Published: 08 நவ 2017

தங்கத்தை அணிவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் செல்வத்தை ஈர்க்க தங்கத்தை அணியும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

தங்கம் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்

  1. இயற்கையான ரத்தினக் கற்களின் ஆன்மீக சக்தி அனைவரும் அறிந்ததே. பல்வேறு சாதிகள் மற்றும் கலாச்சாரங்களை சார்ந்த பலர், மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், அன்பு மற்றும் ஆன்மீக அமைதிக்காக தங்கம் அல்லது பிற ரத்தினக் கற்களை தினமும் அணிகின்றனர்.
  2. தீய சக்திகள் உடலுக்குள் நுழைவதைத் தடுப்பது, உடலுக்குள் ஆன்மீக உணர்வை செலுத்துதல், ஆன்மீக வழியில் குணப்படுத்துதல் மற்றும் எதிர்மறை ஆற்றலிலிருந்து பாதுகாப்பு உள்ளிட்டவை தங்க நகைகள் அணிவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகளாகும்.
  3. பல ஆண்டுகளாக, தங்கம் ஒரு ஆபரணமாகவும், பணமாகவும் மற்றும் சமூக அந்தஸ்தின் அடையாளமாகவும் மனிதனுடன் வந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்தஸ்தின் அடையாளம் என்பதற்கும் மேலாக தங்கத்திற்கு, அதை அணிபவர்களுக்கு மகிழ்ச்சி, அமைதி மற்றும் நிலைப்புத்தன்மையை கொண்டு வரும் ஆன்மீக ஆற்றல் இருக்கிறதென்பது உங்களுக்குத் தெரியுமா?
  4. பண்டைய சீனா, பெர்சியா மற்றும் இந்தியாவில் ஏற்கனவே தங்கத்தின் புனித சக்தி நிரூபணமாகியுள்ளது. தங்கமானது, கிரீடம் சக்கரத்தைத் திறந்து அதை அணிந்திருப்பவருக்கு உதவுவதாக அறியப்படுகிறது. தங்கத்திற்கு பாதுகாக்கும் பண்புகள் நிறைந்ருப்பதால் உங்கள் உடலிலிருந்து தீய சக்திகளை நீக்குகிறது.
  5. செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் அத்துடன் நம்பிக்கையை வலுப்படுத்துவதாகவும் தங்கம் தொடக்க காலத்திலிருந்தே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
  6. உங்கள் மோதிர விரலில் தங்க மோதிரத்தை அணிவதால், தெய்வீக ஆற்றலை ஈர்க்கலாம். தெய்வீக ஆற்றல் செயல்படுத்தப்பட்டு அந்த மோதிரத்தின் வழியாக வெளியேறுகிறது. எனவே, தீய சக்திகளால் வரும் தடைகளை நீக்குகிறது.
  7. தெய்வீக நன்மைகளை பெற, பெண்கள் இடது கையில் மோதிரத்தை அணிய வேண்டும், ஆண்கள் வலது கையில் மோதிரத்தை அணிய வேண்டும்.
  8. பூமியில் கிடைக்கும் உலோகங்களிலேயே மிகவும் விலையுயர்ந்த முக்கியமான உலோகம் தங்கம் ஆகும். ஜோதிடவியலில் தங்கம் ஒவ்வொரு கிரகத்துடனும் தொடர்பு பெற்றுள்ளது, ஆனால் மிக முக்கியமாக, குரு பகவானோடு அதற்கு அதிக தொடர்பு உள்ளது.
  9. தங்கம் பொதுவாக அனைவருக்கும் பொருந்தக்கூடியது. ஆனால், உங்களுக்குப் பொருந்தாமல் போனால் நீங்கள் துரதிருஷ்டங்களை எதிர்க்கொள்ள நேரிடும். தங்கத்தை சரியாக அணிந்தால், தங்கமானது மிகுதியான செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் ஈர்க்கும்.

