Published: 17 ஆக 2018

கேரளாவின் தங்க நகை வடிவமைப்புகள்

கேரளர்களின் தன்னிகரற்ற தங்கத்தின் மீதான காதலுக்கு அறிமுகம் தேவையில்லை. அது சமய திருவிழாக்களாக இருந்தாலும், பண்டிகைகள் அல்லது திருமணங்களாக இருந்தாலும் தங்க நகைகள் பெரும்பாலும் அவர்களுடைய எல்லா சிறப்பு நிகழ்ச்சிகளிலும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும்.

‘கடவுளின் சொந்த நாடு’ என்றும் அறியப்படும் கேரளா அசாதாரண கைவினைக்கலையைக் காட்டும் சில திகைப்பூட்டும் தங்க நகை வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது. மேலும் சமீபத்திய தங்க நகை வடிவமைப்புகள் அந்த பாரம்பரிய பாணிக்கு ஒரு புத்துணர்ச்சியான புதிய தோற்றத்தைத் தருகின்றன.

கேரளாவின் சில உன்னத பாரம்பரிய தங்க நகை வடிவமைப்புக்களைப் பற்றிப் பார்க்கலாம்:

  • காசுமாலா

    ‘காசு’ என்பதற்கு பணம் என்றும் மேலும் ‘மாலா’ என்பதற்கு நெக்லஸ் என்றும் பொருள். கேரள இந்துப் பெண்களுக்கிடையே பிரபலமான காசு மாலாவில் கழுத்தணியை உருவாக்க இணைக்கப்பட்ட தங்க நாணயங்களைக் கொண்டுள்ளது. இந்த நாணயங்களில் லக்ஷ்மி தேவியின் உருவப் படங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்து பாரம்பரியத்தில், லக்ஷ்மி தேவி செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாக நம்பப்படுகிறார்.

  • கரிமணி மாலா

    வட இந்திய மங்களசூத்ராவை ஒத்திருக்கும் மாங்கல்யம், மற்றும் தங்க மணிகளால் செய்யப்பட்ட கரிமணி மாலா திருமணமானப் பெண்களால் அணியப்படுகிறது.

    மரியாதை: சிஎஸ் ஜூவல்லர்ஸ்
    Related:What makes Kerala a Gold Lover's delight
  • முல்லமொட்டு மாலா

    முல்லமொட்டு மாலா அல்லது ‘மல்லிகை மொட்டு நெக்லஸ்’ கேரள மணப்பெண்களின் அணிகலன்களில் மற்றுமாரு முக்கியமான நகை ஆகும். இதில் தங்கத்தால் செய்யப்பட்ட பல மல்லிகை மொட்டுக்கள் ஒன்றாகக் கோர்க்கப்பட்டுள்ளது. இது அழகான மீனாக்காரி வேலைப்பாட்டையும் உள்ளடக்கியுள்ளது.

    மரியாதை: மலபார் கோல்ட்
  • மாங்கா மாலா

    கேரள மணப்பெண்களுக்கிடையே மற்றுமொரு பிரபலமான தங்க நகையான மாங்கா மாலா பச்சைநிற மாங்காய் வடிவப் பதக்கங்களால் செய்யப்பட்ட தங்க நெக்லஸ் ஆகும்.

    மரியாதை: எஸ்விடிஎம் ஜூவல்ஸ்
    மரியாதை: அன்னை ஜூவல்லர்ஸ்
  • பதாகம்

    முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட பதாகம் ஒரு வட்ட வடிவ நிலா வடிவிலான பதக்கத்துடன் கூடிய நெக்லஸ் ஆகும். இது வைர மின்னி, சந்த்ர மின்னி, ஷகுந்தலா, மேனகா மற்றும் பல்வேறு வடிவமைப்புகளில் கிடைக்கிறது. பதாகம் வழக்கமாக கேரள மணப்பெண்ணின் திருமண நகைகளில் முதல் அடுக்கை உருவாக்கும்.

  • கொலுசு

    சிலம்பு என்று பொதுவாக அழைக்கப்படும் கொலுசு கேரளப் பெண்களால் கணுக்காலில் அணியப்படும் ஒரு தங்க ஆபரணமாகும். இது எல்லா சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களிலும் அணியப்படுகிறது.

    மரியாதை: மலபார் கோல்ட்
    மரியாதை: மலபார் கோல்ட்
  • ஜிமிக்கி

    சிறிய மணிகள் தொங்கும் தங்க முலாமிட்ட ஆபரணமான ஜிமிக்கி ஒரு காதணி பாணியாகும், இது கேரள மணப்பெண்களிடையே மிகவும் பிரபலமானது.

  • பூத்தாலி

    இயற்கையின் வடிவங்களால் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட பூத்தாலி நுணுக்கமாக செதுக்கப்பட்ட நெக்லஸ் ஆகும். பூத்தாலியில் மலர் மற்றும் இலை வடிவிலான அழகிய வசீகர வடிவங்கள் தங்கத்தில் செய்யப்படுகின்றன.

  • அஷ்ட லக்ஷ்மி வளா

    தங்கத்தால் செய்யப்பட்ட இந்த வளையல்கள் லக்ஷ்மி தேவியின் எட்டு அவதாரங்களைக் குறிக்கின்றன. அஷ்ட லக்ஷ்மி வளா அணிபவருக்கு ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.

    மரியாதை: கொல்லம் சுப்ரீம் ஆன்லைன்

கேரளாவின் தங்க நகைகள் சிறந்த கலைத் திறனை மட்டும் வெளிப்படுத்தவில்லை, மேலும் இது அந்த மாநிலத்தின் துடிப்பான மற்றும் ஒப்பற்ற பாரம்பரிய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பும் ஆகும்.

Source1, Source2, Source3, Source4