Published: 17 ஆக 2018

திருச்சூர் – இந்தியாவின் தங்க வர்த்தகத் தலைநகரம்

Know the Story Behind Why Thrissur is called the - Gold Capital of India

இந்தியாவில் விற்பனையாகும் 30% சதவீதத் தங்க நகைகள் திருச்சூரில் உற்பத்தியாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? கேரளாவில், தனது சொந்த உற்பத்தி மையத்தை வைத்திருக்காத பெரும்பாலான பெரிய நகைக்கடையாளர்கள், இந்தப் பணியை திருச்சூரைச் சுற்றிலும் 40,000 கைவினைஞர்களுடன் இயங்குகின்ற 3000 சிறிய கடைகளுக்கு அவுட்சோர்ஸிங் செய்து பெறுகின்றனர்.

கேரள மாநிலத்தில் பெருமளவு வருவாய் திருச்சூர் தங்கச் சந்தையில் இருந்தே கிடைக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்திய தங்க உற்பத்தியில் மையக்கேந்திரமாகவும் இத்துறையின் முக்கிய இடமாகவும் திருச்சூர் இருப்பதால் இந்தியாவின் தங்கச் சில்லரை விற்பனையாளர்கள் பெரும்பாலும் இந்நகரில் இருப்பதில் பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லை. தங்கம், இங்கு உள்ளூர் தொழில் முனைவோர்களை செல்வந்தர்களாக மாற்றியுள்ளது.

தொழில்முனைவு ஆர்வம்

18 ஆம் நூற்றாண்டில் திருச்சூரைத் தலைநகராக்கிய மன்னர் சக்தன் தம்புரான் திருச்சூர் மக்களிடம் தொழில்முனைவு சிந்தனையை விதைத்ததாக சொல்லப்படுகிறது. தொழில் நிறுவனங்களை திருச்சூரில் பெருமளவில் நிறுவ வியாபார அறிவுக்கூர்மைக்காக புகழ்பெற்ற பல சிரிய கிறிஸ்த்துவக் குடும்பங்களை வரவேற்றார். தேக்கு, மரச்சாமான்கள் மற்றும் தங்கம் ஆகியவை பொதுவாக அதிகமாக அமைக்கப்பட்ட வணிகங்களாகும். மற்ற வர்த்தகங்களும் விரிவாக்கம் மற்றும் புதிய நுட்பங்கள் புகுத்தப்பட்டாலும், எல்லாவற்றையும் விட தங்க வணிகம் மேலோங்கியது. இன்றும் பெரும்பாலான தங்க வணிகர்கள் தங்களது குடும்பத்தின் மூலத்தை தேட மன்னர் சக்தன் தம்புரான் அழைப்பை ஆய்வு செய்கின்றனர். ஆதாரப்பூர்வமாக இந்தியாவின் சில பெரிய தங்க நகை நிறுவனங்கள் திருச்சூரைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளன.

இது தொடர்பாக: வரலாற்றில் தங்கத்தின் வடிவம் எவ்வாறு உருவானது?

பட்டுச்சாலை

திருச்சூர் இந்தியாவின் தங்க வணிகத் தலைநகராவதற்கு இன்னொரு முக்கிய காரணம் , புகழ்பெற்ற சர்வதேச வர்த்தக பாதையான பட்டுச்சாலை வழியில் நிறுத்தமாக அமைந்து அவ்வணிகத்தில் பங்களிப்பு செய்ததே ஆகும். ரோமானிய மற்றும் அரபு வர்த்தகர்கள் திருச்சூருக்கு அருகிலுள்ள கொடுங்களூர் துறைமுகத்தில் தங்களது கடற்பயணத்தை நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பட்டுச்சாலை வணிகம் படிப்பபடியாக முடிவுக்கு வந்தாலும் கூட, தலைசிறந்த கைவினைஞர்களும் நகைக்கடைகளும் இன்றளவும் உள்ளன. கொடுங்களூரில் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் 100 நகைக்கடைகள் உள்ளன.

இது தொடர்பாக: தென்னிந்தியாவில் தங்கத்தின் முக்கியத்துவம்

அரசு நெருக்கடிகள்

1990 களுக்குப் பிறகு அரசின் கொள்கை மாற்றங்களால் ஒரு நெருக்கடி உருவானது. இதன் விளைவாக நகரில் நகைக்கடைகள் திடீரென அதிக அளவில் உருவானது.

  • தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் அமலாக்கம் (தங்க நகை வாங்குவது மற்றும் சொந்தமாக இருப்பு வைத்திருப்பதற்கு கட்டுப்பாடுகள்)
  • வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் 5 கிலோகிராம் வரை தங்கம் கொண்டு வர அனுமதி ( பிறகு அது 10 கிலோ கிராம் வரை உயர்த்தப்ப்பட்டது)
  • அன்னியச் செலாவணி பரிமாற்ற ஒழுங்குமுறைச் சட்டம் 1973 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கு முன் பொற்கொல்லர்களும், வர்த்தகர்களும் மட்டுமே இந்தத் துறையில் ஆதிக்கம் செலுத்தினர். கொள்கை மாற்றங்களுக்குப் பிறகு பல நடுத்தரக் குடும்பங்கள் புதிய நகைக்கடைகளைத் திறந்தன.

இன்றைய நிலை

திருச்சூரின் பரபரப்பான இடமான ஹை ரோட்டின் சாலையின் இரு புறங்களிலும் சிறு கடைகள் தங்க ஆபரணங்களை விற்பனை செய்கின்றன. இந்தச் சாலை உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் மிகவும் பிரபலமானதாகும். தங்க நகைகள் பேரம் பேசி வாங்க சிறந்த இடமாகும். நெடுஞ்சாலைகள், கட்டிடங்கள், பொது போக்குவரத்து, மேம்பாலங்கள், என நகரெங்கும் பேனர்கள் போஸ்டர்கள் பஸ்கள் சுவர் விளம்பரங்கள் எல்லாவற்றிலும் தற்போதைய மற்றும் திறக்கப்படவிருக்கும் தங்க நகைக்கடைகள் பற்றிய விளம்பரங்கள் குவிந்துள்ளன.

கேரளாவின் மற்ற நகரங்களைப் போலவே தோற்றமளித்தாலும் திருச்சூர் அதன் தங்க நாட்டத்தால் தனித்து நிற்கிறது. திருச்சூர் நாட்டின் முன்னணி தங்க சில்லறை வர்த்தக மையமாக இருப்பதால் ‘இந்தியாவின் தங்கத் தலைநகரம்’ என்று மிகச் சரியாகவே அழைக்கப்படுகிறது.

இது தொடர்பாக:உலகின் தங்க நகரங்கள்