Published: 01 நவ 2019

இன்று தங்கம் ஒரு முதலீடு என்பது ஏன் அர்த்தமுள்ளதாகிறது எனப் பேசுகிறார் பொருளாதார நிபுணர் விவேக் கவுல்

Vivek Kaul

Economist & Author

“நீங்கள் தங்கம் வாங்கத்தான் வேண்டுமா?”

தாந்திராவுக்கும் தீபாவளிக்கும் சில நாட்கள்தான் இருக்கின்றன எனும் நிலையில்கூட, இந்திய ஊடகத்தில் மேலே குறிப்பிட்ட தலைப்புடன் கதைகள் தோன்றத் தொடங்கும் நேரம் இதுதான்.

ஆனாலும் இந்தக் கதைகள் தங்கத்தை மதம் மற்றும் பண்டிகைக் கால கண்ணோட்டத்தில் இருந்தே பார்க்கின்றன. முதலீடு செய்வதன் மிக அடிப்படையான விதிமுறைகளுள் ஒன்று சொத்து ஒதுக்கீடாகும். ஒரு முதலீட்டாளருக்கு ஏற்புடையதாக உள்ள அபாய அளவைப் பொறுத்து, அவர் உரிய முறையில் சொத்து வகைகளின் மீது முதலீடுகளை பரவலாக செய்ய வேண்டியிருக்கிறது.

இதற்கான காரணம் மிகவும் எளிதானது. நாம் ஒரு சுலபமான பணம் என்கிற யுகத்தில் வாழ்கிறோம். 2008-ஆம் ஆண்டின் நிதி நெருக்கடிக்குப் பின்னர், அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வால் வழிநடத்தப்படுகின்ற, மேற்கத்திய உலகின் மத்திய வங்கிகள் பணப் புழக்கத்தை சுலபமாக்கின.

நிதித்துறை அமைப்புகளுக்கு பண ஓட்டத்தை அளிப்பதும், வட்டி விகிதங்களைக் குறைக்கச் செய்வதும், மக்கள் பணத்தைப் பெறுவது மற்றும் செலவிடுவதை ஊக்கப்படுத்துவதும், கார்ப்பரேட்டுகள் பணம் பெறுவது மற்றும் விரிவடைவதை ஊக்கப்படுத்துவதுமே இதன் கருத்தாக்கம். இது தொழில்களுக்கு உதவி செய்து பொருளாதார வளர்ச்சியை திரும்பக் கொண்டு வருவதற்காக செய்யப்பட்டதாகும்.

மேற்குலக மக்கள் முன்னதாகவே பணம் பெறும் கொண்டாட்டத்தில் ஒரு சுற்று சென்று வந்துவிட்டனர்

அதனால், அவர்களுக்கு மேலும் அதிகமாகப் பெறுவதற்கு உண்மையிலேயே ஆர்வம் காட்டவில்லை, குறைந்தபட்சம் இந்தப் பொருளாதார நெருக்கடி தாக்குதலுக்கு அடுத்து உடனடியாக அப்படிச் செய்வதற்கு ஆர்வம் காட்டவில்லை. மற்றொருபுறம் நிறுவனங்கள், இந்த சுலபப் பண யுகத்தை பணம் பெறுவதற்கு பயன்படுத்திக் கொண்டன, அத்துடன் பங்குகளை திரும்ப வாங்குவதில் செலவிட்டன.

அவர்கள் பங்குகளைத் திரும்ப வாங்கி அவற்றை ரத்து செய்யவிருந்த சமயத்தில் நிறுவனங்களின் ஒரு பங்கு ஆதாயங்கள் அதிகரித்து பங்குகளின் விலைகள் உயர்ந்தன.

இதுபோக, பெரிய நிறுவன முதலீட்டாளர்கள் குறைந்த வட்டி விகிதத்திற்கு பணம் பெற்று, அதனை உலகம் முழுவதிலும் உள்ள நிதிச் சந்தைகளில் முதலீடு செய்தனர். நிறைய பங்குச் சந்தைகள், நிறுவன வருவாய்கள் ஏதும் இல்லாதபோதிலும்கூட, இந்தப் பணத்தின் காரணமாகவே தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தன.