தங்கம் அணியும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

  1. தங்கத்திற்கு ஆற்றலையும் வெப்பத்தையும் ஈர்க்கும் சக்தி உண்டு. இதனால் தங்கத்திற்கு விஷத்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. தங்கத்தை அணிய பல்வேறு விதிமுறைகளைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை பார்ப்போம். இந்த தந்திரங்களையும் குறிப்புகளையும் பின்பற்றுவதால் நீங்கள் விரைவில் பணக்காரராகலாம்
  2. உங்களுக்கு சளி – இருமல் தொந்தரவுகள் இருந்தால், தங்க மோதிரத்தை உங்கள் சுண்டு விரலில் அணியலாம். நீங்கள் பெயர், புகழ், அந்தஸ்து தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொண்டால், நீங்கள் தங்கத்தை நடுவிரலில. அணிய வேண்டும்.
  3. உங்களால் எந்த விஷயங்களிலும் சரியாக கவனம் செலுத்த முடியாமல், எளிதாக கவனச்சிதறல் ஏற்பட்டால், நீங்கள் தங்க மோதிரத்தை சுட்டு விரலில் அணியலாம். அப்படி செய்வதால், நீங்கள் மன அமைதியை பெறலாம்.
  4. திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளா? உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கும் இடையே நெருக்கம் குறைவாக இருக்கிறதா? ஆமாம் என்றால், தங்கச் சங்கிலி அல்லது பதக்க வடிவத்தில் உங்கள் கழுத்தில் அணியுங்கள். இது உங்கள் வாழ்க்கையில் ஆச்சரியங்களை நிகழ்த்தும்.
  5. கருவுறுதலில் பிரச்சனை உள்ள பெண்கள் தங்க மோதிரத்தை மோதிர விரலில் அணியலாம்.
  6. வயிறு தொடர்பான பிரச்சனைகள் அல்லது உடற்பருமன் கொணடவர்கள் தங்கம் அணிவதை தவிர்க்கவும். கோபம் அதிகம் வரும் நபர்கள் தங்கம் அணிவதை தவிர்க்கவும். உங்கள் ஜாதகத்தில் குரு உச்சம் பெற்றிருந்தால் தங்கம் அணிய வேண்டாம்.
  7. இரும்பு, நிலக்கரி போன்ற தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், சனியின் தாக்கம் அதிகம் இருப்பவர்கள் தங்கத்தை தவிர்க்க வேண்டும். கர்ப்பாக இருக்கும் பெண்களும் வயது முதிய பெண்களும் தங்கம் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
  8. பணத்தை அல்லது தங்கத்தை கனவில் காண்பது நல்லதல்ல. அது தோல் மற்றும் முகத்தில் வியாதிகள் வரப்போவதற்கான அறிகுறிகளாகும். நீங்கள் தங்கத்தை கனவில் பார்த்தால், நிறைய போராட்டத்திற்கு பிறகு உங்களுக்கு பணம் வரும் என்பதை குறிக்கிறது. நீங்கள் பழமையான தங்க நாணயங்களை கனவில் கண்டால், உங்கள் தொழில் மற்றும் வேலையில் சில கடினமான சூழல்களை எதிர்கொள்ள வேணடியிருக்கும்.
  9. தங்கத்தை இடுப்புக்குக் கீழே அணியக்கூடாது. இதனால் உங்களுக்கு துரதிருஷ்டம் வரக்கூடும், அப்படி செய்வதால் செல்வத்தை இழக்க நேரிடும். தங்கம் லக்ஷ்மி தேவியின் அடையாளமாக கருதப்படுவதால், எனவே தங்கத்தை இடுப்புக்கு கீழே அணிவது அவருக்கு அவமரியாதை செய்வதற்கு ஒத்தது
  10. தேவைப்பட்டால் தங்கத்தை இடது கையில் அணியலாம். உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எப்பொழுதும் தங்கத்தை பரிசாக அளியுங்கள். தங்கத்தை கொலுசாக அணிவதை தவிர்த்து விடுங்கள். தங்கத்தை இடுப்புக்குக் கீழே அணிய வேண்டாம். குழந்தைகளுக்கு சிகப்பு கயிற்றில் தங்கத்தை கோர்த்து அணியலாம்.
  11. தங்கம் அணியும் போது அசைவம் சாப்பிடக்கூடாது மற்றும் மதுபானங்கள் குடிக்கக்கூடாது என்று நம்பப்படுகிறது. அப்படி செய்பவருக்கு கெட்ட நேரத்தை கொண்டு வரும்.
  12. பொதுவாக மக்கள் தங்கத்தை லாக்கர்களில் பாதுகாத்து வைக்கின்றனர். அப்படி வைக்கும் போது உங்கள் தங்கத்தை சிகப்பு காகிதம் அல்லது துணியில் சுற்றி வையுங்கள். தங்கத்தை கிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் வைக்கவும்.
  13. தங்கத்தை உங்கள் தலைக்கு அருகில் வைக்க கூடாது. இதனால் நீங்கள் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை எதிர்க்கொள்ளலாம். இரும்பு அல்லது உலோக கலவை கொண்ட நகைகளை தங்கத்துடன் சேர்த்து அணிய வேண்டாம்.
  14. மேஷம், கடகம், சிம்மம் மற்றும் தனுசு ஆகிய ராசிகளுக்கு தங்கம் மிகவும் அதிர்ஷ்டகரமானது. விருச்சிகம் மற்றும் மீனத்திற்கு தங்கம் கலவையான பலன்களை கொடுக்கும். ரிஷபம், மிதுனம், கன்னி மற்றும் கும்பம் ஆகிய ராசிகளுக்கு தங்கம் பிரச்சனைகளை உருவாக்கக் கூடும். துலாம் மற்றும் மகர ராசிக்காரர்கள் தங்கம் அணிவதைத் தவிர்த்து விடவும்.

அக்ஷய திரிதியைஅன்று தங்கம் வாங்குவதன் முக்கியத்துவத்தைப் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஆதாரம்: ஸ்பீக்கிங் ட்ரீ