Published: 27 அக் 2021

தங்க நகைகள்: நீடித்திருக்கும் ஃபேஷன் தேர்வு

woman wearing gold jewellery

நீடித்து நிலைக்கும் தன்மை மற்றும் பசுமை தேர்வுகளின் முக்கியத்துவம் இன்றைக்குப் போல் என்றும் சொல்லப்படவில்லை. குறிப்பாக இது ஃபேஷன் மற்றும் சில்லறை வணிகத்தில் உண்மை, இங்கு வாடிக்கையாளர்கள் நீடித்து நிலைக்கும் பொருட்கள் அல்லது மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை நோக்கி மாறுகிறார்கள். பொறுப்பான சில்லறை வணிகம் மற்றும் கவனமாக வாங்கும் உணர்வு போன்ற அனைத்து உரையாடல்களுக்கும் இடையில், நீங்காது நிலைத்து நிற்கும் ஒரு ஃபேஷன் தேர்வு தங்க நகைகள். 

தங்க நகைகள்: அழகான மற்றும் நீடித்து நிலைக்ககூடியது

அதிர்ஷ்டவசமாக, நீடித்துநிலைக்கும் பொருளை வாங்கும் தன்மை கொண்ட இன்றைய நுகர்வோருக்கு, தங்க நகை என்பது குற்ற உணர்வற்ற ஃபேஷன் தேர்வாகும், வாங்கப்பட்ட பொருள் எப்போதும் நீடித்து நிலைக்கக்கூடியது. நீங்கள் ஒரு ஸ்டைலான தங்க காதணி அல்லது ஒரு வளையலில் முதலீடு செய்யும் போது, அது வாழ்க்கை முழுவதற்குமானது தங்கம் எளிதில் மங்கிப்போகாது அல்லது தேய்ந்து போகாது. குறைந்த வினைத்திறன் கொண்ட தனிமங்களில் ஒன்றான தங்கம், அரிப்பதில்லை அல்லது துருப்பிடிப்பதில்லை அல்லது காலப்போக்கில் அதன் அழகை இழப்பதில்லை. உண்மையில், காலம் கடந்து இருக்கும் தங்கத்தில் முதலீடு செய்வது உங்கள் சொந்த பாரம்பரியத்தை உருவாக்குவது போன்றது. பெரும்பாலான ஃபேஷன் பொருட்களின் தேர்வுகள் போலல்லாமல், இதன் மதிப்பு காலப்போக்கில் கணிசமாக அதிகரிக்கிறது, பெரும்பாலும் அது ஒரு பாரம்பரிய சொத்தாக மாறும்.

மீண்டும் பயன்படுத்தக்கூடியது, மாற்றக்கூடியது, புதுப்பிக்கக்கூடியது 

gold jewellery

தங்க நகைகளால், மிகச்சிறிதளவே வீணாகிறது. சில்லறை நகை விற்பனையாளர்கள் பழைய நகைகள், உதிரி நகைகள் மற்றும் பயனற்று கிடக்கும் தங்கத்தை பெற்றுக்கொண்டு புதிய நகைகளுக்கு மாற்றிக்கொள்கிறார்கள். மாற்றாக, புதிய மற்றும் சமகால வடிவமைப்பைப் பெற உங்கள் பழைய நகைகளை நீங்கள் உருக்கி மாற்றியமைக்கலாம். பழைய நினைவுகள் அல்லது உணர்வுபூர்வ மதிப்பு கொண்டவைகளுக்கு இது சிறந்த வழியாகும் உதாரணமாக, உங்கள் விருப்பத்திற்கு மாறாக உள்ள மிகப் பெரிய அல்லது பளபளப்பான ஒரு பழைய மூதாதையர் மோதிரத்தை மறுவடிவமைப்பு செய்யலாம், மேலும் வழிவழியாக வரப்பட்ட ஒரு குடும்ப உறுப்பினரின் உடைந்த காதணிகள் கூட சரி செய்யப்படலாம். தங்க நகைகளின் அழகு என்னவென்றால், அதை முடிவில்லாமல் மறு பயன்பாடு செய்யலாம் மற்றும் அதன் மதிப்பைக் குறைக்காமல் பல தலைமுறைகளுக்கு பயன்பெறலாம்

சமகாலத்தியது, செம்மையானது மற்றும் என்றும் மாறாதது

Woman wearing gold jewellery

Jewellery credits: Curated by the Brand Poonam Soni

தங்கத்தில் உள்ள சமகால வடிவமைப்புகள், தங்க நகைகள் சிறப்பு சந்தர்ப்பங்கள் அல்லது திருமணங்களுக்கு மட்டுமே என்ற நீண்டகால கட்டுக்கதையை நீக்கி விட்டன. ராசிக்கல் பதக்க செட்கள், தங்கத்தில் பதிக்கப்பட்ட இலகுவான முத்து காதணிகள், மென்மையான பிரேஸ்லெட்கள் மற்றும் கண்கவரும் வளையல்கள் ஆகியவை நவீன நகைகளின் வடிவமைப்பால் எவ்வளவு சிறியதானாலும் உன்னதமான தோற்றத்தை பெறுகிறது என்பதை நிரூபிக்கிறது. மேட், சாட்டின், ஹேம்மர்டு, சாண்ட் பிளேஸ்டட், ரோஸ் கோல்ட் போன்ற தங்க நகைகளில் உள்ள பல்வேறு வகையான தோற்றங்கள் வாங்குபவர்களுக்கு எண்ணற்ற விருப்பங்களை அளிக்கின்றன.

