Published: 04 அக் 2018

உங்களின் பணி தோற்றத்தில் தங்கத்தை சேர்க்க நுட்பமான வழிகள்

Office Look by adding Gold

பொதுவாக பண்டிகைகள், குடும்ப உறவுமுறை சந்திப்புகள், திருமணங்கள் ஆகியவற்றின் போது, தங்க நகைகளை அணிந்துகொள்ளும் சிந்தனை எழுவது தவிர்க்க முடியாதது. இந்திய கொண்டாட்டங்களில் தங்க நகைகள் மிக முக்கிய அங்கமாக இருக்கின்ற அதே வேளையில், நவீன வடிவ நகைகள், அன்றாட ஆடைகளுக்கு நவநாகரிகத்தை கூட்டுவனவாக மாறியுள்ளன. தங்கத்தின் உதவியுடன் உங்களின் புரபஷனல் தோற்றத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான சில வழிகள் பின்வருமாறு:

ஒரு கார்பரேட் நிகழ்ச்சி அல்லது வணிகக் கலந்தாய்வு எனில்:

நீங்கள் மிகவும் புத்திக்கூர்மையானவராக தோற்றமளிக்கும் இலக்குடன் இருக்கும் போது, உங்கள் ஆடைக்கு, அதி நவீன, குறைவான ஆனால் கண்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய வகையில் நகையை ஜோடி சேருங்கள். நிறைய தங்க நகைகளால் அலங்கரித்துக்கொள்வதற்கு மாறாக, அனைத்திலும் சிறப்பான ஒரேயொரு தங்க நகையை ஆடைக்கு மகுடம் சேர்ப்பது போல் அணியுங்கள். உதாரணமாக, ஒரு ஸ்டேட்மெண்ட் நெக்லேஸ், நளினமான மற்றும் ஸ்டைலிஷான தோற்றத்தை உங்களுக்கு அளிப்பதை சுலபமாக்கும்.

Courtesy: Shopify

பணியிடத்தில் பண்டிகைக் கொண்டாட்டம் எனில்:

சாதாரண பணி நாட்களில் நீங்கள் அணிந்து செல்லாத கலை நயமிக்க தங்க நகைகளை அணிந்து செல்ல இது ஓர் சந்தர்ப்பமாகும். சேலை அல்லது குர்த்தா போன்ற உங்களின் இனஞ்சார்ந்த ஆடை அணிவீர்கள் எனில், அதற்கு மெருகூட்ட ஜிமிக்கி கம்மல் மற்றும் மிக நுணுக்கமாக செதுக்கிய தங்க வளையல்களை அணியலாம்.

ஒரு வேளை, நீங்கள் மேற்கத்திய பாணி ஆடைகள் அணிவீர்கள் எனில், அதற்கு அடுக்குகளாலான ஒரு தங்கக்கழுத்தணி மற்றும் அதற்குப் பொருத்தமான மெல்லிய தொங்கட்டான், உங்களின் பண்டிகைத் தோற்றத்திற்கு புதுப்பொலிவு தரும்.

Courtesy: Jaypore

ஒரு சாதாரண பணி நாள் எனில்:

அன்றாட பணி தோற்றத்தில் தங்கத்தின் மினுமினுப்பை கூட்ட, நீங்கள் சமகால மற்றும் ஆடம்பரமில்லாத தங்க நகை டிசைன்கள் மற்றும் பேட்டர்ன்களை முயற்சிக்கலாம். கிளாசிக் தங்க மூக்குத்தி, கம்மல், மேட் ஃபினிஷ் கோல்டு பேண்ட் மற்றும் பதக்கம் உள்ள நெக்லேஸ் உங்களை நவீனமானவராக மற்றும் கண்ணியமானவராக தோற்றமளிக்கச் செய்யும்.

கேசுவல் வெள்ளிக்கிழமைகளில்:

வெள்ளிக்கிழமைகள், அலுவலக பணியாளர்களுக்கு சவுகரியம் மற்றும் வசதியான நாள் என்றால் அது மிகையில்லாத நிஜம். உங்கள் ஆடையை மிகவும் எளிமையானதாக நுணுக்கமான டிசைன் உள்ளதாக தேர்ந்தெடுக்கலாம். ஒரு கேசுவல் தினத்தன்று பணிக்குச் செல்லும் போது மெல்லிய தங்க பிரேஸ்லெட், கிளாசிக் தங்க வளையங்கள் கோர்த்த தங்கச் செயின் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். குறைந்தபட்ச டிசைன் கொண்ட இத்தகைய தங்க நகை டிசைன்கள்

Courtesy: tobi.com

தங்க நகைகள், அனைத்து விதமான ஆடைகள் மற்றும் சூழ்நிலைகளுக்கும் பொருத்தமாக இருக்கும். உதாரணம்: டிரெண்டி, பாரம்பரியம், மினிமலிஸ்டிக், போல்டு, அதி நவீனம் மற்றும் இன்னும் பல. உங்களின் ஃபார்மல் ஆடைகளுடன் தங்கத்தை ஜோடி சேர்க்க இவை ஒரு சில வழிகள் மட்டுமே; நீங்கள் தாராளமாக ஆராய்ந்து பார்த்து, உங்களுக்கு பொருத்தமாகத் தோன்றுவதைத் தேர்ந்தெடுக்கலாம்.

தொடர்புடைய கட்டுரை: Unconventional gold jewellery options for the modern woman