இங்கிலாந்து வங்கி, ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் ஜப்பான் வங்கி ஆகியவையும் பல வருடங்களாகவே, வட்டி விகிதங்களைக் குறைப்பது, நுகர்வு, முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்தும் நம்பிக்கையில் பணத்தை அச்சடித்து அவற்றை நிதிசார் அமைப்புகளுக்குள் செலுத்திக் கொண்டிருந்தன.

இந்த வகையான பணப்புழக்கம் மேற்கத்திய உலகில் பொருளாதார வளர்ச்சியை உயர்த்திட உதவத்தான் செய்தன. 2016 பிற்பகுதியில், தான் அச்சடித்த எல்லாப் பணத்தையும் வெளியே எடுக்கத் தொடங்கிய ஃபெடரல் ரிசர்வ் அதனை நிதிசார் அமைப்புகளுக்குள் கொண்டு செலுத்தியது.

ஆனால், மெதுவான பொருளாதார வளர்ச்சி குறித்த கவலைகளாலும், மிகவும் மூர்க்கமான அமெரிக்க அதிபராகிய டொனால்டு டிரம்பினாலும், அச்சடித்த பணத்தை வெளியே எடுப்பது என்ற தன்னுடைய கொள்கையை ஃபெடரல் ரிசர்வ் நிறுத்தி வைக்க காரணமாகிவிட்டது.

உண்மையில், ஃபெடரல் ரிசர்வ் இப்போது ஒவ்வொரு மாதமும் 60 பில்லியன் அமெரிக்க டாலர்களை அச்சடிக்கவும், அவற்றை நிதிசார் அமைப்புகளுக்குள் கொண்டு செலுத்தவும் திட்டமிட்டிருக்கிறது. உலகளாவிய மத்திய வங்கிகளுக்கான நிகழ்ச்சிநிரலை ஃபெயரல் ரிசர்வ் அமைத்திருக்கிறது, அத்துடன் பிற மத்திய வங்கிகள் வரவிருக்கும் காலங்களில் பணத்தை அச்சடிக்கப்போவதையும், உலகளாவிய அளவில் சுலபமான பணம் என்ற மற்றொரு யுகத்தை திறந்துவிடப் போவதையும் கண்டு ஆச்சரியப்பட வேண்டியிருக்காது.

சுலபமான பணம் என்பதற்கான எதிர்-கருத்தியல்தான் தங்கம் என்பது இங்கே நினைவுகூரத்தக்கதாகும். ஆதலால், இந்த வருடத்தின்போது டாலர் வகையில் தங்கமானது ஏற்கனவே 16%-க்கும் மேல் (செப்டம்பர் 30 வரையில்) என்கிற அளவுக்கு ஊக்கம் பெற்றுவிட்டது. ரூபாய் வகையில், டாலருக்கு நிகரான அதன் மதிப்பு குறைந்து வருவதால் 19% வருவாய் (இண்டியன் புல்லியன் அண்டு ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் கூற்றுப்படி) என்கிற அளவுக்கு நெருங்கி வந்திருக்கிறது. இது நமக்கு என்ன சொல்ல வருகிறது என்றால், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்தே, ஃபெடரல் ரிசர்வ் மறுபடியும் பணத்தை அச்சடிக்கப் போகிறது என்பதை வைத்து முதலீட்டாளர்கள் ஏற்கனவே நடவடிக்கையில் இறங்கிவிட்டார்கள் என்பதைத்தான்.

சுலபமான பணம் கொள்கையுடன், நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய மற்றொரு சர்வதேச பேரியல் பொருளாதாரக் காரணி என்றால், அது தற்போது சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் நடைபெற்று வருகின்ற சர்வதேச வர்த்தகப் போர்தான். இந்த நிலையில் விஷயங்கள் குழப்பமானால், தங்கத்தின் விலைகள் மேற்கொண்டு உயரவே செய்யும்.

