Published: 04 அக் 2018

ஓய்வு பெற்ற பிறகு தங்கத்தில் முதலீடு செய்யும் வழிகள்

Gold as an investment - Perfect retirement option

நீங்கள் சமீபத்தில் ஓய்வு பெற்று இனிமேல் வருமானத்திற்கான ஆதாரம் இல்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பவராக இருந்தால், உங்கள் பொன்னான எதிர்காலத்தைப் பொருளாதார ரீதியில் பாதுகாப்பானதாக அமைத்துக்கொள்ள ஒரு முதலீட்டுத் தேர்வாக தங்கத்தை நீங்கள் பரிசீலிக்கலாம்.

  1. தங்கத்தை பணமாக்கும் திட்டம்

    நீங்கள் பல ஆண்டுகளாக பண்டிகைகள், குடும்பக் கொண்டாட்டங்கள், பரிசுகள் மற்றும் கொள்முதல்களில் நீங்கள் சேர்த்து வைத்த பயன்படுத்தாத தங்கம் உங்கள் உடைமைகளில் பெருமளவு இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கிறது. இங்கே அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

    தங்கப் பணமாக்கும் திட்டம் (Gold Monetisation Scheme) (ஜிஎம்எஸ்) உங்களை திட வடிவத் தங்கமான தங்கக் கட்டிகள், நாணயங்கள் அல்லது நகைகள் போன்றவற்றை தங்க சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்ய அனுமதிப்பதன் மூலம், நீங்கள் வைத்திருக்கும் தங்கத்தை பணமீட்டும் சொத்தாக மாற்றுவதற்காக 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

    ஜிஎம்எஸ் இல் முதலீடு செய்வது நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் தங்கத்தைப் பயன்படுத்தி வழக்கமான வட்டியை ஈட்டும் ஒரு வழியாகும். தற்சமயம், உங்கள் தங்கத்தை வங்கியில் பாதுகாப்புப் பெட்டகத்தில் பத்திரப்படுத்த பணம் செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் வங்கியின் ஜிஎம்எஸ் கணக்கில் தங்கத்தை செலுத்த வேண்டியது தான், இதிலிருந்து நீங்கள் வட்டியை ஈட்டலாம்.

    இந்தக் கணக்கில் நீங்கள் ஒன்று முதல் 15 வருடங்களுக்கு இடையிலான காலத்திற்கு தங்கத்தை வைத்திருக்கலாம். கணக்கை பராமரிக்க விரும்பும் உங்கள் நோக்கத்தைப் பொறுத்து வட்டி விகிதங்கள் 0.5% முதல் 2.5% வரை இருக்கும், எவ்வளவு நீண்ட காலம் நீங்கள் கணக்கைப் பராமரிக்கிறீர்களோ அவ்வளவு அதிக வட்டியைப் பெறலாம். மேலும் நீங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் எந்த விதமான வரியும் செலுத்த வேண்டியதில்லை.

    இதில் தனித்தன்மையான ஒரு சிறப்பம்சம் என்னவெனில் வங்கிகள் உங்களுக்கு வட்டியை தங்கத்தின் வடிவத்தில் வழங்குகின்றன. எனவே, வட்டி ஒவ்வொரு வருடமும் 2.5% ஆக இருந்தால், நீங்கள் ஜிஎம்எஸ் கணக்கில் சேமித்து வைத்திருக்கும் 100 கிராம் தங்கத்திற்கு 2.5 கிராம் தங்கத்தைப் பெறுவீர்கள்.

    தங்க சேமிப்புக் கணக்கைத் தொடங்க நீங்கள் மிகச் சிறிய அளவாக 30 கிராம் தங்கத்தைக் கூட டெபாசிட் செய்யலாம். அதன் பிறகு உங்கள் தங்கம் வங்கியால் பத்திரமாகப் பராமரிக்கப்படும்.