நகை வடிவமைப்பில் புதுமை

Woman wearing gold jewellery

Jewellery credits: Curated by the Brand Poonam Soni

பிரிக்கக்கூடிய அல்லது மாற்றியமைக்கூடிய நகைகளின் வடிவமைப்பு என்பது ஆபரணங்களை வடிவமைப்பதற்கான ஒரு புதுமையான அணுகுமுறையாகும், இதன் மூலம் நீங்கள் ஒரே நகையை பல வழிகளில் அணிய முடியும். கழுத்துக்கான அணிகலன்கள், லாக்கெட் மற்றும் காதணிகளில் உள்ள பிரிக்கக்கூடிய நகை அமைப்புகளில் உள்ள கற்கள் அல்லது வடிவங்களை மாற்றுவதால் ஏற்படும் நுட்பமான மாற்றத்தினால் அவற்றை அணியும்போதெல்லாம் புதிய தோற்றத்தைக் கொடுகிறது. உதாரணமாக, நெக்லஸ்களை கழுத்துப்பட்டியாக மாற்றியமைக்கலாம், மற்றும் கையில் அணியும் மலர் போன்ற நகைகளை மோதிரங்கள் மற்றும் பிரேஸ்லெட்டுகளாக அணிய முடியும்

வேகமாக மாறி வரும் ஃபேஷனுக்கான மாற்று

Woman wearing gold jewellery

Jewellery credits: Curated by the Brand Poonam Soni

குறிப்பிட்ட ஃபேஷனுக்கான காலம் முடிந்தவுடன் அந்த ஃபேஷனுக்கு ஏற்ற அழகு பொருட்கள் அல்லது ஆடை ஆபரணங்களுக்கு என்ன நடக்கும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நிராகரிக்கப்பட்ட ஃபேஷன் நகைகள் வெகு காலத்திற்கு முன்பே களைந்து போய் வீணான சேகரிப்பில் முடிவடையும். மாறாக, அதன் உலகளாவிய மற்றும் காலம் கடந்த கவர்ச்சியால், தங்க நகைகள் நீடித்த, நம்பகமான, இருப்பினும் நாகரீகமான மாற்றீட்டை வழங்குகிறது. தங்கம் விலை அதிகம் என்றாலும், நீங்கள் தங்க நகைகளை வாங்க மட்டும் செய்வதில்லை; உங்கள் வாழ்நாள் முழுவதும் அதில் முதலீடு செய்கிறீர்கள். தங்கம் பல தோற்றங்களுடன் ஜோடி சேர்வதற்கான திறமையைக் கொண்டுள்ளது, எனவே நீங்கள் ஒரு நகையை மீண்டும் அணிவது பற்றி கவலைப்படத் தேவையில்லை.

பாரம்பரிய கைவினைத்திறன் கொண்ட கைவினைப்பொருள் 

traditional jewellery craftmanship

Jewellery Credits: Govind MS Jewellers & Manufacturers, Jaipur
Contact No. 097999 98981

பாரம்பரிய நகைகள் சிரமத்துடன் கையால் செய்யப்பட்டவை மற்றும் ஃபிலிக்ரீ, ரவா, நகாஷி, குந்தன், மீனாகரி, தேவா போன்ற பழமையான கைவினை நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. மணப்பெண் நகை ஷாப்பிங்கில் இந்த மரபுகளின் ஒரு கூறுகளை உள்ளடக்குவது கிட்டத்தட்ட வழக்கமாக இருக்கிறது உள்ளூர் கைவினைஞர்கள் அல்லது ’கரிகாரி’ போன்றோரைரிடம் ஒரு மூக்குத்தியாக இருந்தாலும் அல்லது ஒரு ஒட்டியாணமாக இருந்தாலும் இவர்கள் செய்வதால் அவர்களை ஆதரிக்கும் வகையில் உள்ளது . பல நூற்றாண்டுகள் பழமையான கைவினைப்பொருட்களுக்கு நவீன, நகர்ப்புற மாற்றத்தை அளித்த எண்ணற்ற நகை வடிவமைப்பாளர்களுக்கு நன்றி, இதனால்தான் சிறந்த கைவினைத்திறன் மற்றும் இந்த அரிய தங்க கலை வடிவங்கள் இன்னும் உயிருடன் உள்ளன. 

காலத்தால் அழியாத பல்வகை பயன்பாடு 

Woman wearing gold jewellery

Jewellery credits: Curated by the Brand Poonam Soni

ஒரு தங்க நகை என்பது ஒரு அணிகலனை விட சற்று மிகையானது டிரெண்டுகள் வந்து போகலாம், ஆனால் தங்கம், ஆடம்பரம், உணர்வுகள், மரபு மற்றும் பாரம்பரியத்தை அதன் பல வடிவங்களில் குறிக்கிறது. ஒரு ஆடம்பரமான வழிவழியாக வரக்கூடிய பொருளில் முதலீடு செய்யுங்கள் அல்லது ஒரு சங்கிலி மற்றும் காதணிகளுடன் குறைந்தபட்சமாக செல்லுங்கள்; தங்கம் ஒரு நீடித்து நிலைகக்கூடிய அல்லது குலைவற்ற பொருள், உங்கள் அழகிய மற்றும் நீடித்து நிலைக்கும் அலமாரிக்கு ஏற்ற நகைத் தேர்வுகளில் ஒன்றாகும்.