2018-இல் சீனாவின் இறக்கு மதிப்பு 1.7 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இந்த வர்த்தகத்தில் பெரும்பாலானவை டாலர்களிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. வரப்போகும் ஆண்டுகளில், சீன இறக்குமதிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து வரிவிதிப்பை அதிகப்படுத்திக்கொண்டே சென்றால், சீனா தன்னுடைய வர்த்தக கூட்டாளிகளை பண்டமாற்று முறைகளை மேற்கொள்ள வலியுறுத்தலாம்.

இது எப்படி இருக்குமென்றால், இந்தியா எண்ணெய் வாங்க ஈரானுக்கு ரூபாயில் பணம் கொடுக்கும், ஈரான் அந்த ரூபாயை பயன்படுத்தி இந்தியாவில் இருந்து பொருட்களை வாங்கும். இதேபோன்றுதான், சீனா பிரேசிலுக்கு யுவான் கொடுக்கும், பிரேசிலும் பிறகு அந்த யுவானை சீனாவில் இருந்து பொருட்களை வாங்கப் பயன்படுத்தும்.

சீனாவை தற்போதுள்ள நிலையிலேயே வைத்து டிரம்ப் அதனைப் பார்ப்பாரேயானால், சீனாவிற்கும் தன்னுடைய வர்த்தகத்தை டாலரில் இருந்து அப்பால் கொண்டு சென்றுவிடுவதற்கான நல்ல காரணம் கிடைத்துவிடும்.

அமெரிக்காவுக்கு டாலர்தான் மட்டுமீறிய சலுகையை வழங்கிக் கொண்டிருக்கிறது; அதேநேரம் உலகிலுள்ள மற்ற அனைத்து நாடுகளும் இதை சம்பாதிக்க வேண்டிய தேவை இருக்கும்போது, அமெரிக்கா அதை அப்படியே அச்சடித்துவிடுகிறது. கேள்வி என்னவென்றால், டிரம்ப் இந்த மட்டுமீறிய சலுகையை இந்நிலையில் வைத்துப் பார்க்கப்போகிறாரா என்பதுதான்? இதுபற்றிய மிகப்பெரிய பயம் முதலீட்டாளர்கிடையே நிலவி வருகிறது. அவர் அப்படிச் செய்வாரேயானால், நீண்டகால நோக்கில் தங்கத்தின் விலை மேற்கொண்டு உயரவே செய்யும்.

இந்திய வகையில் எடுத்துக்கொண்டால், பொருளாதாரம் பலவீனமான நிலையில் இருக்கிறது, அதனால் பங்குச் சந்தையின் பலவீனமான செயல்பாட்டிற்கு எதிராக தங்கமே ஒரு பெரும் காப்புநிதியாக ஆகிவிடுகிறது. மேலும், இந்தியாவில் வர்த்தக ஏற்றுமதிகளின் வளர்ச்சி, குறிப்பாக, வளர்ச்சியை உருவாக்கும் தொழிலாளர்-திறனுள்ள முதலீடுகள் குலைந்து போயிருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகராக இருந்துவரும் ரூபாயின் வலுவான மதிப்பு இதற்கு ஒரு காரணமாகும். இந்தக் காரணியை மனதில் கொண்டு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் தன்னுடைய மதிப்பை இழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அருகாமைக்-காலத்தில், பலவீனமான ரூபாயானது தங்கத்தின் வருவாயை ரூபாய் வகையில் அதிகரிக்கச் செய்யும்.

இந்த விஷயங்களை மனதில் கொண்டு, ஒவ்வொரு முதலீட்டாளரும் தங்களுடைய முதலீட்டு மதிப்பில் 10-15%-ஐ தங்கத்தில் முதலீடு செய்வதே அர்த்தமுள்ளதாக இருக்கும். ஆம், மற்ற எந்த முதலீடுகளையும் போலவே, ஒருவர் தங்கத்தில் மட்டுமே எல்லாப் பணத்தையும் முதலீடு செய்யக் கூடாது, அதனுடைய ஒரு பகுதியைத்தான் முதலீடு செய்ய வேண்டும் என்பது முக்கியம். இதனால், நெருக்கடியான நேரங்களில்கூட, ஒட்டுமொத்த முதலீடு மதிப்பின் வருவாய் சமமாகவே இருந்து கொண்டிருக்கும்.

விவேக் கவுன் Easy Money மூவரிசையின் ஆசிரியர்.