    இது தொடர்பாக: தங்கத்தின் விலையில் மதிப்பேற்றம் உங்களை நிதி ரீதியாக பாதுகாப்பாக வைக்கும்.
  2. தங்க ஈடிஎஃப்

    பங்கு சந்தையில் முதலீடு செய்வதில் உள்ள சம்பாதிக்கும் வாய்ப்பைப் பற்றி நாம் கேள்விப்படும் அதே சமயத்தில், இன்றைய நாட்களில், தங்கம் வாங்குதல் திட வடிவத்தில் மட்டுமல்லாமல் டிஜிட்டல் வடிவத்திலும் வாங்க முடியும். தங்க ஈடிஎஃப் கள் (வர்த்தகப் பரிமாற்ற நிதிகள்) (Exchange Traded Funds) உங்களை இணையத்தில் தங்கத்தில் முதலீடு செய்ய அனுமதிக்கிறது.

    தங்க ஈடிஎஃப் என்பது வர்த்தகப் பரிமாற்ற நிதியாகும், அது உள்நாட்டு திட வடிவத் தங்கத்தின் விலையை கண்காணிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது

    தங்க ஈடிஎஃப் என்பது காகித அல்லது உருவமற்ற வடிவத்தில் இருக்கும் திட வடிவத் தங்கத்தைக் குறித்துக் காட்டும் அலகுகள் ஆகும். ஒரு தங்க ஈடிஎஃப் அலகு என்பது 1 கிராம் தங்கத்திற்கு சமமானது மேலும் அது மிகத் தூய்மையான திட வடிவத் தங்கத்தை பின்னணியில் கொண்டுள்ளது.

    நீங்கள் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வதைப் போலவே தங்க ஈடிஎஃப் களையும் வாங்கி விற்கலாம். உண்மையில் நீங்கள் தங்க ஈடிஎஃப் களை திரும்பப் பெறும் போது திட வடிவத் தங்கத்தைப் பெற மாட்டீர்கள் ஆனால் அதற்கு சமமான பணத்தைப் பெறுவீர்கள். தங்க ஈடிஎஃப் களுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது மேலும் இதில் எந்த விதமான செய்கூலியோ அல்லது முனைமக் கட்டணங்களோ கிடையாது என்பது சிறந்த பயனாகும்.

    மேற்கண்ட எல்லா காரணங்களாலும் அவை பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறந்த தேர்வை உருவாக்குவதுடன் இதை திட்டமிடப்பட்ட முதலீட்டுத் திட்டங்களின் (Systematic Investment Plans - SIPs) வழியாகத் தொடங்கலாம், இதில் பெரிய தொகையை ஒட்டு மொத்தமாக செலுத்துவதைக் காட்டிலும் வழக்கமான இடைவெளிகளில் சிறிய முதலீடுகள் தேவைப்படுகிறது.

    தங்க ஈடிஎஃப் களில் முதலீட்டைத் தொடங்குவதற்கு நீங்கள் ஒரு டீமேட் கணக்கைத் தொடங்க வேண்டும், அதன் பிறகு நீங்கள் தங்கம் வாங்க விரும்பும் தரகர் அல்லது வங்கியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் முடிவு செய்த பிறகு முதலீடு செய்ய விரும்பும் தங்க ஈடிஎஃப் மற்றும் நீங்கள் வாங்க விரும்பும் அலகுகளின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து, வர்த்தக தளத்தின் வழியாக எளிமையாக ஆர்டர் செய்யலாம்.

    இது தொடர்பாக

மேலும் பல தங்க முதலீட்டுத் தேர்வுகள் மற்றும் தங்கத்தின் பசுமை மாறாத பொருளாதார, சமூக, உணர்வுபூர்வமான மற்றும் அழகியல் மதிப்புகளைப் பற்றித் தெரிந்துக் கொள்ள நீங்கள் விரும்பினால், 2018 ஆம் ஆண்டிற்கான தங்க முதலீட்டுத் தேர்வுகளைப் பற்றிப் படியுங்கள்.