Published: 30 அக் 2018

தங்க இடிஎஃப்கள் முதலீட்டாளர்களை எவ்வாறு ஊக்குவிக்கின்றன?

தங்கத்தின் மீதான இந்தியாவின் காதல் எப்போதுமே இரகசியமாக இருந்ததில்லை. இந்தியக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களின் முக்கியமான அங்கமாக மட்டுமல்லாமல் இந்த கவர்ச்சிகரமான உலோகமானது பல்வேறு ஆண்டுகளாக மிகவும் நம்பிகைக்குரிய முதலீட்டு சாதனமாகவும் உள்ளது. தங்க நகைகள், கட்டிகள் மற்றும் நாணயங்கள்தான் தங்க முதலீட்டுக்கான முக்கியமான ஆதாரங்களாக முன்பு இருந்தன. 2003ஆம் அண்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து தங்க இடிஎஃப்கள் புகழ்பெற்று வருகின்றன.

தங்க இடிஎஃப்கள் (பரிமாற்ற வர்த்தக நிதியம்) இயல் தங்கத்தின் ஆதரவு பெற்றவை. இந்த நிதி மூலதனங்கள் பட்டியலிடப்பட்டு தேசிய பங்குச் சந்தையிலும்(NSE)  மும்பை பங்குச் சந்தையிலும் (BSE),  வர்த்தகம் செய்யப்படுகின்றன. எனவே அவற்றின் விலை நகர்வுகளையும் ஒட்டுமொத்த திறனையும் நீங்கள் எளிதில் பின்தொடர முடியும்.  இருப்பினும் தங்க இடிஎஃப்பின் ஒவ்வொரு அலகுக்கும் 99.5% pure சுத்த இயல் தங்கத்தின் பின்புலம் உள்ளதால், உங்களது ஒட்டுமொத்த மூலதனமும் நியாயமானது என்று நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

மிகவும் பாதுகாப்பான மற்றும் பத்திரமான மூலதனம்

கடந்த 15 ஆண்டுகளில், இந்தியாவில் தங்க மூலதன பரப்பானது மிகவும் விரைவாக வளர்ந்திருக்கிறது. பல்வேறு புதிய மற்றும் இளம் முதலீட்டாளர்களை இது கவர்ந்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்ய இயலாத பலர் தற்போது முதலீடு செய்து தங்கள் போர்ட்ஃபோலியோவை விஸ்தரிக்கலாம். இந்தியர்கள் தங்க இடிஎஃப்களை மிகவும் அழகிய செயல்தந்திர உள்ளடக்கம் கொண்டவையாக காணத் தொடங்கிவிட்டார்கள். தங்க இடிஎஃப்கள் வர்த்தகம் செய்வதற்கு எளிதானவை மட்டுமல்ல, சேர்த்து வைப்பதற்கான கவலை மற்றும் திருட்டு உட்பட்ட அச்சங்களையும் அவை நீக்குகின்றன. இயல் தங்கத்துடன் இத்தகைய அச்சங்கள் ஏற்படும்.

உங்களது முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் தங்க இடிஎஃப்களை சேர்ப்பது உங்களது செல்வத்தை பெருக்க உதவும் பெரிய வழி. ரிஸ்க் எடுக்கும் சிரமத்தையும் குறைக்கும். உங்கள் போர்ட்ஃபோலியோவில் உள்ள மற்ற சொத்துக்கள் நிலையற்ற தன்மையை அளிக்கும். எடுத்துக்காட்டாக, டாலர் மிகவும் பலவீனமானால் தங்கத்தின் மதிப்பு உயரும். டாலர் வீழ்ச்சியடையும்போது உங்கள் போர்ட்ஃபோலியோ பலவீனமாக இருந்தால், அந்த பலவீனத்தை சமாளிக்க தங்க இடிஎஃப்கள் உதவும். மற்றொரு புறம், டாலரின் வளர்ச்சியால் உங்கள் போர்ட்ஃபோலியோ நன்மையடைந்தால், உங்கள் தங்க இடிஎஃப்களை ஸ்திரத்தன்மைக்காக நீங்கள் எளிதில் விற்கலாம்.

சில்லறை முதலீட்டாளர்களைக் கவர்தல்

பெரிய மற்றும் நீரோட்டமான சந்தையாக இருப்பதால், சிறிய சில்லறை முதலீட்டாளர்கள் தங்கத்தில் சந்தை மூலம் முதலீடு செய்வதற்கான கதவினை தங்க இடிஎஃப்கள் திறந்துவிட்டுள்ளன. முன்னர் இது பெரிய சொகுசான மூலதனக்காரர்களுக்காக திறந்துவிடப்பட்டிருந்தது. அவர்களுக்கு சந்தை நகர்வுகள் குறித்த போதுமான அறிவும் அதனை எளிதில் அணுகும் வசதியும் இருந்தது. ஆனால் தற்போது ஒவ்வொரு இந்தியரும் தங்கத்தில் சிறிய அளவு முதலீடு செய்யலாம், அதே சமயம் அது அளிக்கும் இலகுத்தன்மையிலிருந்தும் பயன் பெறலாம்.

