலிதான வளையல்கள், குறிப்பாக கோடைக்கால ஆடைகளுடன் நன்றாக பொருந்தும் நகைகளாகும் ஒரு நண்பரின் திருமணத்திற்கு அணிய தங்க நகைகளை வாங்க திட்டமிட்டால், பாரம்பரிய வடிவமைப்புகளுக்கு எதிராக ஓரளவே அலங்காரம் உடைய நகைகளைக் கருத்திற் கொள்ளுங்கள்.

3.   உங்கள் பட்ஜெட்டை அமையுங்கள் 

தங்க ஆபரணங்கள் பரந்த விலை வரம்பைக் கொண்டுள்ளன மற்றும் அனைவரின் பட்ஜெட்டிற்கும் பொருந்தக்கூடிய அழகான தங்க நகைகள் உள்ளன. தங்கத்தின் விலை தினசரி ஏற்ற இறக்கமாக இருப்பதால், கட்டணத்தை செலுத்துவதற்கு முன் இந்த விலைகளைச் சரிபார்க்க வேண்டும். 

தங்க நகைகளின் விலையை பாதிக்கும் காரணிகள், முக்கியமாக ஒரு கிராமிற்கான விலை, கைவினைஞர் அல்லது செய்கூலி மற்றும் வடிவமைப்பு எவ்வளவு சிக்கலானது என்பதை நீங்களே அறிந்து கொள்வது அவசியம். இந்தச் சூழலில், தங்க நகைத் திட்டம் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்துகொள்வது உங்களுக்கு உதவியாக இருக்கும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம் மற்றும் காலம் முடிந்தவுடன், சரியான தங்க நகைகளை வாங்க பணத்தை எடுக்கலாம். தாமதமான மனநிறைவு விரும்பிய தங்க நகையை வைத்திருக்கும் மகிழ்ச்சியை உங்களுக்கு சேர்க்கும்.

4.    உங்கள் தங்க நகை ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட தங்கத்தால் ஆனது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

ஹால்மார்க் முத்திரை பெற்ற தங்க நகைகள் இந்திய தரநிலை நிறுவனத்தின் தரநிலையை கொண்டிருக்கும். அதனால் தான் 14, 18 மற்றும் 22 காரட் தங்க நகைகள், நுணுக்கம் அல்லது தூய்மை சான்றிதழ் தரும் BIS மார்க், மற்றும் நகை எண்/பிராண்டின் அடையாள எண் அல்லது முத்திரையுடன் வர வேண்டும்.

5.    உத்தரவாதம் மற்றும் திரும்ப வாங்கும் விதிமுறைகள்

நீங்கள் தங்க நகைகளை வாங்கும்போது உங்கள் நகைக்கடைக்காரர் உங்களுக்கு உத்தரவாத ஆவணங்களை வழங்குவதை உறுதி செய்யவும். கைவினைத்திறனில் உள்ள ஏதேனும் குறைபாடுகளை உத்தரவாதம் உள்ளடக்கியதாகும். மேலும், உங்கள் தங்க நகையை விற்க விரும்பும் சந்தர்ப்பம் ஏற்படும்போது, உங்கள் தங்க நகைகளை திரும்ப வாங்கும் விதிமுறைகளைப் பற்றி விசாரிக்கவும்.

தங்க நகைகள் உங்கள் இயற்கை அழகை மேம்படுத்துவது மட்டுமல்ல; அது ஒரு முதலீடும் ஆகும் அதனால்தான் உங்கள் விருப்பத்தை தூண்டும் ஒரு தங்க நகையை வாங்குவதற்கு முன் நீங்கள் ஆராய வேண்டும். எனவே, ஒரு சிறப்பு கொள்முதலுக்கு உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்.