Published: 03 அக் 2018

தங்கத்தின் முக்கியத்துவம் தொடர்ந்து வளர்வதற்கான காரணங்கள்

Buying gold for several reasons includes, as a gold jewellery, investment option and much more

இந்தியாவில் தங்கமானது, பெருமளவில் பொருளாதார, அழகியல், கலாசார மற்றும் மதம் தொடர்பிலான மதிப்பீடுகளுடன் ஒரு தன்னிகரற்ற அந்தஸ்தைக் கொண்டுள்ளது. ஆனால், பல்வேறு கலாசார மற்றும் பொருளாதார மாற்றங்கள், கடந்த காலத்தில் தங்கம் மீதான கண்ணோட்டத்தை, அதையடுத்து, அதற்கான தேவை மற்றும் விலையை பாதித்தது. இந்தக் காரணிகளையும், இவை உங்களை எவ்விதமாக பாதிக்கிறது என்பதையும் இனி பார்ப்போம்.

  1. தலையெடுக்கும் சந்தைகள்

    கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் அதிவேக வளர்ச்சியை அடைந்த்தால், பலவகை முதலீட்டாளர்கள், தங்களின் முதலீடுகளில் தங்கமும் இடம்பெற்றிருக்குமாறு பார்த்துக்கொள்கிறார்கள்.

    கடந்த 10 ஆண்டுகளில்2 400% விலை உயர்ந்த போதிலும், இந்தியாவில் தங்கத்திற்கான தேவை 25% வளர்ச்சியுடன் சராசரியாக 840 டன்கள்1 என்ற அளவில் உள்ளன.

    இந்த காலகட்டத்தில் தங்க இறக்குமதியும் மிக அதிகம். 2017 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா 562.7 டன் தங்கத்தை இறக்குமதி செய்தது. 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 12% அதிகமாகும்.

    தொடர்புடையது: Where does gold in India come from?

    இந்தியர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான புகலிடமாகவும், எளிதில் அணுகக்கூடிய முதலீடாகவும் கருதுகின்றனர். ரூபாயின் மதிப்பு நிலையற்றதாக இருப்பதால் முதலீட்டாளர்களுக்கு தங்கம் ஒரு முதன்மையான வழியாகவும் உள்ளது.

  2. தங்க-பின்னணி கொண்ட ஈடி.எஃப்எஸ்

    பரிமாற்றம் செய்து கொள்ளக் கூடிய தயாரிப்புகளின் வருகை தங்க முதலீடுகளுக்கு ஒரு வசதியான அடுக்கை அளித்துள்ளது.

    முதலீட்டாளர்கள், தங்கத்தை டீமெட்டீரியலைஸ்டு வடிவத்தில் தங்களின் சாதாரண டீமேட் கணக்கின் மூலம் வாங்க முடியும்.

    அது மொத்த விலையைக் குறைவாக்குவதுடன், உரிமை பாத்தியத்திற்கான பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. இதில் செய்கூலி கிடையாது; ஏற்றப்பட்ட ப்ரீமியம் கட்டணங்கள் கிடையாது என்பதுடன், இதற்கு தனித்துவமான பெட்டகங்கள் அல்லது வங்கிப் பெட்டகங்களுக்கு அவசியமும் இல்லை.

    ஈடி.எஃப்எஸ் எளிதில் பணமாக்கக்கூடிய தன்மை மற்றும் எளிதில் அணுகக்கூடியதாகவும் உள்ளது. விலை மற்றும் இலக்கை கண்காணிப்பதை ஆன்லைன் தளங்கள் எளிமையாக்குகின்றன. ஒரு பொத்தானை சொடுக்குவதன் மூலம் நீங்கள் பரிவர்த்தனையை உடனடியாக செய்ய முடியும்.

    தொடர்புடையவை: The Beginners Guide to Investing in Gold ETFs
  3. 2008-2009 நிதி நெருக்கடி

    2009 மந்தநிலையினைத் தொடர்ந்து முதலீட்டாளர்களிடம் ஏற்பட்ட அபாயம் மற்றும் அபாய மேலாண்மை தொடர்பான மனப்பாங்கு மாற்றத்தால் தங்கம் பலனடைந்த்து. கிழக்கில் புதிய சந்தைகள் தோன்றின மற்றும் பழைய சந்தைகள், திறன் மிக்க சொத்து ஒதுக்கீட்டின் மீது சிறந்த கண்ணோட்டத்துடன் மீண்டும் தலைத்தூக்கின. வீழ்ச்சிக்குப் பிறகு, இதர சொத்துக்கள் ஆமை வேகத்தில் பழைய நிலைக்குத் திரும்ப, தங்கமோ ஆண்டு இறுதியில் 24% கூடியது.

    பொருளாதார விரிவாக்கம் மற்றும் சுருக்கம் ஆகிய காலங்களில் தங்கம் ஒரு பயனுள்ள டைவர்ஸிஃபையர் ஆக செயல்படுகிறது. தங்கமானது, பணவீக்கத்திற்கு எதிராக ஒரு காப்புத்தடையாக செயல்படுவதுடன், இதர சொத்துக்களில் உள்ளதை விட தங்கத்தில் எதிர்மறை ஒட்டுறவு குறைவாக இருப்பதால், போர்ட்ஃபோலியோவை அகண்டதாக்க தங்கத்திற்கு பங்கீடு செய்வது சிறந்த வழியாகும். போர்ட்ஃபோலியோ நஷ்ட்த்தை குறைப்பதுடன், நேர்மறையான ஆதாயங்கள் அளிப்பதன் மூலம் தங்கமானது, குறிப்பாக, நெருக்கடி காலங்களில் திறம் மிகுந்ததாக உள்ளது.

    பண மதிப்பு நிலையற்று இருக்கும் காலங்களில் மட்டுமின்றி, தங்கத்திற்கு செய்யப்படும் ஒதுக்கீடுகள், பணவீக்கத்தை வென்றெடுக்க போர்ட்ஃபோலியோகளுக்கு உதவவும் செய்கிறது. பணவீக்க அளவு 3% ஐ மீறிய காலங்களில், தங்கமானது சராசரியாக 14% வருவாயைக் கொடுத்திருக்கிறது.

    தொடர்புடையவை: How can gold be your friend during financial crises?

    தங்கமானது உலகம் முழுவதும் – மதிப்பு மிக்க நகைகள், உயர் தர மின்னணுச் சாதன்ங்களில் ஒரு அங்கம், முதலீட்டிற்கு பாதுகாப்பான புகலிடம், ஒரு போர்ட்ஃபோலியோ டைவர்சிஃபையர், இன்னப்பிற – நோக்கங்களுக்காக வாங்கப்படுகிறது. இந்த மென்தகடாகக்கூடிய உலோகம் பல்வேறு நோக்கங்கள் மற்றும் தேவைகளுக்கு பாந்தமாக பொருந்துகிறது. நவீன பொருளாதாரத்தில், தங்கத்தின் பளபளப்பைப் போல அதன் முக்கியத்துவமும் தொடர்ந்து கூடிக்கொண்டே போகும்.