தொடர்புடையது: தங்கத்தில் முதலீடு செய்வதற்கான ஆரம்பகால வழிகாட்டி

ஓய்வு பெறுபவர்களுக்கான பெரிய முதலீட்டு விருப்பத்தேர்வு

தற்காலங்களில் தங்க இடிஎஃப்கள் பல்வேறு ஓய்வுக்கால கணக்குகளில் வைத்துக்கொள்ளவும் பயன்படுகின்றன. தங்களது ஓய்வுக்காலத்திற்காக பல்வேறு நிதி பொருட்களில் முதலீடு செய்து சேமித்துவைக்கும் பல்வேறு நீண்ட கால முதலீட்டாளர்களும் தங்கள் போர்ட்ஃபோலியோக்களை விஸ்தரிக்கவும் தங்கள் ஓய்வுக்காலத்திற்கு நிதி தொகுப்பு சேர்க்கவும் இதனை பயன்படுத்திக்கொள்கின்றனர்.

தொடர்புடையது : ஓய்வுக்காலத்திற்கு பிறகு தங்கத்தில் முதலீடு செய்ய உதவும் வழிகள்

நிறுவன முதலீட்டாளர்களுக்கான செலவில்லாத போர்ட்ஃபோலியோ விஸ்தரிப்பாளர்

பல்வேறு நிறுவன முதலீட்டாளர்கள்- பென்சன் நிதியங்கள், சொத்து மேலாளர்கள், பரஸ்பர நிதியங்கள் மற்றும் அறக்கட்டளைகள் – தற்போது தங்க இடிஎஃப்களை தங்களது நிதி திட்டங்களில் இணைத்து வருகிறார்கள். இது தங்கத்தை ஒரு முகட்டாக, செல்வத்தைக் காப்பவராக, போர்ட்ஃபோலியோ விஸ்தரிப்பவராக பயன்படுத்துவதற்கான சிக்கனமான முறையாகும். தங்க இடிஎஃப்கள் மிகவும் சிக்கனமானவை. பெரிய அளவுகளில் முதலீடு செய்யவும் அவை மக்களுக்கு உதவுகின்றன.

தங்க இடிஎஃப்கள் எவ்வாறு பல்வேறு முதலீட்டாளர்களை ஆயத்தப்படுத்தியுள்ளன என்றும் புதிய முதலீட்டு சந்தர்ப்பத்தை எவ்வாறு அளிக்கின்றன என்றும் நீங்கள் தற்போது உணர்ந்து கொண்டுள்ளீர்கள். அவற்றின் பிரபல்யத்திற்கு பங்களித்துள்ள சில தங்க இடிஎஃப்களின் முக்கிய பலன்களை சற்று காண்போம்:

  • தங்க இடிஎஃப்களுடன், நீங்கள் 1 அலகு தங்கம் கூட வாங்கலாம். இது 1 கிராம் தங்கத்திற்கு சமம். இதற்கான மேலாண்மைக் கட்டணமும் ப்ரீமியம் தொகையும் மிகவும் குறைவு.
  • இந்த சொத்தினை மின்னணு வடிவில் வைத்திருப்பதால் இதனை எங்கு வேண்டுமானாலும் வைத்து வர்த்தகம் செய்யலாம். முற்றிலும் பாதுகாப்பானது, பத்திரமானது மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்டது.
  • நீங்கள் எங்கிருந்தாலும் சரியான நேரத்தில் உங்கள் அனைத்து தங்க முதலீடுகளையும் உங்களால் பின்தொடர முடியும்.
  • மிகவும் நீரோட்டமான சொத்தாக உள்ளதால், தங்க இடிஎஃப்கள் நிதி நெருக்கடி காலத்தில் மிகவும் உதவிகரமாக உள்ளன.

நீங்களும் தங்க இடிஎஃப்களில் முதலீடு செய்ய விரும்பினால், நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ஒரு வர்த்தக கணக்குடன் உள்ள டி டீமேட் கணக்கை துவங்க வேண்டியதுதான். பின்னர், நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தங்க இடிஎஃப்பை தேர்நதெடுக்கவும். உங்களது வங்கியின் வர்த்தக போர்டல் மூலமோ அல்லது உங்களது தரகர் மூலமோ அதனை வாங்கவும்.

இந்த நவநாகரிக நீடித்த முதலீட்டின் பல்வேறுவிதமான நலன்களை அறுவடை செய்ய நீங்கள் தயாராக உள்ளீர்களா?

தொடர்புடையது - தங்க இடிஎஃப்களை ஒரு தனித்துவமான முதலீட்டு மாதிரியாக மாற்றுபவை எவை?

கட்டுரையின் ஆதாரம்- gold.org அறிக்கை – தங்க சந்தையின் பிரைமர்- தங்கத்தின் பின்னணியில் உள்ள இடிஎஃப்கள் gold-backed ETFs